Sunday, 25 March 2018

பதிலில்லா கேள்வி

"யோவ்.. சொடல
என்னவே ரொம்பநாளா
ஆளைக்காணோம்"

" ஆமடே எசக்கி..
அசலூரு போயிருந்தேன்
அதனாலதான்”

“வே.. ஒம்மகிட்ட
ரொம்பநாளா
ஒண்ணு கேக்கணும்னு
நெனச்சுகிட்டே இருந்தேன்.
தள்ளிப்போயிட்டேயிருக்கு”

“கேட்டுத்தொலைடே.
என்னடே கேக்கணும். “

“ நம்மூர்ல
கோளியோ ஆடோ
களவாங்குற  பயலுவல
போலிசுக்காரவுக
அடிச்சு மிதிச்சுல்லா
நெசத்தை வரவளய்க்காவொ”

“ஆமடே..
அதுக்கென்னடே இப்ப?”

“இல்லை...
இந்த லஞ்சம் வாங்குன
பேதிலபோவானுவள..
கடனை வாங்கிட்டு
ஏமாத்திட்டு போற
கொள்ளையில போவானுவள..
இந்த மாதிரி
நாசமாப்போவானுவளல்லாம்
பிடிச்ச பொறவு
போலிசுக்காரவுக
அடிச்சு மிதிச்சு
உண்மைய
கறப்பாவொளா?
இல்லன்னா
கையை கட்டிட்டு
நிய்ப்பாவொளா?

“ ஏல எசக்கி
நல்ல கேள்விதாம்ல
கேட்டுருக்க..
ஆனா நடக்கதெல்லாம்
பார்க்கும்போது
எனக்குத்தாம்ல
பதிலு தெரியல”

No comments:

Post a Comment