*விற்பனையில்....*
முக்கியமாக காப்பீட்டு விற்பனையில்
விற்பனையை பேசி முடித்து
கையில் முழுப் பணமும் வந்தால்தான்
விற்பனை முழுமை பெறும்.
திருச்செந்தூரில் *ஆனா மூனா*
என்ற ஒரு *மூத்த முகவர்.*
பாலிசி விற்பனையில்
கை தேர்ந்த விற்பன்னர்.
குறிப்பிட்ட வாய்ப்பாளரிடம்
பணம்வாங்குவது
ஏதாவது காரணத்தால்
தள்ளிக்கொண்டே போனாலும்
வணிகத்தை விட்டுவிடமாட்டார்.
அந்த பகுதிக்கு நான
சுற்றுப்பயணம் செல்லும்போது
அவரிடம் அழைத்துச்செல்வார்.
வாடிக்கையாளரிடம்...
"சார் தான் எங்களோட
மிகப் பெரிய ஆபீசர் .
சார் எப்போதுமே பிசியான ஆள்.
பார்த்துப்பேசுவதே
முடியாத காரியம்.
எல்லா பாலிசிகளுக்கும்
சார் நேரில் வரமாட்டார்.
முக்கியமானவர்களின்
வீடுகளுக்கு மட்டும் தான்
சார் நேரடியாக வருவார்.
உங்க நல்ல நேரம்.
சாரே நம்ம ஊருக்கு
இன்று டூர் வந்திருக்கார்.
சாரே இப்போது உங்களை
நன்றாகப் பார்த்துவிட்டதால்
அலுவலகம் போனவுடன்
புதுப்பாலிசிக்கு உடனே நம்பர்
கொடுக்கச்சொல்லிவிடுவார்"
என்று சொல்லி முழுப் பணத்தையும்
கையோடு வாங்கிவிடுவார்.
இப்படிச்சொல்லி
வணிகத்தை முடிப்பதற்காகவே
என்னை அழைத்துச்செல்வார்.
வாடிக்கையாளர் நிச்சயமாக
வாய்தா வாங்க முடியாது.
இன்னொருவர்...
*வளர்ச்சி அலுவலர்*
*திரு ஞானசேகர்.*
புதுப்பாலிசிக்குதவணைத்தொகை
ரூ 1612 வந்திருக்கும்.
பணம் தற்போது இல்லை என்ற
வாடிக்கையாளரைப்பார்த்து
“ அண்ணாச்சி.. மொதல்ல ஒரு
112 ரூபாய் முன்பணமாக கொடுங்க.
சார் கையால் தற்காலிக
ரசீது போட்டுத்தந்து விடுவார்.
மீதி 1500 ஐ இரண்டொரு நாட்களில்
நீங்கள் சொல்லும் நேரத்தில் வந்து
நானே வாங்கிக்கொள்கிறேன்" என்பார்.
வாடிக்கையாளர் பணத்தை எடுக்க
வீட்டிற்கு உள்ளே செல்லும்போது
" அண்ணாச்சிஒரு 612 ஆக எடுங்க.
மீதி ஆயிரத்தை பிறகு நான் வந்து
வாங்கிக்கொள்கிறேன்" என்பார்.
அவர் சம்மதிப்பது மாதிரி
கொஞ்சம் தெரிந்தால் கூட
" அண்ணாச்சி கொஞ்சம்
நல்லா தேடி பாருங்க.
பணம் நிச்சயம் இருக்கும்.
1612 டாகவே தந்தால்
ரொம்ப நல்லது.
நானும் உங்களை
அடிக்கடி வந்து தொந்தரவு
பண்ண வேண்டாம் பாருங்கள்"
என்று நயந்து கேட்பார்.
முதலில் பணம் ஏதும் இல்லை
என்று கூறிய வாடிக்கையாளர்
நம்ம ஞானசேகரின்
வேண்டுகோள் வார்த்தைகளால்
முழுப்பணத்தையும் தந்துவிடுவார்.
இந்த வழிமுறை இவரிடம்
நன்றாக வேலை செய்தது.
ஒருவரிடம் பலிக்கும் வழிமுறை
இன்னொருவரிடம் பலிக்கும்
என்பது நிச்சயமில்லை.
அவரிடத்தில்
வேறு ஒரு அணுகுமுறை
வெற்றி தரலாம்.
எனக்கு நன்றாகத் தெரிந்த
இன்னொரு முகவர் நண்பர்..
அனைத்துத்திட்டங்களின் நுணுக்கங்களையும்
கரைத்துக் குடித்தவர்.
வாய்ப்பாளர் கேட்கும்
எல்லா சந்தேகங்களுக்கும் நல்லமுறையில்
விளக்கம் கொடுப்பார்.
ஆனாலும் கடைசில் பணம்
வாங்குவதற்கு வாய்ப்பாளரிடம்
அழுத்தம்கொடுக்கமாட்டார்.
அவரை ஒத்துக்கொள்ளவைத்து
பணத்தைவாங்கும் சாமர்த்தியம்
சுட்டுப்போட்டாலும் வராது.
அதிகம் இறங்கிப்போய் பணம்
கேட்பது தனது பெருமைக்கு
இழுக்கு என நினைப்பார்.
அதனால் நிறைய வணிகம்
தட்டிப்போயிருக்கிறது.
எப்படிப்பட்டவரிடம்
எந்தநேரத்தில்
எப்படிப்பட்ட
அணுகுமுறை பலன் தரும் என்ற
*”வணிகம் முடிக்கும் கலை"* யை
எந்த புத்தகமும் படித்து
தெரிந்து கொள்ள முடியாது.
இந்த அற்புதக் கலை எல்லாம்
அனுபவத்தில் தான் வரவேண்டும்.
அனுபவம் வரவேண்டும் என்றால்
அதிக நபர்களைச் சந்திப்பது
அடிப்படைத் தேவை.
இதன்மூலம் மட்டுமே
மாறுபட்ட அனுபவங்கள்
தாராளமாகக் கிடைக்கும்.
முகவ நண்பர்களே!
அதிக வாய்ப்பாளர்களை
நாள்தோறும் சந்தியுங்கள்.
அந்த சந்திப்பின் மூலம்
அதிக அனுபவம் பெறுங்கள்.
”வணிகம் முடிக்கும் கலை" யை
மிக நன்றாகவும் தெளிவாகவும்
தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்களும் சிறந்தவிற்பன்னரே..
No comments:
Post a Comment