இது
ஏஞ்சேக்காளி சொடல
சொன்னது.....
அதிமுகவுல
பன்னீர் அணின்னும்
பழனிச்சாமி அணின்னும்
தினகரன் அணின்னும்
இருப்பது நம்ம எல்லாருக்கும்
நல்லாவே தெரியும்.
இந்த அணிகள்ல
சட்டமன்ற பாராளுமன்ற
உறுப்பினர்கள் இருக்காவொங்கதும்
நல்லாவே தெரியும்.
இன்னொரு அணியும்
இருக்குங்கது ஒமக்கு
தெரியுமாவே...
இந்த அணியில
ச.ம.உறுப்பினர்கள் கிடையாது.
பாராளுமன்ற உறுப்பினர்கள்
கிடையவே கிடையாது.
ஆனால் எம்ஜிஆர் மேல
ஜெ. மேல பயித்தியமா
நெறைய பேர்
இருக்கானுவன்னு
தெரியுமில்லா..
இன்னைக்கு
நம்மூர்ல ஆனித்தேரோட்டம்
நடக்குதுல்லா..
அப்போ நெறய
ஃபிளக்ஸ் போர்டுல்லாம்
தேரோட்டத்தை ஒட்டி
ரெட்டை எலைக்காரங்க
ரொம்ப வச்சுருந்தானுவொ.
அதுல பன்னீர் படம்
போட்டு கொஞ்சம்.
பழனிச்சாமி சசிகலா
படத்த போட்டு கொஞ்சம்.
சசிகலா தினகரன் படத்தை
போட்டு கொஞ்சம்..
இதெல்லாம் இல்லாத
வேற சில போர்டுகள்
வச்சுருந்தானுவொ.
அதுலல்லாம்
எம்ஜிஆரு படமும்
ஜெ படமும் மட்டும்
தான் இருந்துச்சு.
இந்தமாதிரி அப்பாவி
ஆளுங்க இன்னமும்
நெறய இருக்கானுவொ.
இது இப்பத்தான்
ஏம் மரமண்ணடைக்கு
புரிஞ்சுச்சு.
இவனுவ அந்தக்காலத்துல
அடிபட்டு மிதிபட்டு
கைக்காச செலவளிச்சு
வளத்த கச்சிதாம்வே
திமுகவும் அதிமுகவும்.
இவங்கள
இப்ப நெனச்சாலும்
புல்லரிக்குதுவே.
இவனுவ எல்லாரும்
இன்னக்கும்
அதேமாதிரி
பச்சப்பரதேசியாத்தாம்வே
இருக்கானுவொ.
No comments:
Post a Comment