1993 களில்
நெல்லை மாவட்டம்
ராதாபுரம் அருகில்
ஒரு கோவிலில்
மதிப்பு மிக்க சிலை ஒன்று
திருட்டு போனது.
திருட்டு போன இடத்தில்
நமது முகவர் ஒருவருடைய
விசிட்டிங்கார்டு தரையில்
கிடந்திருக்கிறது.
அதை காவல் துறையினர்o
கைப்பற்றி விசாரணையைத்
துவக்குகின்றனர்.
அவர் எல்ஐசி முகவர் என்று
தெரிந்து கொள்கின்றனர்.
காவல் துறையினர்
நமது முகவரை
கடுமையாக விசாரித்தனர்.
முகவர் தனக்கு ஒன்றும்
தெரியாது என்று சொன்னதை
காவல்துறை நம்பவில்லை.
வீட்டை எல்லாம்
சோதனை போடுகிறார்கள்.
எல்ஐசி அலுவலகம் வந்து
அவரது வாடிக்கையாளர்களின்
முழு முகவரியையும்
அவரைப்பற்றிய விபரங்களையும்
குறித்துக்கொள்கின்றனர்.
திருச்செந்தூர்
கிளைப்பகுதிகளான
உடன்குடி சாத்தான்குளம்
போன்ற ஊர்களில்
தங்கநகைப்பட்டறைகள்
நிறைய இருக்கின்றன.
அந்தக்காலங்களில்
சில குறிப்பிட்ட வகை நகைகள்
இந்த ஊர்களில் செய்யப்பட்டு
பிற நகரங்களுக்கு விற்பனைக்கு
அனுப்பிவைக்கப்படும்.
முகவரின் கெட்ட நேரம்
அவரது வாடிக்கையாளர்களில்
கூடுதல் நபர்கள் தங்க நகை
தயாரிக்கும் தொழிலாளர்கள்.
ஒருவர் மும்பையில்
நகைக்கடை வைத்துள்ள
ஒரு சிறு வியாபாரி.
இதனால் காவலர்களுக்கு
நமது முகவர்மீதான
சந்தேகம் வலுக்கிறது.
அவரது வாடிக்கையாளர்கள்
விசாரணை வளையத்திற்குள்
கொண்டு வரப்படுகிறார்கள்.
முகவரின் வீட்டை காவலர்கள்
சோதனையிடும்போது
மாதக்கடைசிநாட்களில்
நான் மொட்டையாக
இரண்டு லட்சம் ஐந்து லட்சம்
கண்டிப்பாக கொண்டுவரவும்
என்று கொடுத்திருந்த
தந்தி அட்டைகள் அவர்களுக்கு
கிடைக்கவில்லை.
அவை மட்டும் கிடைத்திருந்தால்
என்னையும் விசாரணை
வளையத்திற்குள் கொண்டு
வந்திருப்பார்கள் .
நமது முகவருக்கு
திருட்டில் தொடர்பு இருக்கும்
என்று மிகவும் உறுதியாக
காவல் துறையினர்
சந்தேகப்பட்டனர்.
பல நாட்கள் துன்புறுத்தி
விசாரிக்கிறார்கள்.
எந்த வொரு வழக்கும்
பதிவு செய்யவில்லை.
அவர்களுக்கும் வேறு தடயம்
ஏதும் கிடைக்கவில்லை.
ஆட் கொணர்வு மனுஒன்றினை
நீதிமன்றத்தில் தாக்கல் செய்து
குடும்பத்தினர் முகவரை வெளியே
கொண்டுவருகிறார்கள்.
இந்த நேரத்தில்
வேறு ஒரு வழக்கில் சிக்கிய
திருடன் ஒருவன்
காவல்துறை விசாரணையில்
ராதாபுரம் கோவிலில்
சிலை திருடியது அவன்தான்
என்று ஒப்புதல் வாக்குமூலம்
கொடுக்கிறான்.
எப்படி துருடன் கையில்
முகவரின் விசிட்டிங்கார்டு
கிடைத்தது என்றும்
அதை ஏன் கோவிலில்
விட்டுச்சென்றான் என்றும்
காவல்துறையினர் தீவிரமாக
விசாரிக்கிறார்கள்.
கோவிலில் சிலை
திருடுவதற்காகச் சென்றவன்
பூட்டியிருந்த வீடு ஒன்றின்
பூட்டை உடைத்து
திறந்து சென்றவன்
அந்தவீட்டினுள்
மிகவும் பாதுகாப்பாக
பகல் வேளையில்
தங்கியிருக்கிறான்.
இரவு தான் கோவிலுக்குள்
நுழைந்திருக்கிறான்.
அந்த வீடு நம் முகவரது
உறவினரின் வீடு.
அந்த உறவினர் முகவருக்கு
மைத்துனர் முறை வேண்டும்.
அந்த மைத்துனர்
நமது முகவரின் வீட்டிற்கு
முன்பு எப்போதோ
ஒரு வேலையாக வந்திருக்கிறார்.
அப்படி வந்த வேளையில்
அத்தானின் விசிட்டிங்கார்டை
பெருமையாக நினைத்து
வாங்கிக்கொண்டு
சென்றிருக்கிறார்.
அந்த கார்டை வீட்டில்
பத்திரமாக பாதுகாத்து
வைத்திருந்திருக்கிறார்.
இந்த விசிட்டிங் கார்டைத்தான்
வீட்டில் பதுங்கியிருந்தபோது
அந்த சிலைத்திருடன் பார்த்து
எடுத்திருக்கிறான்.
காவலர்களைக்குழப்பி
வழக்கை திசைதிருப்பவே
முகவரின் விசிட்டிங்கார்டை
கோவிலில் விட்டுச்சென்றதாக
ஒப்புக்கொண்டிருக்கிறான்.
இவன் சிக்கிய பிறகுதான்
நம் முகவரால் இந்த பெரிய
சிக்கலிலிருந்து விடுபட்டு
வெளியே வர முடிந்தது.
அதற்குப்பிறகு தான்
முகவருக்கு முழு நிம்மதி.
முகவர்களே!!
நமது விசிட்டிங்கார்டுகள்
மிகவும் மதிப்புமிக்கவை.
அவற்றை விளம்பர நோட்டீஸ்
போல் தாறுமாறாக
விநியோகிக்கக்கூடாது.
நன்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே
அதனை கொடுக்கவேண்டும்.
அளந்து அளவாகக் கொடுத்தால்
இப்படிப்பட்ட சிக்கல்களில்
எதிலும் சிக்காமல்
நிம்மதியாக இருக்கமுடியும்.
No comments:
Post a Comment