"ஏல எசக்கி என்னல
ஒன்ன ரொம்பநாளா
ஆளை காணல..
எங்கல போய்த்தொலஞ்ச" ன்னு
கேட்டுக்கிட்டே
சேக்காளி சொடல வந்தான்.
நாஞ்சொன்னன்
"ஒமக்கென்னவே
திண்ணுட்டு திண்ணுட்டு
படுத்தொறங்குவேரு..
நாங்க என்னா அப்படியா..
எங்க பேரப்புள்ள
அசலூர்ல இருந்து
ஒரு வருசத்துக்கு பொறவு
இப்பத்தான் வந்துருக்காரு.
அவரோட எனக்கு
நேரம் போவுது.
அதுனாலத்தாம்யா
அவ்வளவா வெளிய வரல"
"சரி சரி..
அந்த எல்ஐசில
வேலபாக்குற
முத்துக்குமாருட்ட
பேசிக்கிட்டிருந்திய
என்னல சேதி" ன்னு
சேக்காளி கேட்டான்.
"அந்த வயித்தெரிச்சல
ஏமுய்யா கேக்கேரு..
அவொ ஒரு புல்லட்
டக்குமோட்டார்
நல்ல செவப்பு ரெட்டு
கலருல
வச்சுருந்தாவொள்ளா..
அதை சர்வீசுக்கு
விட்டாவொளாம்.
அறுபதாயிர ரூபாய் கிட்ட
செலவாகும்னு மெக்கானிக்
சொன்னதுக்கு இவொளும்
சரின்னு தலயாட்டிட்டு
வந்துட்டாவொளாம்.
ஒருவாரம் கழிச்சு வண்டிய
வாங்கப் போவும்போது
எம்பதாயிரம் ஆச்சுன்னு
கேள்விப்பட்டதும் தாம்தூம்னு
குதிச்சிருக்காவொ.
மெக்கானிக்கு கணக்கெல்லாம்
சரிதாமுன்னு சொன்னாராம்.
அந்த கதையத்தான்
முத்துக்குமாரு
ஏங்கிட்ட சொல்லிட்டு
இருந்தாருவே.
ஒமக்கு அதுக்குள்ள
மூக்கு வேத்து
ஏங்கிட்ட கேக்கீரு" ன்னு நான்
பதில் சொன்னேன்.
இந்த டக்கு மோட்டார
ஒக்குடாம
அப்படியே வித்தாலும்
எம்பதாயிரம் ரூபாய்
வரை உறுதியா
கெடய்க்கும்.
இப்ப ஒக்குட்டதுக்கு
செலவு பண்ணுன
எம்பதாயிரத்தையும்
வண்டிந விக்கிற
எம்பதாநிரத்தையும்
சேத்துவருத
ஒருலச்சத்து அறுபதாயிரம் ரூபாய்ல
புது புல்லட்டே
வாங்கியிருக்கலாம்ங்க
என்னோட கருத்த
முத்துக்குமாருகிட்ட
சொன்னதுக்கு
அவொளும்
அப்படிச் செஞ்சிருக்கலாந்தான் னு
பதில் சொன்னாவொ.." ன்னு
சேக்காளிகிட்ட சொன்னேன்.
இதுக்கு சேக்காளி சொடல
"ஏல எந்த ஒர்க்ஷாப்புல ஒக்கிட்டாவொ"ன்னு
ஏங்கிட்ட கேட்டான்.
"இந்த திருச்செந்தூர் ரோட்டுல
சத்திரத்துக்கு பக்கம் வருத வெலக்குல ஒரு மைதானம்
வருதுல்லா
அதுக்குள்ள போனா
ஒரு முக்குல
கேட்வாசல் ஒண்ணு வரும்.
அதுகழிஞ்சு ஒரு மூணு கடை
வருசையாயிருக்கும்.
அதுல
நடு செண்டர்ல இருக்க
கடைதாம்யா
அந்த மெக்கானிக் கடை" ன்னு
சொன்னேன்.
இதுக்கு சொடலை சொண்ண
வெளக்கத்தை வெவரமா
கேளுங்க.
அவஞ் சொன்னது..
"அந்த பயலா..
ஏ..அவன் நம்ம
மார்க்கெட் கணக்கப்பிள்ளை
பலவேசம்பிள்ளையோட
சின்ன மவன் பிச்சுமணில்லா...
அவன் ஒரு எம காதகன்டே.
நல்ல ஒக்குட்டு
வண்டிய கண்டிஷனா திருப்பி
தருவான். இன்னொரு
அஞ்சு வருசத்துக்கு
தலவலி கெடையாது.
ரூவாய் மட்டும் கொஞ்சம்
அதிகமா கேப்பான்.
கேட்டாலும்
கேட்டத தாராளமா கொடுக்கலாம்.
வேல அவ்வளவு
சுத்தமாயிருக்கும்.
முத்துக்குமார்ட்ட வருத்தப்படவேண்டாமுன்னு
நாஞ்சொன்னதா சொல்லுல.
முத்துக்குமாரு
ஒசரத்துக்கும்
ஒடம்புக்கும்
புல்லட்ல வந்தா
தோரணயாவுல்லா யிருக்கும்.
எங்கள் தங்கராஜா படத்துல
பட்டாக்கத்தி பைரவனா
சிவாஜி வருதமாதிரி
அவ்வளவு அருமையா
இருக்கும்.
இந்த தோரண
வேற எந்த
வண்டியலும் வராதுடே.
எங்க காலத்துல
அதாவது அம்பது
வருசத்துக்கு முன்னாடி
புல்லட் டக்குமோட்டார் சத்தம்
கேட்டா வாரவோ
ஒண்ணு
போலீசு இன்ஸ்பெக்டரா
இருப்பாவொ
இல்லண்ணா எல்ஐசி
டெவலப்மெண்ட் ஆபீசரா
இருப்பாவொ..
அந்தக்காலத்துல
இவொ ரெண்டு பேர்தாம்ல
புல்லட்டுல வருவாவொ"
சே..சே...
இந்த சொடலை தாம்
எவ்வளவு விஷயம்
கையில வச்சிருக்கான்.
சேக்காளி..
சேக்காளி தாம்யா..