நான் 1990-92ல்
கேரள மாநிலம்
திருவல்லாகிளையில்
உதவிக்கிளை மேலாளர்.
போற்றுதலுக்குரிய
திரு ஜோசப் சாக்கோ சார்
முது நிலைக்கிளை மேலாளர்.
எல்லோரிடமும் பாசமாக
இருப்பார்கள்.
விற்பனைக்கலையில்
ஒரு வித்தகர்.
அவரது சிறந்த ஆலோசனை
ஒன்று இன்றுவரை என் மனதில்
ஆழமாகப்பதிந்துள்ளது.
பொதுவாக எல்லோருமே
நமது வீடுகளில்
சிலநண்பர்களை
தெருக்கோடியிலேய
பேசி அனுப்பி விடுவோம்.
இன்னும் சில நண்பர்களை
வாசலில் வைத்தே பேசி
அனுப்பிவிடுவோம்.
வேறு சில நண்பர்களை
வரவேற்பு அறை வரை மட்டுமே
வர அனுமதிப்போம்.
ஒரு சிலரை மட்டும் வீடு
முழுவதும் சுற்றிவர
அனுமதிப்போம்.
அந்த ஒரு சிலர் தான்
குடும்பத்தாரின்
முழு நம்பிக்கையைப்
பெற்றவர்கள்.
குடும்பத்தில் ஒருவராகவே
மதிக்கப்படுபவர்கள்.
வீடு முழுவதும் வர
அனுமதிக்கப்படும்
அந்த ஒருசிலரில் ஒருவராக
நமது முகவரை ஒவ்வொரு
வாய்ப்பாளரும் கருதவேண்டும்.
இப்படிப்பட்ட
அங்கீகாரத்திற்காக
ஒவ்வொரு முகவரும்
ஒழுக்கத்திலும் நாணயத்திலும்
தங்களை தகுதிபடுத்திக்
கொள்ளவேண்டும்.
இதுவே நமது துறையில்
கடைப்பிடிக்கவேண்டிய
கட்டாய ஒழுங்குமுறை
என்பார்.
அவர் சொல்வது முற்றிலும்
சரி என்பதே என் கருத்தும்.
No comments:
Post a Comment