இன்முகத்தோடான
பன்முக முகவர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஒவ்வொரு நகரங்களிலும்
BNI என்ற ஒரு
அமைப்பு வெற்றிகரமாக
செயல்பட்டு வருகிறது.
நகரங்களில் பல குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும்
"வணிகத்துறைகள்
ஒவ்வொன்றிலிருந்தும்
ஒருவர்மட்டும்"
என்ற விதிப்பட்டி உறுப்பினர்கள்
சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு துறையிலிருந்தும்
கூடுதல் எண்ணிக்கையில்
ஆர்வம் காட்டும் நண்பர்கள்
இருந்தால் புதிதாக
ஒரு குழு அமைத்து அதில்
சேர்த்துக்கொள்கிளார்கள்.
எல்ஐசி முகவர் சகோதரர்
திரு ஜஹாங்கீர் அவர்கள்
இந்த அமைப்பினுடைய
திருச்சி மண்டலத்தின்
செயல் இயக்குனர்.
திருச்சியிலேயே
ஏழு குழுக்கள் வெற்றிகரமாக
செயல்பட்டு வருகின்றன.
இந்த குழு உறுப்பினர்கள்
ஒருவருக்கொருவர் வணிகத்தில
உதவிபுரிகின்றனர்.
ஒருவரிடம் வரும் விசாரிப்புகளுக்கு
தன்னுடைய சக உறுப்பினரை
பரிந்துரைக்கிறார்கள்.
விசாரிப்புகள் கீழ்க்காணும்
வகைகளில் இருக்கலாம்.
மருத்துவத்தேவை,
வீட்டு மனைத்தேவை
வீடு கட்டுமானத்தேவை
உள் அலங்காரத்தேவை
உணவு விநியோகத்தேவை
கார் உதிரிபாகங்கள் தேவை
பணத்தேவை
இப்படிப்பட்ட தேவைகளுக்காக
தன்னை நாடிவரும் நண்பர்களுக்கு
சக உறுப்பினர்களை
பரிந்துரைக்கிறார்.
ஒரு துறையிலிருந்து
ஒருவர் மட்டும் என்ற
கொள்கை போட்டியைத்
தவிர்க்க உதவுகிறது.
எல்ஐசி முகவர் திரு ரவிகுமார்
ஒரு குழுவில் உறுப்பினர்.
திரு சொக்கலிங்கம் இன்னொரு
குழுவில் இருக்கிறார்.
இவர்களுக்கு இவரது குழு
உறுப்பினர்களிடமிருந்து வரும்
பல்வேறு விசாரிப்புகளையும்
சம்மந்தப்பட்ட பிற
உறுப்பினர்களுக்கு
அனுப்பிவைக்கிறார்கள்.
இதுபோல் மற்ற உறுப்பினர்கள்
அவர்களிடம் வரும் காப்பீடு
விசாரிப்புகளை தங்கள் குழுவிலுள்ள
திரு ரவிகுமாருக்கோ
திரு சொக்கலிங்கத்திற்கோ
அனுப்பிவைக்கிறார்கள்.
ஒவ்வொரு வாரமும்
செவ்வாய்கிழமை காலை
ஏழுமணியளவில்
அனைவரும் சிற்றுண்டியுடன்
நட்சத்திர ஓட்டல் ஒன்றில்
சந்திக்கிறார்கள்.
ஒருவருக்கொருவர் அறிமுகம்
செய்து கொள்கிறார்கள்.
ஒவ்வொருவரும் மற்றவருக்கு
பரிந்துரைத்த வணிக மதிப்பையும்,
பிற உறுப்பினர்கள் மூலம் தனக்கு
கிடைத்த வணிக மதிப்பையும்
தெரிவிக்கிறார்கள்.
பத்து மணியளவில் கூட்டம்
நிறைவடைந்ததும் தத்தம்
வணிக இடங்களுக்கு
கலைந்து செல்கின்றனர்.
இப்படி பரிந்துரைப்பு முறையிலான
வணிகம் ஏனைய உறுப்பினர்களுக்கு
சிறப்பான புதிய வாய்ப்பைத்தருகிறது.
ஒருவருக்கு மற்றவர்கள்
விளம்பரத்தூதுவராக
செயல்படுகின்றனர்.
பிறர் குழந்தையை
ஊட்டி வளர்த்தால்
தன்குழந்தை தானே வளரும்
என்ற கருத்து இங்கு
செயலாகிவருகிறது.
