யாசிக்கவேண்டாம்.
யோசிக்கவேண்டும்.
••••••••••••••••••••
திருச்செந்தூரிலிருந்து
ஸ்ரீவைகுண்டம் கிளை
பிரிக்கப்படுவதற்கு முன்
ஒரு நாள் ......
வளர்ச்சி அலுவலர்
ஒருவருடன் அந்த பகுதியில்
சுற்றுப்பயணம்.
ஒரு குறிப்பிட்ட
ஊரைக்கடக்கும்போது
"சார்..இந்த ஊர்
மிகவும் மோசமான ஊர்.
இந்த ஊரைக்கடக்கும்போது
கவனமாக கார் ஓட்டவேண்டும்.
கவனக்குறைவாக இருந்தால்
இரண்டாயிரம் ரூபாயை
தனியாக நாம்
எடுத்துவைத்துக்
கொள்ளவேண்டும்"
என்றார்.
எதற்காக என்றேன்.
"இங்கு பழனியாச்சி என்று
ஒரு பாட்டி இருக்கிறார்.
கோழி வளர்த்து வருகிறார்.
நமது காரின் வேகத்தில்
கோழி அடிபட்டு
இறந்துவிட்டால்
கண்ணகி மாதிரி
கதறி அழுது
நியாயம் கேட்பாள்.
"இந்த ஒரு
கோழியைத்தான்
என் செலவுக்கு
நம்பியிருக்கிறேன்.
தினமும் அது
முட்டையிடும்.
அவற்றை அடைகாக்க
வைப்பேன்.
அவை குஞ்சுகள்
பொறிக்கும்.
குஞ்சுகள் வளர்ந்து
பல முட்டைகளிடும்.
அந்த முட்டைகளும்
குஞ்சுபொறிக்கும்..
என்று தொடர்ந்து
முட்டை, குஞ்சு என்று
சொல்லிக் கொண்டே
அழுவாள்.
இந்த ஒரு கோழி மட்டும்
உயிரோடு இருந்தால்
இந்த வருட முடிவில்
எனக்கு ரூ. பத்தாயிரம்
கிடைத்திருக்கும்.
இப்படிப்பட்ட கோழியை
கொன்றுவிட்டீர்களே
பாவிகளா?" என அழுது
புலம்பிவிடுவாள்.
நம்மை அங்கும் இங்கும்
நகரவிடமாட்டாள்.
ஊர்க்காரர்களும் பாட்டி
சார்பாகவே பேசுவார்கள்.
நாம் 2000 ரூபாயாவது
கொடுத்தால் தான்
நம்மை விடுவார்கள்"
என்று வளர்ச்சி அலுவலர்
கூறினார்.
இதே மாதிரி
ஒரு சம்பவத்தின்
விளக்கத்தை
நான் கொல்லத்தில்
இருந்த போது எனது
கிளைமேலாளர்
திரு KV Mathews sir
முகவர் கூட்டத்தில்
பேசக்கேட்டிருக்கிறேன்
என்று கூறினேன்.
அந்த சம்பவத்தின் நாயகி
எலியம்மா சேச்சி.
இந்த சம்பவத்தின் நாயகி
பழனியாச்சி பாட்டி.
அவ்வளவுதான்.
எல்லா ஊர்களிலும்
இதைப்போன்று
வசூல் செய்யும்
வயதான பாட்டி மார்
நிறைய இருக்கின்றனர்
போலும்.
சுற்றுப்பயணம்
முடிந்ததும்
முகவர் கூட்டம் ஒன்று
நடைபெற்றது.
அனைவருமே புத்தம்புது
முகவர்கள்.
கூட்டத்தில் பேசும்போது
முகவர் சந்திக்கும்
வாடிக்கையாளரின்
உயிருக்கு என்ன விலை
இருக்கும் என்று கேட்டேன்.
எல்லோரும் முழித்தனர்.
காலையில் கேட்ட
பழனியாச்சி சம்பவத்தை
உருக்கமாக அவர்கள் முன்
எடுத்து வைத்தேன்.
அது ஒரு ஏமாற்றுவேலை
என்பதை தவிர்த்து வேறு
ஏதாவது செய்தி இருக்கிறதா
என்று கேட்டேன்.
இரண்டிற்கும் ஒரு
தொடர்பிருக்கிறது
என்றேன்.
வாடிக்கையாளர்
ஒருவர் எதிர்பாராமல்
இறந்துவிடுகிறார்.
குடும்பத்தின் வருமானமும்
இறந்து விடுகின்றது.
குடும்பம் தத்தளிக்கிறது.
முன்பு வந்த வருமானத்தில்
பாதியளவாவது
இப்போது இருந்தால் தான்
குடும்பம் முன்னேற முடியும்.
அந்த பாதியளவாவது
வேண்டுமென்றால்
எவ்வளவு முதலீடு
வங்கியில் இருக்கவேண்டும்.
அந்த முதலீட்டின்
அளவு தான்
ஒருவரது உயிரின்
குறைந்தபட்ச விலை.
ஒரு சாதாரண கோழி.
அதனுடைய உயிரின்
விலை ரூ.2000 என
நிச்சயிக்கப்படுகிறது.
இப்படியிருக்கும்போது
ஒரு நபருடைய
உயிரின் விலையை
ஓரளவாவது நிர்ணயித்து
அதற்கு சமமான அளவு
காப்புத்தொகைக்கு
பாலிசி வழங்கவேண்டாமா?
இந்த மாதம்
எனது முகவராண்டை முடிக்க
ஒரு பாலிசி தேவைப்படுகிறது..
அதற்காக ஒரு பாலிசி
குறைந்த தொகைக்காகவாவது
எடுங்க...
இந்த மாதம் அலுவலகத்தில் ஒரு
புதுவணிகப்போட்டியிருக்கிறது.
அதற்காக எனக்கு
ஒரு பாலிசி கொடுங்கள்
என்று வாடிக்கையாளரிடம்
யாசிக்காமல்,
அவரது மதிப்பைப்பற்றி
யோசித்து
நல்ல தொகைக்கு
பாலிசி வழங்குங்கள்.
சரிதானா நண்பர்களே
No comments:
Post a Comment