Monday, 5 March 2018

போட்டி சரி...பொறாமை வேண்டாமே

நமது எல்ஐசி முகவர்கள்
நன்றாக ஓடியாடி
உழைக்கிறார்கள்.

வெற்றிபெறுகிறார்கள்.
உண்மைதான்.

இந்த முகவர் தொழிலும்
மற்ற தொழில்களில்
உள்ளது போலவே
போட்டி நிறைய உண்டு.

பொறாமையும் 
நிறையவே உண்டு.

பொறாமையால்
அடுத்த முகவரின்
காலை வாரிவிடும்
செயல்களும் குறைவின்றி  நடைபெற்றுக்கொண்டுதான்
இருக்கின்றன.

ஒரு முகவர்..

நண்பரின் பாலிசியை
வேறு ஒரு முகவர்
வாங்கிச்சென்றுவிட்டார்.

அந்தக்காலத்தில்
ஒரு லட்சம் ரூபாய்
காப்புத்தொகை.

வணிகத்தை
நழுவ விட்ட முகவர்
பாலிசி எடுத்த நண்பரை
பார்க்கிறார்.

விபத்துக்காப்புப் பலன்
என்று  ஒரு ரூபாய்
கூடுதலாக
வாங்கியிருப்பாரே
என்று கேட்கிறார்.

நண்பர்
ஆமாம் என்றவுடன்,
நீங்கள் என்மூலம்
சேர்ந்திருந்தால்
அதை தள்ளுபடி
செய்திருப்பேன் என்கிறார்.

(எப்படி என்றால் காப்புத்தொகை
தள்ளுபடி ஒரு ரூபாயும்
விபத்துக்காப்புக்கான
ஒரு ரூபாய் கூடுதல் தொகை சரியாகிப்போகிறதல்லவா..

இதைவைத்து விபத்துப்பலன்
இலவசம் என்று கூறுகிறார்.)

முதலாமவர்
காப்புத்தொகைக்கு
தள்ளுபடி கிடைக்கும்
என்ற உண்மையை
கூறவில்லை.

இரண்டாமவர்
இப்படிச்சொல்லி
முதலாமவர்
ஓர் ஏமாற்றுக்காரர் என்ற
முகமூடியை மாட்டி
அவருக்கு கெட்டபெயர்
வாங்கிக் கொடுத்து
மகிழ்ச்சியடைகிறார்.

வேறு முகவர்மூலம்
எடுக்கப்பட்ட பாலிசி
எண்டௌமெண்ட் பாலிசி
என்றால் மணிபேக் பாலிசி
எடுத்திருக்கலாமே என்பார்.

மணிபேக்கில்
முகவர் வருவாய் குறைவு.

அதனால் தான்
எண்டௌமெண்ட் பாலிசி
கொடுத்துள்ளார் என்பார்.

மணிபேக் பாலிசி
கொடுக்கப்பட்டிருந்தால்
அதில் முப்பது சதவிகிதம்
எண்டௌமெண்டைவிட
கூடுதல் பிரிமியம் என்பார்.

கூடுதல் பிரிமியத்தால்
கூடுதல் கமிஷன்
முகவருக்கு என்பார்.

இப்படிக்கூறி
அடுத்தவரின்
நற் பெயரைக்கெடுத்து
தானும் கெட்டுப்போவார்.

இன்னொருமுகவர் ...

ஒரு வாடிக்கையாளரிடம்
இன்னார் மூலம் எல்ஐசியில்
பாலிசி  எடுக்கிறீர்களே..

அவருக்கென்ன
பிள்ளையா குட்டியா?

அவர் யாருக்குச் சேர்த்த
வைக்கப்போகிறார்.

என்னைப்பாருங்கள்..
எனக்கு எட்டு குழந்தைகள்.

எனக்கு ஆதரவு அளித்தால்
என் குடும்பம் பயன் பெறும்
என்று கூறி மற்ற முகவரின்
வாடிக்கையாளர்களிடம்
வணிகத்தைக்கறந்து
வந்து விடுவார்.

இன்னொரு
புதிய இளம் முகவர்...

அவரது சித்தப்பாவும்
பலகாலமாக
நமது முகவர்தான்.

இவரது அப்பாவுக்கும்
சித்தப்பாவுக்கும்
நீண்டநாட்களாக
தீராப்பகை.

இளம் முகவர் ஒருநாள்
பஸ் பயணத்தின் போது
தனது சித்தப்பாவை
அதே பஸ்ஸில் பார்க்கிறார்.

"இன்று எப்படியும்
அந்த பெரிய பாலிசியை
"போட்" முதலாளிக்கு
போட்டுவிடவேண்டியது தான்.

வேறு யாரும் அவரிடம்
வாங்கமுடியாது" என்று
சித்தப்பாவுக்குக்  கேட்கும்படி
கத்திப்பேசுகிறார்.

தனது சித்தப்பாவுக்கு
கடுப்பேற்றுகிறார்.

மறுநாள் என்னைப்பார்த்த
அந்த மூத்த முகவர்
"ஐயா..எனக்கும்
என் அண்ணனுக்கும்
மனக்கசப்பு உள்ளது.

ஆனால் நான் எடுத்து
வளர்த்த அன்புக்குரிய
சின்னப்பையன் என்னை
கடுப்பேத்துவதற்காக
இப்படி யெல்லாம்
பேசி மகிழ்கிறான்.
அவனுக்கு நல்ல படியான
யோசனை கூறுங்கள்"
என வேண்டுகிறார்.

"என்னைப்பார்த்தும் எனது
வளர்ச்சியைப்பார்த்தும்
முகவராகியிருக்கிறான்.

நான் சேர்க்கும்
எல்ஐசி பாலிசிகள் அவனது
வணிகத்தைப்பாதிக்கலாம்
என்ற தவறான எண்ணத்தில்
என்னை ஒரு  எதிரியாகவே
பார்க்கிறான்"
என்று சொன்னார்.

வேறு ஒரு  முகவர்
ஒரு குறிப்பிட்ட
முகவரைக் குறிப்பிட்டு
"அந்த முகவர் மூலமாகவா
பாலிசி சேர்ந்தீர்கள்.

அவர் ராசியே
இல்லாத முகவராயிற்றே.

அவர் ஒரு எல்ஐசி
ஏஜெண்ட்தான்.

கூடவே எமனுக்கும்
அவர் சப் ஏஜெண்ட்
என்பது உங்களுக்கு
தெரியாதா?

அவர்மூலம்  பாலிசி
எடுத்தவர்களில் பலர்
கொஞ்ச நாட்களிலேயே  போய்ச்சேர்ந்துவிட்டார்களே"
என்று ஒரு புதுப்
புரளியைக்கிளப்பி
பீதியடையவைப்பார்கள்.

நாம் இப்படி பேசுகிறோமே..
நமது பாலிசிதாரர்களிடமும்
வேறு  முகவர்கள் நம்தைப்பற்றி
இப்படி சொல்வார்களே என்று நினைத்துப்பார்ப்பதில்லை.

வேறு ஒரு முகவர்....

ஒரு வாடிக்கையாளரின்
அனைத்து பாலிசிகளும்
தனக்கு மட்டுமே வரவேண்டும்
என்று நினைப்பார்..

வாடிக்கையாளருக்கு
பல முகவர்களைத்தெரியும்.

ஒவ்வொருவராலும்
அவருக்கு பயன் உண்டு.

இதனால் ஒவ்வொருவருக்கும்
சில பாலிசிகளை
அவ்வப்போது கொடுப்பார்.

என்னை விட்டுவிட்டு
வேறு ஒரு முகவருக்கும்
பாலிசி கொடுத்த
இவரது பாலிசிக்கு நான் ஏன்
சேவை நல்க வேண்டும் என
நினைத்ததால்  பாலிசி
பலனிழந்து போன கதையும்
நான் அறிவேன்.

இப்படி பல்வேறு
உள்குத்துக்களை
சமாளித்துத்தான்
முகவர் தொழிலில்
முன்னேற வேண்டியுள்ளது.

முன்னேறுவதற்கு
போட்டி தேவை..

ஆனால் ...
பொறாமை மட்டும்
தேவையில்லை.

பொறாமையால்
அவர்கள் அறியாமலேயே
தங்களுக்கும்,
தன்னை ஆதரித்து வளர்க்கும் வாடிக்கையாளர்களுக்கும்
தன்னை எப்போதும்
தாங்கிப்பிடிக்கும்
நிறுவனத்திற்கும்
கெடுதல் தான்
புரிகிறார்கள்.

முகவர் தொழில்
புனிதமான தொழில்
என்பதை நன்குணர்ந்து
அந்த புனிதத்தை
பேணிக் காத்திடல்
வேண்டும்.

இவையெல்லாம்
தவிர்க்கப்படவேண்டியவை.
சரிதானே நண்பர்களே.

No comments:

Post a Comment