அன்புச் சகோதர முகவர்
திரு ஜஹாங்கீர் அவர்கள்
ஏற்பாட்டில் "சங்கம் ஓட்டலில்"
நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில்
கலந்துகொண்ட நான்
இந்த மாதிரியொரு
புதிய வணிகமுறையை
பார்த்து வியந்தேன்.
நமது முகவர்களில் பலர்
அவர்களே BNI அமைப்பு போல்
செயல்படுவதைக்கண்டிருக்கிறேன்.
•தஞ்சையில் ஒரு முகவர்•
திரு கணேசன்..
எந்த ஒரு தேவைக்கும்
தயக்கமின்றி இவரை
அணுகலாம்.
உவந்து உதவிடுவார்.
வீடு வாங்க,
வாடகைக்கு வீடு தேட ,
வீட்டுக்கடன் பெற்றிட,
உள் அலங்காரம் செய்திட,
வீட்டை நல்ல நபருக்கு
வாடகைக்குவிட,
பொது மருத்துவம் என்றாலும்
சிறப்பு மருத்துவம் என்றாலும்
சிறந்தவர்களிடம்
அழைத்துச்சென்றிட,
குழந்தைகளைக்கான
காப்பகங்களை
பரிந்துரைக்க,
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்
மாணவ மாணவிகளைச் சேர்த்துவிட,
கல்விக்கடன் ஏற்பாடு செய்திட,
விழாக்களுக்கு மண்டபம் பதிவு செய்ய,
சமையல் ஒப்பந்தக்காரரை
அடையாளம் காட்டிட,
பேருந்து பயணமானாலும்
ரயில் பயணமானாலும் டிக்கட்டை
உறுதி செய்திட,
இப்படி இன்னும் பலப்பல
தேவைகளுக்கு உதவிபுரிவார்.
கூட்ட நேரத்தில் கோவில்களில்
சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு என்று
நமக்கு அனைத்து உதவிகளும்
இவரிடமிருந்து இன்முகத்துடன்
கிடைக்கும்.
ஒருமுறை நான்
வெளிநாட்டிலிருந்தேன்.
நெட்பாங்கிங்
பண்ணவேண்டும்.
என் BSNL சிம் அட்டை
என் கையிலேயே இருந்ததால்
OTP பெறுவதில் சிக்கல் இருந்தது.
முகவர் திரு கணேசனின்
செல்வாக்கால்
சரியான ஆவணங்களை
கொடுத்து தஞ்சையில்
புதியதாக BSNL அட்டையை
அதே எண்ணிற்கு வாங்கித்தந்தார்.
அவரது கைபேசியில் புதிய
அட்டையைச் சொறுகி
வைத்துக்கொண்டார்
வெளிநாட்டில் இருந்து
நான் நெட்பேங்கிங் வேலையை
தொடங்கியதும்
இவரைத்தொடர்புகொண்டு
OTP ஐ கேட்டுத் தெரிந்துகொண்டு
நெட் பேங்கிங் பணியை
நிறைவேற்றியிருக்கிறேன்.
சென்னையில் உள்ள ஒரு
கிளை மேலாளருக்கு
தஞ்சையில் இருந்துகொண்டே
சென்னை அலுவலகம் மூலம்
வீட்டுவசதிக்கடன்
வாங்க வகைசெய்தார்.
இவர் வாடிக்கையாளர்களுக்கு
இப்படியெல்லாம் உதவும்போது
பரிந்துரை கேட்பவரும்
பரிந்துரைக்கப்படுபவரும்
பயன் பெறுகின்றனர்.
இந்த உறவே,
இவரை வணிக உச்சத்திற்கு
உயர்த்திச் சென்றிருக்கிறது.
பிறர் குழந்தையை
ஊட்டி வளர்க்கும்
இந்த நாயகனின்
எல்ஐசிக்குழந்தை
தானே வளர்கிறது.
திரு கணேசனைப்போலவே
வாடிக்கையாளர்களுக்கு
உதவிகள் பல செய்து
தானும் உயர்ந்து
நண்பர்களையும்
உயர்த்துபவர்கள்
பலமுகவர்கள் உள்ளனர்.
இவர்கள்
BNIக்கள். ஆம்....
B usiness
N etworking
I ndividuals.
நிறைய BNI க்கள் உருவாகட்டும்.
பலரையும் இணைக்கட்டும்.
பலரும் பலன் பெறட்டும்
No comments:
Post a Comment