எச்சரிக்கை..எச்சரிக்கை
திருச்சி ரயில் நிலையத்திற்கு எதிரில்,
தினத்தந்தி கட்டிடத்திற்கு அருகில்
"யுனைடெட் இந்தியா பில்டிங்" என்ற
உயர்ந்த மூன்றுமாடிக்கட்டிடம் உள்ளது.
எல்ஐசி நிறுவனத்திற்குச்
சொந்தமான இந்த கட்டிடத்தில்
திருச்சி நகரக்கிளை-1
செயல்பட்டு வருகிறது.
கரூர் வைஸ்யா மற்றும்
கார்ப்பொரேஷன் வங்கிகளின்
அலுவலகங்களும் தரை தளத்தில்
இயங்கிவருகின்றன.
கட்டிடத்தை அடுத்து இருக்கின்ற
கார் நிறுத்தும் இடத்தைப்பார்த்தவாறு
ஒரு ATM உள்ளது.
நான் ஒரு நாள் அங்கு
ATM ல் பணம் எடுக்க சென்றேன்.
வாயிலில் காத்திருந்தேன்.
எனக்கு முன்னால்
அறைக்கு உள்ளே
இரண்டுநபர்கள் நீண்ட நேரம்
இருந்தார்கள்.
பிறகு தங்களுக்குள்
பேசிக்கொண்டே
ஒரு ஏமாற்றத்துடன்
வெளியே வந்தார்கள்.
நான் பணம் உள்ளதா
என்று கேட்டதற்கு
அவர்களது கார்டுக்கு
பணம் எடுக்கமுடியவில்லை
என்று சொன்னார்கள்.
நான் உள்ளே சென்று
எனது கார்டை உள்ளேவிட்டு
வெளியே எடுத்தேன்.
திரையில்
பணம் எவ்வளவு தேவை
என்று கேட்டது.
நான் ஐயாயிரம்
என்று பதிவுசெய்தேன்.
பணம் நூறுரூபாய்
தாள்களாக வந்தது.
எண்ணிப்பார்த்துவிட்டு
வெளியே வந்தேன்.
எனக்கு முன்னால் நின்றவர்கள்
சென்று விட்டனர்.
அப்போதுதான் எனக்கு
SMS வராததை உணர்ந்தேன்.
என்னிடம் "பின்நம்பர்"
கேட்காததையும் உணர்ந்தேன்.
உடனே உள்ளே சென்று
கார்டைச்செலுத்தி
கடைசி ஐந்து பரிவர்த்தனைகள்
பற்றிய விபரம் பெற
முயற்சித்தேன்.
அந்த மெஷினில்
பேப்பர் ரோல் வைக்கப்படாததால்
அச்சுப்பிரதியும் கிடைக்கவில்லை.
எனது மொபலைப்பயன்படுத்தி
நெட்பாங்கிங் மூலம்,
நடத்திய பரிவர்த்தனைகள் பற்றி
அறியலாம் என்று
என்னுடைய BSNL DATA வை
ஆன் செய்தேன்.
இணைப்பு சுற்றி சுற்றி
வந்ததே ஒழிய இணைப்பு
கிடைக்கவில்லை.
உடனே வீட்டிற்குச்சென்று
BSNL BB பயன்படுத்தி
நெட்பாங்கிங் மூலம்
சரி பார்த்ததில்
எனது கணக்கிலிருந்து
ஐயாயிரம் ரூபாய்
குறைக்கப்படவில்லை.
என்ன நடந்திருக்கிறது என்றால்
எனக்கு முன்னால் சென்றவரின்
கார்டில் பணம் எவ்வளவு தேவை
என்பது குறிப்பிடும்வரை
சரியாக இருந்திருக்கிறது.
அவர்களால் ஏனோ சரியாக
முடித்து வைக்காமல்
பணம் வரவில்லை என்று
ஏமாற்றத்துடன்
திரும்பிச்சென்றிருக்கினர்.
நான் சென்று
என் அட்டையைச் சொருகியபோது
முந்தைய பரிவர்த்தனை
முடித்து வைக்கப்படாத்தால்
என் அட்டையை ஏற்றுக்கொள்ளாமல்
பழைய பரிவர்த்தனைக்கு
எவ்வளவு ரூபாய் என்று
கேட்டிருக்கிறது.
நானும் தொகையை பதிவிட்டதால்
எனக்கு பணம் வந்திருக்கிறது.
உடனே எல்ஐசி
கிளை மேலாளரைத்
தொடர்புகொண்டு
யாராவது ATM க்கு வந்து
பணம் கிடைக்காதது குறித்து
தகவல் தெரிவித்தால்
என்னிடம் கூறச்சொல்லி
வேண்டிக்கொண்டேன்.
மறுநாள் காலையில்
முதல் வேலையாக
அந்த ATM க்குண்டான
வங்கிக்குச்சென்று
கிளை மேலாளரைப்பார்த்தேன்.
எனக்கு பணம் தவறாக வந்தது
குறித்த தகவலைக்கூறினேன்.
பேப்பர் ரோல் இல்லாத
தகவலையும் கூறினேன்.
அவர் நான் சொல்வதை
சரியாகக்கேட்கவேயில்லை.
ATM க்கும் கிளைக்கும்
எந்த தொடர்பும் கிடையாது.
எல்லாம் TATA நிறுவனத்திற்கு
தாரைவார்த்துக்
கொடுக்கப்பட்டுவிட்டது
என்று ஒரு அரசியல் வாதிமாதிரி
பொறுப்பின்றி பேசத்தொடங்கினார்.
ஏன் அவரிடம் போனோம் என்ற
மனநிலைக்கு தள்ளப்பட்டேன்.
இன்று வரை உரியவருக்கு
அந்த பணத்தைக்கொடுக்க
என்னால் இயலவில்லை.
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது...
ஒவ்வொரு முறையும்
ATM லிருந்து வெளியே
வரும்போது ஒருமுறைக்கு
இருமுறை Cancel பட்டனை
அழுத்தி Home screen
வந்துவிட்டதா என்பதை
உறுதிசெய்தபின்னரே
வெளியேற வேண்டும்.
பாதியிலேயே வந்தால்
நமது கணக்கிலிருந்து
வேறு யாராவது பணத்தை
எடுக்க வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment