Friday, 30 March 2018

நாங்க மட்டும் என்னவாம். பிசி தான்

பொதுவாக நாம் அனைவருமே
ஒரு வாய்ப்பாளரைக் காணச்
செல்லவேண்டும் என்றால்
அவர் எப்போது
சாவகாசமாக இருப்பார் என்று
அறிந்துகொண்டு
அந்த வேளையில்தான்
அவரைக்காணச்  செல்வோம்.

ஆனால் திருவல்லாகிளையில்
முதுநிலைக்கிளை மேலாளராக இருந்த
திரு ஜோசப் சாக்கோ சார் அவர்கள்
அப்படியெல்லாம் கால நேரம்
பார்ப்பதில்லை.

வாயப்பாளர் எந்த மன நிலையில்
இருந்தாலும் அவரைச்சந்தித்து
வணிகத்தை முழுமையாக்குவதில்
மன்னாதி மன்னர்.

உதவிக்கிளை மேலாளராக
1990 ஜூலையில் அவரோடு
புதிதாக இணைந்தேன்.

முதல் ஒரு மாத காலம்
என்னை தன்னுடன்
அழைத்துச்சென்று
வணிக நுட்பங்களை
தெரிந்து கொள்ள வைத்தார்.

ஒரு நாள் முகவரொருவர்
ஒரு பெரிய வாய்ப்பாளரிடம்
வணிகத்தை  பேசிமுடித்து
விட்டதாகவும் காசோலை
வாங்குவதில் தான் தாமதமாகிறது
என்றும் எங்களிடம் வந்து
வருத்தத்துடன் கூறினார்.

அன்று மாதக்கடைசி.
கிளைக்கு வணிகப் பற்றாக்குறை.

இதைக் கேட்ட உடன்
நாங்களிருவரும்
முகவருடன் வாய்ப்பாளரைச்
சந்திக்க சென்றோம்.

அந்த வாய்ப்பாளர் ஒரு
கட்டிடக்கலை வல்லுநர்.

எப்போதும் அவசரகதியில்
வேகமாக இயங்குபவர்.

அங்கும் இங்கும் ஓய்வின்றி
எப்போதுமே ஓடிக்கொண்டு
இருப்பவர்.

நாங்கள் சென்றதும் அவர்
எங்களைப்பார்த்து
"நான் இப்போது மிகவும் பிசி.

முக்கியமான வேலைக்காக
வெளியே போகிறேன்.

இன்னொரு நாள்
ஓய்வாக இருக்கும்போது
நீங்கள்  வரலாம்"
என்று கேட்டுக்கொண்டார்.

வெளியே கிளம்பவும்
தயாரானார்.

அப்போது
திரு சாக்கோ சார்
அவரைப்பார்த்து
"நாங்கள் உங்களை விட
கூடுதல் பிசி..

எங்களுக்கும் இன்று
மாதக்கடைசி.

வேறு வேலைகள்
நிறைய இருக்கின்றன.

நீங்கள் ஏற்கனவே அனைத்து
ஆவணங்களையும் தந்து விட்டீர்கள்.

பணம் மட்டுமே பாக்கி.

எனவே செக்கில்
கையெழுத்துமட்டும்
போட்டுக் கொடுங்கள்.

மற்றவற்றை நாங்களே
எழுதிக் கொள்கிறோம்"
என்று கூறினார்.

வாய்ப்பாளரும் எங்களிடம்
பேசிக்கொண்டே இருந்தால்
அவரது வேலை சுணங்கும்
என்று நினைத்தார்.

எனவே உடனே
கையெழுத்துப்போட்டு
காசோலையை
எங்களிடம்  கொடுத்துவிட்டு
தனது பணியைக்கவனிக்க
பறந்து விட்டார்.

சில நேரங்களில்  வாய்ப்பாளர்
பிசியாக இருப்பதும் நமக்கு
நல்லதுதான் போலும்.

No comments:

Post a Comment