Thursday, 12 October 2017

ATM ஐ ஏமாத்தணும்.


எசக்கி யும் சொடலையும்
தோள் மேல கையை போட்டு
பேசிட்டே
ஒண்ணா வராவோ.

என்ன நொறநாட்டியம் பண்ணப்போறாவொளோ
தெரியலயே.

அவொ  பேசுதத
ஒளிஞ்சிருந்து
ஒட்டுக்கேப்பொம்.

"ஏல எசக்கி.....
ஒரு அவசரவேலையா
நேத்து காலைல
மதுரைக்கு போனன்டே.

நான் வீட்லயிருந்து
பைக்ல வரும்போது
ATM ல  ஒரு 
பத்தாயிரம் ரூவா 
பணம் எடுத்தேன்.

அந்த
ATM பேதில போவான்
ஐந்து ரெண்டாயிரம் 
ரூவாத்தாளு வருதமாதிரி
ப்ரொக்ராம் பண்ணி
வச்சுருக்காம்டே.

அதுனால எனக்கு
ரெண்டாயிரம் ரூவாத்தாளு
அஞ்சு  வந்துச்சு.

என்னால ஒடனே
எங்கியும் போயி அதை
சில்லறையா மாத்தமுடியல.

விடியக்காலம்பர
ஒரு பயலுவொளும் கடையத் தொறக்கல.

நானும்
வர்றது வரட்டும் னுட்டு
பெரிய பஸ் ஸ்டாண்டு வந்து
வெரசலா போயிரலாம்னு
பைபாஸ் ரைடர் 
பஸ்ல ஏறிட்டேன்.

மதுரைக்கு டிக்கட்
95 ரூவாய்னு
சென்னாவொ.

நான்
ரெண்டாயிரம்  ரூவா தாளை
கண்டக்டர்கிட்ட நீட்டுணேன்.

அவொ  அதுக்கு
எரிச்சல்லாம் படாம
சிரிச்சுகிட்ட
என்ன அண்ணாச்சி..

95 ரூவாய்க்கு பணமா
கொடுக்காம
பாங்கு DD யை தாரேள.

DD ல்லாம் வாங்குததுக்கு
எங்க மேலாபீசுலயிருந்து
இதுவரைக்கும் 
உத்தரவு  ஒண்ணும் போடலய
அண்ணாச்சின்னு
சொன்னாவொ.

நான் ATM காரனை
ஏசிக்கிட்டே..

நான் வந்து 
மதுரையில எறங்கும்போது
மீதியை வாங்கிக்கிறம்
தம்பி ன்னு
சொன்னேன்.

அப்பமும் ஒங்ககிட்ட
சில்லறை சேரலண்ணா
நாங் கீள  எறங்குனதும்
எங்கியாவது

சில்லறையா
பொறட்டி தந்துட்டு
ரெண்டாயிரம் ரூவாத்தாளை
திரும்பி வாங்கிக்குறேன்
தம்பின்னு சொன்னேன்.

கண்டக்டர் என்னப்பாத்து

கவலப்படாதீய..

சில்லறை நோட்டு
சீக்கிரம் வந்துரும்.

வந்ததும் நானே தாறேன்.

கவலப்படாதீயன்னு
பொறுமையா சொன்னாவொ.

என்ன மாதிரியே
நாலஞ்சு வேரு
ரெண்டாயிரம் ரூவாத்தாளை
கொடுத்திருக்காவொ.

அந்த பொறுமைசாலி
கண்டக்டரு கோயில்பட்டி தாண்டுனதுமே பாக்கி யை
எல்லாருக்கும் பைசல்
பண்ணிட்டாவொ.."

"சொடலை சொல்லுததை
பாத்தா நம்மகிட்ட
எப்போதும் சில்லறை
தாராளமா இருக்கணும்னு
தோணுது"

"ஆமடே..எசக்கி
இதுக்குத்தான் 
நம்ம கூட காலேஜ்ல ஒண்ணா  படிச்சாவொளே ஒரு தெங்காசிக்காரவொ..

