Monday, 5 March 2018

துறைமுகம் தெரியும். கப்பல் எதுன்னு தெரியாது

துறைமுகத்தைக்காட்டலாம்.
கப்பலைக் காட்டக்கூடாது
•••••••••••••••••••••••••••••••••••••••

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு
முன் நடந்தது

எனக்கு நன்றாகத்தெரிந்த
ஒருகிளை.

கிளையின் தலைமைப்பொறுப்பில்
ஒரு முதுநிலைக்கிளை மேலாளர்.

அவர் மீது ஏகப்பட்ட
புகார்கள்.

அலுவலகத்திற்கு
ஒழுங்காக வருவதில்லை.

வெளியூரில் குடும்பம்.

அடிக்கடி அனுமதியின்றி
திடீர் பயணம் .

கார் வேறொரு ஊரில்
ஒரு ஒதுக்குப்புரத்தில்
அனாதையாய் நிற்கும்.

"நீ என்னைக் கண்டுக்காதே
நானும் உன்னை
கண்டுக்கமாட்டேன்"
என்ற ஒப்பந்தத்தில்
சிலருடன் நல்ல நட்பு.

அதனால் அவர்கள் இவரை
காப்பாற்றி விடுவார்கள்.

சில முகவர்கள்
வாய்ப்பாளர்களை சந்திக்க
தங்களுடன் கூட்டிச்சென்றால்
வணிகத்தை வேண்டுமென்றே
ஏதேதொ கூறி முடிக்காமல்
திரும்பி வந்துவிடுவார்.

மறுநாள் தனியாகச்சென்று
வாடிக்கையாளரைச் சந்தித்து
வணிகத்தைப் பேசி முடித்து
பணத்தை வாங்கி வந்துவிடுவார்.

அழைத்துச் சென்ற
முகவரின் கணக்கில்
வணிகத்தை வரவு வைக்காமல்
அதேகிளையைச்சேர்ந்த
வேறு முகவர் அல்லது அவரது
ஊரில் உள்ள கிளையின்
முகவர் யாரிடமாவது
முன் பணத்தை  அலுவலகத்தில்
கட்டச்சொல்லிவிட்டு
அந்த முகவரது  கணக்கில்
புதிய வணிகத்தை
வரவுசெய்துவிடுவார்.

வாய்ப்பாளர் கொடுத்த
முன் பணத்தை அவர்
எடுத்துக்கொள்வார்.

இப்படியெல்லாம் செய்து
நிறைய வருமானம் பார்த்தார்.

இந்த நடவடிக்கையால்
பாதிக்கப்பட். முகவர்கள்
நிறைய இருந்தனர்.

கோட்ட நிர்வாகம்
முகவர்களது புகாரில் உள்ள
உண்மையை புரிந்து கொண்டு
அவரை இடமாற்றம் செய்ய
முடிவு செய்தது.

நிர்வாகமே ஒரு அலுவலரை
இடம் மாற்றம் செய்தால்
ஒரு மாத அடிப்படைச்சம்பளத்தை
ட்ரான்ஸ்பர் அலவன்சாக
அலுவலருக்கு வழங்கவேண்டும்.

வீட்டுச் சாமான்களை
எடுத்துச்செல்ல
அவருக்கு வண்டிச்சத்தமும்
வழங்கவேண்டும்.

எனவே அவருக்கு
இடமாறுதலுக்கான
உத்தரவு எதுவும் போடாமல்
எனது நெருங்கிய நண்பரை வணிகத்திற்கான
கிளை மேலாளராக கூடுதலாக பணியமர்த்தினார்கள்.

என் நண்பருக்கு
இந்த பொறுப்பில் வந்தமர
முழு மனசில்லை.

கோட்ட மேலாளரைப்பார்த்து
தன்னை வேறு கிளைக்கு
மாற்றமுடியுமா என்று கேட்டார்.

கோட்ட மேலாளர்
எனது நண்பரிடம்
“ கோட்ட நிர்வாகத்தைப்
பொறுத்தவரை நீங்கள் தான்
இந்த கிளைக்கு
கிளை மேலாளர்.

ஒரு மாத காலத்தில் பழைய
முதுநிலை மேலாளரை
மாற்றி விடுவோம் .

அதுவரை பொறுத்திருங்கள்"
என்று வேண்டிக்கொண்டார்.

நண்பரும்
பிரச்சினையின் ஆழத்தை
சரியாகப் புரிந்து கொண்டு
சம்மதம் தெரிவித்தார்.

பழையவருக்கு தன்னை
இடமாறுதல் செய்து விடுவார்கள்
என்பது தெளிவாகப் புரிந்து விட்டது.

நிர்வாகமே தன்னை மாற்றட்டும்.
அப்போது தான் தனக்கு
இட மாறுதலுக்குண்டான
பலன்கள் அனைத்தும்
கிடைக்கும் என்று இருந்தார்.

நிர்வாகமோ அவராகவே
மாறுதல் வேண்டி விருப்பக்கடிதம்
கொடுக்கட்டும்.
குடும்பம் இருக்கும் ஊருக்கே
மாறுதல் கொடுக்கலாம் என்றும் நினைத்தது.

ஆனால் அவர்
கடிதம் கொடுக்காமலே
டிமிக்கி கொடுத்து வந்தார்.

அலுவலகத்திற்கும் வரமாட்டார்.
விடுப்பும் எடுக்கவில்லை.
கிளைமேலாளர் அறையின்
சாவியையும் என் நண்பரிடம்
கொடுக்கவில்லை.

உதவிக்கிளைமேலாளருடன்
மட்டும் தொடர்பில் இருந்தார்.

முன்பு சொன்னதுபோல்
பழைய மேலாளர்
ஒரு வாய்ப்பாளரை அணுகி
பணத்தை வாங்கியபோது
ஒரு தற்காலிக ரசீது
கொடுத்திருந்தார்.

அந்த வணிகத்தை
அவரது கிளையின்
கணக்கில் சேர்க்காமல்
வேறு கிளையைச்சேர்ந்த
முகவர் ஒருவருக்கு விற்றிருந்திருக்கிறார்.

அந்த ரசீது எப்படியோ
என் நண்பர் கையில்
கிடைத்திருக்கிறது.

அதை பாதுகாத்து
வைத்துக்கொண்டார்
எனது நண்பர்.

தற்காலிக ரசீதின் மூலம்
வாங்கப்பட்ட பணம்
அந்த அலுவலகத்தில
செலுத்தப்படவில்லை.
வேறு அலுவலகத்தில்
செலுதரதப்பட்டிருக்கிறது.

இது பற்றி விளக்கமான
அறிக்கையை ஆதாரத்துடன்
கோட்ட அலுவலகத்திற்கு
என் நண்பர் அனுப்பிவைத்தார்.

பழைய மேலாளர்
தான் பணம் வாங்கிய
வாய்ப்பாளரைச்சந்தித்து
அசல் ரசீதை வாங்கி
அதை கேன்சல் செய்து
அலுவலகத்தில் கொடுத்து
சிக்கலை தீர்த்துக்கொள்ளலாம்
என்று எளிதாக நினைத்தார்.

ஆனால் ரசீதின் அசல்
என் நண்பரிடம் இருந்ததால்
பழைய மேலாளரால்
தான் நினைத்தபடி எதையும்
செய்யமுடிவில்லை.

இந்த பிரச்சினையில்
கோட்ட அலுவலகம்
கெடுபிடி காட்டியதும்
விருப்ப மாறுதலுக்கான
கடிதத்தை  பழைய மேலாளர்
அலுவலகத்தில் கொடுத்தார்.

குடும்பம் உள்ள ஊருக்கு
மாறுதலும் பெற்றுச்சென்றார்.

இதற்குப்பிறகு
என் நண்பர் முழுமையான
கிளை மேலாளராக
பணியமர்த்தப்பட்டார்.

முவர்களிடம் நெருக்கம் காட்டி
வாய்ப்பாளர்களைக்காண
போவோம் என்று என் நண்பர்
அழைத்திருக்கிறார்.

முகவர்கள்
ஆளை விட்டால் போதும்
என்று நினைத்து
ஓடத்தொடங்கினார்களாம்.

யாருமே வரமறுப்பதற்கான
காரணம் நண்பருக்கு
புரியவில்லை.

ஒரு முகவர் நண்பரிடம்
" சார்வாள்... ஒருவரிடம்
துறைமுகத்தைக் காட்டினாலும்
காட்டலாம். தப்பில்லை.

ஆனால் ஒருபோதும்
கப்பலை மட்டும்
காட்டவே கூடாது.

எனது வாடிக்கையாளரிடம்
மேலாளரை அழைத்துச்சென்றால்
அவரை வேறு ஒரு முகவரின்
வாடிக்கையாளராக
மாற்றி விடக்கூடிய ஆபத்து
நிறையவே இருந்த்து.

நீங்கள் எப்படி என்று
எனக்கோ மற்றமுகவர்களுக்கோ
எதுவும் தெரியாது.

ஆனால் எங்களது
பழைய அனுபவம்
இப்படி நடக்கச்சொல்கிறது.
பேசவும் சொல்கிறது"
என்று சொல்லியிருக்கிறார்.

என் நண்பர் தன்னுடைய
அணுகுமுறையையும்
நேர்மையையும்
முகவர்களிடம் நிலைநிறுத்த
மூன்று மாதங்கள் ஆயினவாம்.

அதற்குப்பிறகுதான் அவரை
முகவர்கள் முழுமையாக
நம்பத் தொடங்கினார்களாம்.

முழுமையாக நம்பிய பிறகுதான்
வணிகத்திற்கு என் நண்பரை
உடன் அழைத்துச்
சென்றிருக்கின்றனர்

முகவர்களுக்கும்
மேலாளர்களுக்கும் தான்
எத்தனை எத்தனை
பிரச்சினைகள்?

எப்படியெல்லாம்
பிரச்சினைகள்?

இவற்றையெல்லாம்
பொறுமையாகச்
சந்தித்தால்தான்
சவால்களை எல்லாம்
வெற்றிகரமாக சமாளித்து
பெருமை பெறமுடியும்.

No comments:

Post a Comment