ஒரு நண்பர்...
புது மாடல் ஆடி கார்கள்
நான்கு வாங்கினார்.
எதற்கய்யா இத்தனை கார்?
இவ்வளவு பெரிய கார்?
என்று கேட்டேன்..
சிரித்தார்.
படித்த இளைஞர்களை
டிரைவர்களாக நியமித்தார்.
அவர்கள் அணிய
சீருடை தொப்பியெல்லாம்
ஏற்பாடு செய்தார்.
எதற்கு இந்த ஆடம்பரம்
என்று கேட்டேன்..?
சிரித்தார்.
புதிதாக ஐஃபோன் X (10)
வாங்கினார்..
எதற்குங்க இது
என்றேன்.
சிரித்தார்.
சிகை அலங்காரம் செய்துகொள்ள
சென்னைக்கு விமானத்தில்
சென்று வந்தார்.
சென்னைக்கு ஏன்?
அதுவும் விமானத்தில்?
கேட்டேன்.
கேட்டார். சிரித்தார்..
நேரம் மிச்சம் என்றார்.
ஊரின் மையப்பகுதியில்
மிகப்பெரிய மாளிகை போன்ற வீடு.
வீட்டில் ஆளுயர அயல்நாட்டு நாய்.
நீண்டதொரு நீச்சல்குளம்.
வேலைக்கு வெள்ளையுடை
ஆட்கள்.
மூக்கின் மேல் விரல்வைத்து
இது போன்ற பெரிய வீடு
அவசியமா என்று கேட்டேன்..?
புன்னகைத்தார்.
மகனையும் மகளையும்
ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி
படிக்கவைத்தார்.
இங்கு இல்லாத
கல்வி நிலையங்களா
என்று கேட்டேன்..?
எளக்காரமாகப்பார்த்தார்.
அடிக்கடி தடபுடல் விருந்துகள்
ஆடம்பர ஓட்டல்களில்.
இதெல்லாம் வீண் செலவுதானே
என்று கேட்டேன்..?
வித்தியாசமாகசிரித்தார்.
சிறு உடல் நலக்குறைவு என்றாலும்
சீக்கிரம் சிங்கப்பூர் சென்று
மருத்துவம் பார்த்தார்.
நான் கேட்பதற்கு முன்பு அவரே
இவையெல்லாம் எதற்கு தெரியுமா?
இவையெல்லாம்
*அந்தஸ்தின் அடையாளங்கள்.*
இவற்றில் ...
ஒன்று குறைந்தால்கூட
நண்பர்கள் என்னை
ஏறெடுத்தும்
பார்க்கமாட்டார்கள்.
என்னை "ஹை லெவல்"
என்று அண்ணாந்து
பார்க்க முடியாவிட்டாலும்
"ஐ லெவல்"என்று சமமாக
பார்த்தாலும் போதும்.
அதற்காகத்தான்
இவையெல்லாம் என்று
விளக்கமாகச் சொன்னார்.
நானும் என் வலையில் வசமாக
சிக்கிவிட்டார் என நினைத்து
சரியென்று சம்மதித்தேன்.
எல்ஐசி சமீபத்தில்
அறிமுகப்படித்தியுள்ள
"அந்தஸ்தின் அடையாளம்"
பாலிசியான
"ஜீவன் ஷிரோமணி" யில்
"பத்துகோடி..இருபது கோடி" காப்புத்தொகைக்கு
பாலிசி எடுத்துள்ள
பெருந்தலைகளின்
பெயரைச்சொன்னேன்.
என்னைப் பார்த்து
முன்னரே ஏன் வரவில்லை
என்ற பொய்க்கோபத்துடன்
சம்மதம்என்றார்.
இப்போது
ஜீவன் ஷிரோமணி பாலிசி
அந்தஸ்துப் பட்டியலில்
சேர்ந்து விட்டது.
1994 அறிமுகப்படுத்தப்பட்ட
"ஜீவன் ஶ்ரீ" VIP பாலிசி என்றால்
ஜீவன் ஷிரோமணி ஒரு
#Prestige பாலிசி.
19 சிறப்பம்சங்களை
உள்ளடக்கிய பாலிசியாம்.
விபத்துக்காப்பீடே தனியாக
ஒரு கோடியாம்.
ஒரு வருடம் மட்டும்
தவணைப்பணம் கட்டியிருந்தாலே
லோன், பெய்ட் அப்
சரண்டர் வசதி எல்லாம் உண்டாம்.
இந்த பாலிசிதாரர்களுக்கு
ஆயுள் முழுமைக்கும்
கிரெடிட் கார்ட்
வழங்குகிறார்களாம்.
மருத்துவப்பரிசோதனை யின்
முடிவு குறித்து கூடுதல் விளக்கம்
தேவைப்பட்டால் இரண்டாவது ஆலோசனையை எல்ஐசியே
இலவசமாக வழங்குகிறதாம்.
பெரிய பெரிய ஆள் கொல்லி
வியாதிகளின் மருத்துவச் செலவை
எதிர் கொள்ள இந்த மாலிசியில்
பணம் கிடைக்க
வகைசெய்யப்பட்டுள்ளதாம்.
கூடுதல் காப்புத்தையை
டெர்ம் இன்ஷ்யூரனஸ் ரைடர்
மூலம் குறைந்த பிரிமியத்தில்
பெற்றுக்கொள்ளலாமாம்.
பெய்ட் அப் பாலிசிக்கும்
வாழ்வுகாலப்பயன்
கிடைக்குமாம்.
வாழ்வுகாலப் பயன்
முதிர்வுகாலப்பயன்
இறப்பு உரிம்ப் பயன் களை
தவணைகளில்
பெற்றுக்கொள்ளவும்
வாய்ப்பு உள்ளதாம்.
இன்னும் பலசிறப்பு
வசதிகள் இப்பாலிசியில்
இருக்கிறதாம்.
அந்தஸ்தில் உயர்ந்தவர்களை
சந்திக்க களப்பணியாளர்களுக்கு
ஒரு நல்ல வாய்ப்பு.
திட்டத்தின் சிறப்பு அம்சங்களை
அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.
விளக்கிக்கூற நல்ல வாய்ப்பு.
பல சிறப்பம்சங்களைத்
தாங்கிவரும் இந்த பாலிசி
விற்பனைக்கு முகவர்கள்
முயற்சிக்கவேண்டும்
முகவரின் வணிகத்திறனை
வெளிப்படுத்தப்போகும்
வெரி வெரி இம்பார்ட்டண்ட்
பாலிசி தான் இந்த புதிய
ஜீவன் ஷிரோமணி பாலிசி.
தயக்கம் இன்னும் ஏன்?
No comments:
Post a Comment