அவொ பேரு நல்ல பேருல்லா..
ஆங்.. பரிமேலழகன்.

அவொ ஒரு  யோசனை சொன்னாவொ."

"என்ன யோசனைன்னு
சட்டுபுட்டுன்னு
சொல்லித்தொலையும் வே"

"அதாவது எசக்கி..

பத்தாயிரத்துக்கு பதுலா
9900 ன்னு ATM ல
பணங்கேட்டா அதுக்கு

2000 த்துல 4 தாளும்,
500 ல 3 தாளும்
100 ல 4 தாளும்ன்னு

நமக்கு வரும்.

நம்ம சிக்கல்
ஒருமாதிரி
தீந்தமாதிரியிருக்கும்னு
தன்னோட
அனுபவத்தை வச்சு
சொன்னாவொ"

"சொடல சொல்லுதமாதிரி

"பரி" யோசனையை
கேட்டு நடந்தா நாம
யாரு முன்னாலயும்
"பரி"தாபப்பட்டு
நிய்க்கவேண்டாம்.
இனி அப்பிடியே
100 ரூவாய் கொறச்சே
ATM ல பணம்
எடுப்போம்வே"

பரி சொன்னது

சரி......
ரொம்ப சரி.

ரொம்ப...
ரொம்ப... சரி.

மார்க்கே முன்னுரிமை

"ஏல...எசக்கி
என்னல  நீ
தன்னால பேசிகிட்டு
ஜாலியா வார.."

"ஆமவே ..சொடல..
சந்தோசமாத்தாம் வே
இருக்கேன்."

"என்னல சங்கதி?"

"இன்னைக்கி
நாங்க படிச்ச
பள்ளிக்கூடத்துக்கு
போயிருந்தோம்.

"எட்மாஸ்டர் சாமிகிட்ட
எங்க வாத்தியாரை  பத்தி
ராஜாக்கள் தெரு குமாரு
எடுத்து வுட்டான்.
அவருக்கு ஒரே ஆச்சரியம்"

"அப்படி என்னல
அந்த குமாரு
சொல்லிட்டாவொ"

" எங்க சார்வாள்
யாரும் தனியா
ட்யூஷன் படிக்கக்கூடாதுன்னு
சொல்லுவாவொ.

ஆனா
வீக்கா இருக்கொவள
அவொவீட்டுக்கு வரச்சொல்லி சல்லிக்காசு வாங்காம சொல்லிக்கொடுப்பாவொ."ன்னு
சொன்னாவொ.

எட்மாஸ்டர் அப்புடியே
அசந்துட்டாவொள்ளா."

"வேற என்ன சொன்னாவொ
ஒம்ம  குமாரு ?"

"எங்க சார்வாள்
ஒவ்வொரு பையங்களையும்
ஒரு ரூவாய்க்கு
வேறவேற
கதை பொஸ்தம்
ஒண்ணு வாங்கிட்டு
வரச்சொல்லுவாவொ.

ஒவ்வொரு
திங்கக்கெளமையும்
எல்லாப் பையங்களும்
பொஸ்தகத்தை
மாத்திக்கணும்.

ஒரு வருசத்துல
நாப்பது வேரும்
நாப்பது  பொஸ்தவத்தையும்
படிச்சு முடிச்சிருவாவொ.

கடைசியல
அவனவன்
பொஸ்தவத்தை
அவன்அவன்
எடுத்துக்கணும்.

இப்படில்லாம் செஞ்சு
எல்லோருக்கும் 
பொஸ்தவம் படிக்கிற
பளக்கத்தை
உண்டாக்குனாவொன்னு
சொன்னா வொ"

"எட்மாஸ்டரு சாமி என்ன
சொன்னாவொ?"

"இது நல்லாயிருக்கே ன்னு
ஆச்சரியப்பட்டாவொ"

"குமாரு  வேற என்ன
சொன்னா வொ"

"அடுத்தால
குமாருக்கு பதுலா
நமசிவாயம் பேசுனாவொ.

