Monday, 5 March 2018

வாடிக்கையாளர் பரவசம்  


வாடிக்கையாளர் பரவசம்  
••••••••••••••••••••••••••••••••••••

திருநெல்வேலியில்
நான் வணிக மேலாளர்.

எல்ஐசியின் செயல் இயக்குநர்
நிலையில் பணி நிறைவு
பெற்ற நெல்லை மைந்தர்
திரு V  J சிங் அவர்கள்
முதுநிலைக்கோட்ட மேலாளர்.

இவரிடமிருந்து நான்
கற்றுக்கொண்டவை
ஏராளம்.

செகந்திராபாத் கோட்டத்தின்
இன்றைய வணிகமேலாளர்
திரு சரவணரமேஷ்  அவர்கள்
சேலம் போட்டத்தில்
உதவி நிர்வாக அலுவலராக
இருந்தகாலம்.

திரு சிங் சார் சேலத்திற்கு
மாறுதலாகி வந்ததும்
சரவணரமேஷின் அறையில்
ஒன்றாகத்தங்கியிருக்கிறார்.

அங்கு சென்ற புதிதில்
ஒரு நாள்  காலையில்
காபி யோ டீயோ
அருந்த அருகிலிருந்த
டீக்கடை ஒன்றிற்கு
சேர்ந்து சென்றிருக்கின்றனர்.

மறு  நாள் திரு சிங் சார் மட்டும்
தனியாக அதே டீ க்கடைக்குச்
சென்றிருக்கிறார்.

இவர் ஏதும் சொல்வதற்கு
முன்னரே இவர்
தலையப்பார்த்ததும்
டீ மாஸ்டர் டீ போட்டு இவர்
அமர்ந்த மேஜைக்கு
அனுப்பி விட்டாராம்.

சார் அந்த மாஸ்டரிடம்
"நான் சொல்வதற்கு முன்பே
அனுப்பிவிட்டீர்களே..

எனக்கு சர்க்கரை ஏதும்
போடாமல் அல்லவா
டீ வேண்டும்" என்று
சொல்லியிருக்கிறார்.

அந்த டீ மாஸ்டர்
"ஐயா..நான் போட்டுள்ள டீ
சர்க்கரையில்லாத டீ தான்"
என்று கூறியிருக்கிறார்.

சாருக்கு ஒரே ஆச்சரியம்..
"உங்களுக்கு எப்படி
எனக்கு சர்க்கரை
இல்லாமல் வேண்டும்
என்பது  தெரியும்"
என்று கேட்டிருக்கிறார்.

"ஐயா நேற்று நீங்கள்
எல்ஐசி ஆபீசர் சாருடன்
வந்தபோது சர்க்கரையில்லாமல்
டீ கேட்டீர்கள்.

அதைவைத்துத்தான்
இன்று  உங்களைப்பார்த்தும்
நான் சர்க்கரை போடாமல்
டீ போட்டு உங்கள் மேஜைக்கு
அனுப்பிவைத்தேன்" என்றார்.

சார் இதற்கு முன் பல
பெரிய கடைகளுக்கு
டீ சாப்பிடச்
சென்றிருக்கிறார்.

எத்தனைமுறை
சர்க்கரை இல்லாமல்
டீ கொடுங்க என்று கேட்டாலும்
அங்கெல்லாம்
சார் சொல்வதைக்காதில்
வாங்காமலேயே
சர்க்கரை போடப்பட்ட
டீ தான கொடுத்திருக்கின்றனர்.

இப்படி ஒரே மாதிரி
அனுபவங்களைப்பார்த்திருந்த
சாருக்கு சிறிய டீக்கடையில்
நல்ல அதுவும் மாறுபட்ட
அனுபவம் கிடைத்திருக்கின்றது.

வாடிக்கையாளர் எதிர்பார்ப்பதை
தெரியப்படுத்துவதற்கு முன்னரே
அவருக்கு கிடைக்குமானால்
அந்த வாடிக்கையாளர் பெறும்
மகிழ்ச்சி நிலைதான்
"வாடிக்கையாளர் பரவசம்"
என்று கூறுவார்.

இதிலிருக்கின்ற செய்தி
மிகவும் பயனுள்ள செய்தி.

ஒவ்வொருவாடிக்கையாளரின்
தேவையையும் வசதியையும்
நன்கு தெரிந்துவைத்திருந்து
சரியான பொருளை
சரியான நேரத்தில்
சரியான முறையில் வழங்கினால்
வாடிக்கையாளர் பரவசத்தை
உறுதி செய்யலாம்.

முகவர்களானும்சரி,
ஊழியர்களானாலும் சரி,
அலுவலர்களானாலும் சரி ,
நிறுவனமானாலும் சரி...

வாடிக்கையாளர் தேவைகளை
அவர்களின் எதிர்பார்ப்புக்களை
அவர்கள் பற்றிய தகவல்களை
முன்கூட்டியேமுழுமையாகத்
தெரிந்துவைத்திருத்தல் நல்லது.

இதன் மூலம்
வாடிக்கையாளரைப்
பரவசப்படுத்துதலில்தான்
முழு மன நிறைவும்
முன்னேற்றமும் கிடைக்கும்.

சரிதானா நண்பர்களே...

No comments:

Post a Comment