என் நண்பர் ஒருவர்.
என்னுடன் எல்ஐசியில்
பணியில் சேர்ந்தார்.
ஒரே கிளையில் பணியாற்றிய
அனுபவம் உண்டு.
இவருக்கு தமிழிலும்
ஆங்கிலத்திலும் நல்ல புலமை.
மிகநன்றாக அலுவலகக்
குறிப்புகள் எழுதுவார்.
கடிதங்களை புரியும்படியும்
ரசிக்கும்படியும் சிறப்பாக
எழுதுவார்.
வாடிக்கையாளர் சேவைகளை
அவர்கள் மகிழும்படி வழங்குவார்.
உடன் பணிபுரிவோரிடம்
கடிந்து பேசமாட்டார்.
ஒரு மிகப்பெரிய கிளையின்
தலைமைப்பொறுப்பில் இருந்தார்.
பணியை முடிக்கவேண்டி
சிலநேரங்களில் அவரே
அந்த பணியை
முடித்துக்கொடுப்பார்.
வாடிக்கையாளருக்கு
பாலிசி புதுப்பித்தல்
பாலிசி மீது கடன்
என்று அவைகளை அவரே
கணக்கிட்டிருக்கிறார்.
இந்த தகவல் அறிந்த நான்
தனியாகப் பணி செய்யாமல்
அணியாகப் பணியாற்ற
வேண்டும் என்று பலமுறை
ஆலோசனை கூறியிருக்கிறேன்.
இவரது பெரிய கிளைக்கு
ஒரு துணைக்கிளை
அனுமதிக்கப்பட்டது.
அந்த துணைக்கிளைக்கு
ஒரு கிளை மேலாளர் கூட
நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இவரது இளகிய குணத்தை
நன்கு அறிந்திருந்த
ஈசி கோயிங் கிளை மேலாளர்
தனது வேலையை
குறைக்கும் பொருட்டு
புதிதாகப் பார்த்துள்ள
கட்டிடத்தின்
உரிமையாளருடன்
சண்டைபோட்டுவிட்டார்.
கட்டிடத்தின் உரிமையாளர்
இனி துணைக்கிளை
மேலாளருடன் பேசமாட்டேன்
என்ற நிலை எடுத்துவிட்டார்.
கட்டிட உரிமையாளருடன்
விவாதிக்கும் வேலையையும்
என் நண்பர் எடுக்க வேண்டிய
கட்டாயத்துக்கு உள்ளானார்.
நல்லதொரு பணியாளராகவும்,
வாடிக்கையாளர் நலம் பேணும்
நல்ல மனதுக்காரராகவும்,
ஆங்கிலத்திலும் தமிழிலும்
புலமை கொண்டவராகவும்,
நாணயமானவராகவும்,
உண்மையானவராகவும்,
இருந்த போதிலும்,
தனது அணியினரிடம்
வேலை சரியாக வாங்காமல்
தானே செய்துமுடிப்பதால்,
அவர்மீது மேலிடம்
வெறுப்பைக் கொட்டியது.
பிறருக்கு உதவுவது
என்பது வேறு.
பிறர் செய்யவேண்டிய
வேலையை நாமே
செய்வது என்பது வேறு.
அணியினரிடம் வெற்றிகரமாக
வேலை வாங்குவது என்பது
ஒரு பெரிய கலை.
மற்றவர்களுக்கு வேலையை
பிரித்துக்கொடுத்து
பொறுப்பையும் நிர்ணயித்து,
இணைந்து பணியாற்றி
பணியை முடிப்பது
மிகவும் எளிது தான்.
அனைவரையும் அனுசரித்து
இணைந்து பணியாற்றி
வெற்றிக்கனி பறிக்கும் கலையில்
கரைகண்டவர்கள்தான்
சிறந்த தலைவர்களாக
மாறுபட்டு நிற்கிறார்கள்.
அவர்கள் அனைவருமே என்னைப்பொறுத்தவரை
"எப்போதும் வென்றான்"கள்.
No comments:
Post a Comment