பள்ளிக்கூடத்துலேய
ஒவ்வொரு பையங்கிட்டயும்
இருக்க தெறமையை
ஏத்திவிடுததுக்கா
பாட்டுபடிக்க
இசையமைக்க
டான்ஸ் ஆடன்னு
வாய்ப்பு தருவாவொன்னு
சொன்னாவொ.

எட்மாஸ்டரும்
அப்படியான்னு
கேட்டுட்டு
இதெல்லாம் எப்போ
பண்ணுவியொன்னு
கேட்டாவொ.

வாரத்துல ஒருநாளு
கடைசி பீரியடுல
பண்ணுவம்னு
நமசிவாயம்
சொன்னவொ"

"இந்த பாட்டு படிச்சது
தாளம்போட்டதுல்லாம்
யாருடே.

ஒனக்கு ஞாவகம்
இருக்கால எசக்கி?"

" நல்லா ஞாவகம்
இருக்குவே.
ஸ்ரீ மூலநாதனும்
ரங்கராஜனும்
பாட்டு படிப்பாவொ.

விஜயனும்
ராம்பிரசாத்தும்
தபேலா
வாசிப்பாவொ.

இந்த குமாரு
நல்லா
டானஸ்
ஆடுவாவொ?"

"வேற என்னவெல்லாம்
எட்மாஸ்டர்கிட்ட
சொன்னீயொ"

"ஒவ்வொரு
கிளாசுப் பையங்களும்
கிளாஸ் மேகசீன்
ஒண்ணு சொந்தமா
தாயாரிக்கணும்.

ஸ்கூல்ல
செறந்த மேகசீனுக்கு
பர்ஸ்டு செகண்டுன்னு
பிரைசெல்லாம்
கொடுப்பாவொ.

எங்க கிளாசுக்கு
பல தடவை பிரைசு
கெடச்சிருக்கு.

நல்லா
படம் வரையிறவொ
படம் வரஞ்சு
கொடுப்பாவொ.

கொஞ்ச பேரு கட்டுரை
வெள்ளை தாளுல
எழுதிக்கொடுப்பாவொ.

நல்ல கையெழுத்து
இருக்கவொ
இதையெல்லாம்
ஒவ்வொரு பக்கத்துலயும்
எழுதித்தருவாவொ.

கலர் கலரா
வில்லை வேங்கி
அதை தண்ணியில கரச்சு
டூத் பிரசை அதுல முக்கி
அதால  தலைசீவுத
சீப்புக்குமேலயோ,
சின்ன ஓட்டை உள்ள
வலைமேலயோ
வச்சு தேச்சு
ஒவ்வொரு டிசைனுல
ஒவ்வொரு பக்கத்தையும்
அளகு  படுத்துவோம்னு
சொன்னோம்.

எட்மாஸ்டருக்கு
சந்தோசம் தாங்கல"

"எசக்கி சொல்லுததை
கேக்க எனக்கு
ரொம்ப சந்தோசமா
இருக்கு.

அப்பொல்லாம்
படிப்புக்கும் முக்கியம்
கொடுத்திருக்காவொ.

வேற தெறமைக்கும்   முக்கியம்  கொடுத்திருக்காவொ.

இப்ப உள்ள
வாத்தியாரு மாருஞ் சரி
புள்ளய பெத்தவொளும் சரி
எல்லாரும் மார்க்குக்குல்லா முக்கியம் கொடுக்காவொ.

இந்த எண்ணத்தை
நஎல்லா மாத்திகிட்டு 
எல்லா தெறமையையும்
வெளிய கொண்டு வரமாதிரி
கல்வி முறையை
மாத்தணும்டே.

அப்பத்தான்டே படிப்பு
நல்லாயிருக்கும்.

ஆனா நடக்குமான்னு
தெரியல..
என்னத்த பண்ண முடியும்
நம்மால."

சொடல சொல்லுத மாதிரி
கல்வி மொறை மாறணும்.

மாறுமா?

சொந்த புத்தி..சொல்புத்தி

"யோவ்... சொடலை..

இன்னய்க்கு நம்ம
ஆபிசுல வேலை பாக்குற
ஆயிரத்தான பாத்தேன்வே.

மெடிக்ளைம்ல
நாம விருப்பட்டா
காப்புத்தொகை
அம்பது லட்சம் ரூவா வரை  எடுத்துக்கலாமாம்.

மொத்த குடும்பத்துக்கும் மருத்துவச்செலவு
வருசத்துக்கு
அம்பதுலச்சம்வரை
பாதுகாப்பு உண்டாம்."

" அதுக்கு நீ என்னல
சொன்ன?"

"நான் வந்து
அதுல்லாம் எங்களுக்கு
வேண்டாம் யா.

இப்ப இருக்க
கொறைஞ்சபச்ச
எட்டுலச்சமே
எங்களுக்கு போதும்னு
சொல்லிட்டேன்.

இருக்க செலவுல
இதுவேற
தெண்டச் செலவான்னு
சொன்னேன்.

ஒம்ம இஷ்டமுன்னு
சொல்லிட்டு வெரசலா
ஓடிப்போயிட்டான்
அந்த ஆயிரத்தான் பயா.

நாஞ்சொன்னது அந்த
பயலுக்கு புடிய்க்கலன்னு
நெனய்க்கேன்.

நீரு  இதப்பத்தி
என்னவே
நெனய்க்கேரு."

"முந்தி புதுசா
PF க்கு பதுலா பென்ஷன்
கொணாந்தப்போ
நீ பெரிய
அதிமேதாவிங்கிற
நெனப்புல
பென்சன் வேண்டாம்,
PF தான்  வேணும்னு
பென்ஷனுக்கு
கையெழுத்து போடாம
இருந்துட்டு
இப்போ மூக்கால
அளுதுகிட்டுஇருக்க.

பாக்குற எல்லா
யூனியன் காரவொளையும்
இன்னொரு தடவை
விருப்பம்  கேக்கதுக்கு
ஏற்பாடு பண்ணுங்கன்னு
வாணால  வாங்கிட்டு இருக்க.

ஒனக்கு சொந்தபுத்தியும்
கெடையாது.
சொல்புத்தியும்
கெடையாது.

எல்லாம்  எனக்கு
தெரியும்ங்க
திமிரு ஒனக்கு.

ஆனா
ஒனக்கு ஒரு மண்ணும்
தெரியாதுங்குறது
எங்க எல்லாத்துக்கும்
நல்லாத்தெரியும்.

நம்ம ஆபீசுல
ஒருத்தரு..
போனதடவை
முப்பதுலச்சம் வரை
மெடிக்கிளைம்
காப்புத்தொகைக்கு
விருப்பங்கொடுக்கலாம்னு
சல்க்குலர் வந்தப்போ
எனக்கு அவ்வளவுல்லாம்
எதுக்கு..வேண்டாம்.

நான் நல்லா
திடுமங்காளை மாதிரி
இருக்கேன்.
என்னோட பெஞ்சாதி
என்ன விட ஆரோக்யமா
இருக்கா.

ஒடம்புல
ஒரு கொறையும்
இதுவரை இல்லை.

இந்த எட்டு லச்சமே 
எங்களுக்கு அதிகம்னு
அடிச்சு சொல்லிட்டாரு.

கொஞ்சநாள்லயே 
இதயக்கோளாறு வந்து
ரொம்ப  செலவாச்சு..

ஆசுபத்திரி செலவு
கைய கடிச்சுட்டு்.

இப்ப அவரு  பண்ணுன
தப்பை  நெனச்சு
நெதமும் 
வருத்தப்படுதாரு.

இன்னொருத்தரு 
இதமாதிரியே  புடிவாதமா 
சொன்னாரு.

திடீர்னு ஒடம்பு
சரியில்லாம போச்சு.

வீட்டுல  உள்ளவொ
ஒரு தனியாரு  ஆசுபத்திரியில
போயி சேத்தாவொ.

இன்சூரனஸ்  இருக்குன்னு  சொன்னதும்  ராஜமரியாதயோட  கவனிச்சாவொ.

ஒடம்பு சரியாவல.

பில்லு எட்டு லச்சம் 
தாண்டுனதும்
இனி இங்க இருக்கதுல
எந்த பிரயோஜனமும்
இல்லை.

அதுனால
கெவர்மெண்டு ஆசுபத்திரிக்கு கொண்டுபோங்கன்னு
சொல்லி
மேக்கோண்டு
ரெண்டு லச்சம் ரூவாய்க்கு
பில்லு வேற போட்டுட்டாவொ.

பொறவு என்னா..
கெவர்மெண்டு ஆசுபத்திரிக்கு கொண்டுபோனாவொ.

ரெண்டுநாள் களிச்சு
மேலயும் போய்
சேந்துட்டாவொ.

இப்போ
அவொ  வீட்டுல
லபோ திபோங்குறாவொ.

முப்பது லச்சத்துக்கு 
விருப்பம் தெரிவிச்சுருந்தா
அவொ உயிரை
காப்பாத்தி யிருக்கலாம்னு
கதறி அழுதாவொ.

பாவமா இருந்துச்சு.

இந்த இன்ஷூரன்சால
எனக்கு என்ன
கெடைய்க்கும்னு
நெனய்க்கக்கூடாதுடே.

எதுனாச்சும் வந்தா
மருத்துவ பாதுகாப்பு 
இருக்குங்கிற 
நம்பிக்கையே 
ஒடம்பை
நல்லாயிருக்க வைக்கும்.

நம்ம மாதிரி
வயசானவொளுக்கு
கட்டாயம் கண்ணுல 
கேட்ராக்ட் வரும்.

ஒரு கண்ணுல
ஆப்பரேஷன்
பண்ணுனாலே
நாலு வருசங்கட்டுன
பிரிமியம் கிளைமா
திரும்பி வந்துரும்.

ரெண்டாவது  கண்ணுலயும்
பண்ணும்போது
இன்னம் நாலு வருச  பிரிமியம்  சரியாயிரும்.

ஒனக்கு
ஒரு செலவுமே 
வரலன்னா
மொகந்தெரியாத
பலருக்கான கிளைமுக்கு
நன்கொடை  கொடுத்தமாதிரி
மனசார சந்தோசப்படுடே.

இப்படி
பெரிய மனசோட
நெனைச்சுப்பாருடே.

இதை விட்டுட்டு
வேறமாதிரி  வில்லங்கமா
நெனய்க்காதடே"

"சொடலை சொல்லுத
பாயிண்டு இப்பத்தாம்யா
என்னோட மர மண்டையில
ஏறுது.

ஒடனயே ஓடிப்போயி
அம்பது லச்சம் ரூவா 
காப்புத்தொகை 
கட்டாயம்  வேணும்னு  கையெழுத்துப்போட்டு குடுக்கப்போறன்.

நல்லவேளைய்யா 
நான் இப்ப ஒம்மை
இங்க பாத்தேன்.

அதுனால தப்பிச்சேன்."

Sunday, 1 October 2017

சேரசோழபாண்டியன்

இந்த எசக்கிப் பயா
ஏங்கிட்ட வந்து
சரித்திரம் திரும்புதுவே
சொடலை ன்னு சொன்னான்.

எப்பிடில இப்புடி
சொல்லுதன்னு
கேட்டேன்.

ச-தி அணி
சோழர்களாம்..

ஓ.பி.எஸ். அணி
பாண்டியர்களாம்..

ஈ.பி.எஸ் அணி
சேரர்களாம்.

நடப்பது
பாண்டியர் ஆதரவுடன்
சேரர் ஆட்சி யாம்.

இந்த எசக்கிப்பயா
இப்பிடி சொல்லுதாம்.

இந்த மூதேவியை
என்னத்த சொல்ல..

விட்டா 
வட பகுதி மாநிலத்து
பல்லவர்களும்
ஆதரவும்பாம்.

பிஜேபி ஆதரவை
கனக விஜயர்
ஆதரவுன்னு
சொல்லப்போறாம்.

ரஜினி ஆதரிச்சா
வீரசிவாஜி
ஆதரவும்பாம்
போல இருக்கு.

இந்த கருமத்தை
எங்க போயி
சொல்லி அழ...