Wednesday, 14 March 2018

தணிக்கைக்கு பெஸ்ட்

2007 ஆம் ஆண்டு.
உடுப்பிக்கோட்டத்தில்
நான் வணிகமேலாளர்.

கோட்டயம் கோட்டத்தின்
முதுநிலைக்கோட்ட மேளாளர்
திரு உதுப் ஜோசப்
அன்று என்னுடன் 
விற்பனை மேலாளர்.

முகவர்களுக்கான
புதுவணிகப்போட்டி
ஒன்றினை
வடிவமைத்தோம்.

இத்தனை பாலிசிகள்
அல்லது
இவ்வளவு பிரிமியம்
கொண்டுவரவேண்டும்
என்பது போட்டியின் விதி.

அதில் நான்கைந்து
நிலைகள்.
அதற்கேற்ப பரிசு.

கூடவே "ஹெல்த் இன்சூரன்ஸ்
திட்ட பாலிசி ஒன்று கட்டாயம்"
என்ற விதியை சேர்த்திருந்தோம்.

ஒப்புதலுக்காக
முதுநிலைக்கோட்ட மேலாளரை
சந்தித்து போட்டியின்
விதிகளை விளக்கிக் கூறினோம்.

அனைத்தையும்
பொறுமையுடன் கேட்டார்.

ஒரு புன்முறுவலை
வெளிப்படுத்தி
சில விளக்கங்கள் தந்தார்.

"Competition rules should be
Easy to communicative
Easy to understand &
Easy to perform.

ஒரு போட்டியின் விதிகள்
சொல்வதிற்கு எளிதாக
இருத்தல் வேண்டும்.

புரிந்து கொள்வதற்கு
எளிதாக இருக்கவேண்டும்.

செயல் படுத்துவதற்கும்
எளிமையாக இருக்கவேண்டும்.

இத்தனை பாலிசி என்பதும்
இவ்வளவு பிரிமியம் என்பதும்
ஏற்றுக்கொள்ளக்கூடியது.

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி
ஒன்று கட்டாயம் என்பது
செயல் படுத்துவதற்கு
எளிதாக இல்லை.

நிறைய வணிகம் தரும் ஒருவர்
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி
கொடுக்கமுடியாதவர் என்றால்
நமது வணிகப் போட்டியில்
பங்கெடுக்க
முயற்சிக்கவே மாட்டார்.

பங்கெடுத்தாலும் பரிசு பெற
தகுதி பெறமாட்டார்.

நமது போட்டி அவரை
உற்சாகப்படுத்துவதற்குப்பதில்
சோர்வடையவே செய்யும்.

இழப்பு அவருக்கல்ல. நமக்குத்தான்.

எனவே அந்த விதியை
நீக்கிவிடுங்கள்.

வேண்டுமனால்
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு என்று
தனியாக ஒரு போட்டியினை
அறிவியுங்கள்" என்று
ஆலோசனை கூறினார்.

அதற்குப்பிறகு
எங்களைப்பார்த்து
சிரித்துக்கொண்டே

"தணிக்கைத்துறை,
கணக்கு வழக்குத்துறை,
நிதி ஆலோசனைத்துறை,
ஊழல் தடுப்புத்துறை,
கண்காணிப்புத்துறை,
பாலிசி சேவைத்துறை,
கணிணித்துறை,
போன்ற துறைகளுக்கு
தென்னிந்தியர்களாகிய
உங்களைப்போன்றோரை
மிஞ்சுவதற்கு ஆட்களில்லை.

ஆனால் நமது நிறுவனத்தின்
வணிகத்துறையில்
முதன்மையிடம் உங்களுக்கில்லை.

தென்னிந்தியாவில்
பிற வணிகத்துறையில்
சிறந்தவர்கள் உள்ளனர்.

அவர்கள் தாங்களே
தொழில் துவங்கி
சிறந்து விளங்குகிறர்கள்.

அவர்களைப்போன்றோர்
நமது நிறுவனத்திற்கு
பணிக்கு வருவதில்லை."
என்று கூறினார்.

எனக்கென்னவோ இதில்
ஓரளவு உண்மை உள்ளது
போல் தான் தோன்றுகிறது.

No comments:

Post a Comment