Saturday, 17 March 2018

தேவை வரும்போது கண்டுபிடிப்பு தானாக வரும்

உடுப்பியில்
இருந்தகாலத்தில்
கிருஷ்ணன் கோவில்
செல்லும் வழியில்
ஓர் இடத்தில்
ஒரு புகழ் பெற்ற
சிற்றுண்டி விடுதி.

அதன் பெயர்
"ஓட்டல் கெடுபிடி".
"Hotel Gudbid”

இதென்ன புதுமாதிரி
இருக்கிறதே என்று
நானும் சகோதரர்
"திரு உதுப்" அவர்களும்
வியந்து ஒரு நண்பரிடம்
விளக்கம் கேட்டோம்.

உடுப்பி ஒரு சிறிய ஊர்தான்.
அந்த நகராட்சியின் ஓர்
அங்கம் தான் மணிப்பால்.

மணிப்பால் கல்விவசதிக்கு
உலகப் புகழ் பெற்ற ஊர்.

"பை" குழுமங்களின்
கல்விநிறுவனங்கள் தான்
காணுமிடங்களிலெல்லாம்
காணப்படும்.

கிருஷ்ணன் கோவிலையும்
மணிப்பாலையும் வைத்து
இந்த நகருக்கு
நாடுமுழுவதிலிருந்தும்
கூட்டம் கூட்டமாக
விருந்தினர் வருவார்கள்.

வட நாட்டு மாணவர்கள்
இங்கு தலைமுறை
தலைமுறையாக
மருத்துவப்படிப்பும்
பொறியியல் படிப்பும்
மேலாண்மைப் படிப்பும்
படித்து வருகிறார்கள்.

நான் மாணவனாக
இருந்த போதே மணிப்பால்
பற்றி கேட்டிருக்கிறேன்.

எனக்குத்தெரிந்து
நன்கொடை அடிப்படையில்
மாணவர் சேர்க்கை
இங்கு தான் முதன் முதலில்
துவங்கப்பட்டது.

இங்கு வரும் வடநாட்டவர்
ஒரு குறிப்பிட்ட ஓட்டலுக்குத்தான்
உணவருந்தவோ சிற்றுண்டிக்கோ
வருவது வழக்கம்.

ஒரு குறிப்பிட்ட நாள்
மாலையில் அந்த ஓட்டலுக்கு
நிறைய நபர்கள் வந்திருக்கின்றனர்.

அனைவரும் ஐஸ் கிரீமிற்கு
ஆசைப்பட்டிருக்கின்றனர்.

கடையில் இருந்த ஐஸ்கிரீம்
தேவையை விட
குறைவாகவே
இருந்திருக்கிறது.

ஓட்டல் முதலாளி
திரு காமத் அவர்கள்
வாடிக்கையாளருக்கு
ஏமாற்றம் தர
விரும்பவில்லை.

உலர் பழங்களான
முந்திரி, திராட்சை,
பாதாம், பிஸ்தா போன்றவற்றை
சிறு சிறு துண்டுகளாக்கி
இருக்கின்ற ஐஸ்கிரீமோடு
கலந்து பரிமாறி
நிலைமையை
சமாளித்திருக்கிறார்.

இதை ருசிபார்த்த
வட நாட்டு
வாடிக்கையாளர்களுக்கு
இந்த ஐஸ்கிரீம் வகை
பிடித்திருக்கிறது.

உரிமையாளரைப் பாராட்டி
மகிழ்ந்திருக்கின்றனர்.

இந்த கலவை நாள் தோறும்
விற்பனைக்கு வந்து
நல்லதொரு
வரவேற்பைப்பெற்றிருக்கிறது.

இவர்கள் அவர்களது
உறவினர்களிடம் கூறி
அவர்கள் மணிப்பால்
வரும்போது விரும்பி
சாப்பிடும் பொருளாக
மாறிவிட்டது.

அந்த கலவைக்கு
"கெடுபிடி ஐஸ்கிரீம்'
“Gudbid ice cream”
என பெயரும்
வைக்கப்பட்டது.

பின்னர் அதுவே
அந்த ஓட்டலுக்கும்
Hotel “Gudbid” என்று
பெயராகிவிட்டது.

இப்போது எல்லோருமே
இந்த கலவையை
விரும்பி சாப்பிடுகின்றனர்.

நாங்களும்
ருசித்திருக்கிறோம்.

ஒரு கெடுபிடியை
சமாளிக்க தயாரிக்கப்பட்ட
ஒரு வகை ஐஸ்கிரீம்
இப்பொது நிரந்தர
பிரபலமான ஐஸ்கிரீமாக
மாறிவிட்டது.

" தேவை தான் அனைத்து
கண்டுபிடிப்புகளுக்குமான தாய்"
Necessity is the mother of
All inventions
என்பது உண்மையாகியிருக்கிறது.

No comments:

Post a Comment