திருச்செந்தூர் கிளையில்
உதவியாளனாக இருந்தகாலம்.
வருடம் 1982-83.
உள்ளூர்காரர்கள்
என்னைப்பார்க்கும் போது
"தம்பி என்னபண்ணுகிறீர்கள்"
என்று கேட்பார்கள்.
“எல்ஐசியில் வேலை பார்க்கிறேன்”
என்று கூறுவேன்.
“ஏஜெண்டா" என்று கேட்பார்கள்.
“இல்லை அசிஸ்டெண்ட்”
என்று சொல்வேன்.
பல சிறிய ஊர்களிலும்
நகரங்களிலும் எல்ஐசி என்றால்
முகவர்களைத்தான் தெரியும்.
அந்த அளவு முகவர்களுக்கு
மதிப்பும் மரியாதையும் உண்டு.
“அண்ணாச்சி..
நீங்க என்ன பண்றீங்க" ன்னு
கேட்டால் “ஃபைனான்ஸ்”
என்று பதில் வரும்.
நான் சந்தித்த நபர்களில்
100 ற்கும் அதிகமானவர்கள்
“ஃபைனான்ஸ்” என்று பதில்
கூறியிருந்ததால் நிறைய
பணக்காரர்கள் உள்ள ஊர்
என்று நினைத்துக்கொண்டேன்.
ஒரு மூத்த முகவரிடம்
“ அண்ணாச்சி உங்க ஊரில்
நிறைய ஃபைனான்சியர்கள்
இருக்கிறமாதிரி தெரியுது.
உங்களுக்கு நல்ல
வணிக வாய்ப்புதான் ”
என்று கூறினேன் .
அவர் என்னைப்பார்த்து
“ அப்படியெல்லாம் இல்லை.
ஒரு ஓய்வுபெற்ற
அப்பாவி வாத்தியார் இருப்பார்.
அவர் ரிடையர் ஆனதும்
கிடைக்கும் ஒரு லட்சம் ரூபாயை
பக்கத்து வீட்டுக்காரரிடம்
ஒரு வட்டிக்கு கடன் கொடுப்பார்.
அந்த பக்கத்து வீட்டுக்காரர்
இதே பணத்தை இன்னொரு
நண்பரிடம் தங்க நகையை
வாங்கிக்கொண்டு மூன்று வட்டிக்கு
கடன் கொடுப்பார்.
அந்த நண்பர் ஒரு
சிகப்பு புல்லட்காரருக்கு
இதே பணத்தை ஐந்துவட்டிக்கு
கடனாகக்கொடுப்பார்.
சிகப்பு புல்லட் காரரோ
இதே பணத்தை பத்து வட்டிக்கு
கோவிலைச்சுற்றி கடைவைத்துள்ள
சிறிய வியாபாரிகளுக்கு
கடனாக கொடுப்பார்.
சிறு வியாபாரிகள்
இந்த பணத்தை வாங்கி
அதை முதலாக வைத்து
வியாபாரம் செய்து
வாழ்க்கையை
நடத்தி வருகிறார்கள்.
இப்போது தெரியுதா தம்பி
ஒரு லட்ச ரூபாய்க்கு எத்தனை
ஃபனான்சியர்கள் என்று”
கூறினார்.
பயந்த சுபாவம் உள்ளவர்கள்
குறைந்த வட்டிக்கும்,
கொஞ்சம் விபரமானவர்கள்
பணத்தை இன்னொருவருக்கு
சிறிது கூடுதல் வட்டிக்கும் விட்டு
ஒரு வருமானத்தையும்,
உடல் பலமும்
ஆள்பலமும் உள்ளவர்கள்
அந்த பணத்தின் மூலம்
அதிக வருமானத்தையும்
பார்க்கிறார்கள்.
இதுதான் நம் நாட்டின்
கிராமிய பொருளாதாரம்.
இது மாதிரி நிலைமை
திருச்செந்தூரில் மட்டுமல்ல,
வேறு பல ஊர்களிலும் இருக்கிறது.
அரசாங்க நிறுவனமான
எல்ஐசியிடம் மக்கள்
சேமிப்போ முதலீடோ செய்தால்
அவர்களது பணத்திற்கு
அரசின் உத்திரவாதம் உண்டு.
இந்த நம்பிக்கையை
மக்களிடம் சேர்க்கவேண்டிய
பொறுப்பும் கடமையும்
நம் முகவர்களுக்கு உள்ளது.
மக்களின் பணம் எப்போதும்
பாதுகாப்பாக இருக்கும்.
திருச்செந்தூரில் பாலிசி
எடுத்தவரின் ஒரு சிறிய பங்கு
தில்லியில் இறந்துபோன
முகம் தெரியாத ஒருவரின்
குடும்பத்திற்கும் போய்சேரும்.
நாட்டு நலத்திட்டங்களில்
முதலீடு செய்யப்பட்டு
நாட்டின் வளர்ச்சியிலும்
பெருமையுடன்
பங்குகொள்ளலாம்.
முகவர்கள் முழுமூச்சுடன்
களத்தில் இறங்கி
அதிக நபர்களுக்கு
பாலிசி வழங்கி
மக்கள் பணம் மக்களுக்கே
என்பதை உறுதி செய்யலாம்.
முயற்சிசெய்ய தவறினால்
முதலீட்டிற்குள்ள பணம்
கைமாறி கைமாறி
யார்யாருக்கோ பலன் தரும்.
No comments:
Post a Comment