ஒவ்வொரு ஆண்டும்
செப்டம்பர் முதல் வாரம்
நாடு முழுவதுமுள்ள
எல்ஐசி அலுவலங்களில்
இன்ஷ்யூரன்ஸ் வார விழா
விமரிசையாக
கொண்டாடப்பட்டு
வருகின்றது.
கோட்டங்களில் ஒருநாள்
ஓய்வூதியர்களை வரவழைத்து
பெருமைப்படுத்துவார்கள்.
சென்னையில் இரண்டு கோட்டங்களும் மற்றும் மண்டல
அலுவலகமும் இணந்து
ஓய்வூதியர்களுக்கான
கூட்டம் ஒன்றை
இந்த வருடம் அக்டோபர்
பத்தாம் நாள்
சிறப்பாக நடத்தினார்கள்.
எனக்கு தகவல் வராததால்
என்னால் கலந்து கொள்ள
இயலவில்லை.
ஓய்வூதியம் பெறும்
சக நண்பர்களை பார்க்க
முடியாமல் போனது
மனதிற்கு வருத்தமாகவே
இருந்தது.
நண்பர்கள் என்னிடம்
ஏன் வரவில்லை
என்று ஆர்வமுடனும்
ஏமாற்றத்துடனும்
விசாரித்தார்கள்.
சிலர் அவர்களுக்கும்
அழைப்பு வரவில்லை என்றும்
இருந்தாலும் தகவலறிந்து
கலந்துகொண்டதாகவும்
தெரிவித்தனர்
ஓய்வு பெற்ற
துணைமண்டல மேலாளர்
திரு அருணாசலம் சார்
அவர்கள் ஒரு தகவல் தந்தார்.
அலுவலகத்திலிருந்து
கடிதங்களை ஒட்டிப்போடாமல்
Book - Post ல் அனுப்பியுள்ளனர்
என்றும் அதனால் தான்
உடனடியாகக் கிடைக்கவில்லை
என்றும் கூறினார்.
எனக்கு சரியாகப்புரியவில்லை
என்று கூறினேன்.
அதற்கு திரு அருணாசலம் சார்
அவர்கள், அஞ்சல் அலுவலகத்தில்
5 ரூபாய் தபால் தலை
ஒட்டி போடப்படும் கவர்களை
முன்னுரிமை கொடுத்து
உடனடியாக அனுப்பிவைப்பார்கள் எனவும்
4 ரூபாய் தபால் தலை
ஒட்டி Book Post என்று
குறிப்பிட்டு அனுப்பினால்
அவற்றை ஒரு ஓரமாக
ஒதுக்கி வைத்துவிட்டு
நேரம் கிடைக்கும்போதுதான்
அனுப்புவார்கள்
என்று கூறினார்.
10 ம் தேதிக்கான
அந்த கூட்டத்திற்கு
4ம் தேதி Post பண்ணிய
Book Post அழைப்பிதழ்
எனக்கு 14 ம் தேதிதான்
கையில் கிடைத்தது.
இப்போது தான்
அஞ்சல் அலுவலகம்
எப்படி செயல்படுகிறது
என்ற உண்மை நிலவரம்
எனக்குப் புரிந்தது.
அதற்குப்பிறகு எனக்கு
வரும் அனைத்து
அழைப்பிதழ்களிலும்
Clearance Date & Delivery Date
முத்திரையை பார்க்கத்
தொடங்கினேன்.
ஐந்து ரூபாய்க்கான
அஞ்சல் தலைஒட்டி
அனுப்பட்டிருந்தால்
அந்த கடிதம் மறுநாளே
டெலிவரி ஆகியிருந்தது.
நான்கு ரூபாய்க்கான
அஞ்சல் தலை ஒட்டி
Book Post என்று
அனுப்பப் பட்டிருந்தால்
ஒரு வாரம் தாமதமாகவே
டெலிவரி ஆகியிருந்தது.
எனவே நண்பர்கள்
1 ரூபாய் சேமிப்பிக்க
நினைக்காமல்
அழைப்பிதழ்களை
5 ரூபாய் தபால் தலை
ஒட்டியே அனுப்பும்படி
கேட்டுக்கொள்கிறேன்.
எல்ஐசி அலுவலகத்தில்
ஒவ்வொரு கிளையிலும்
மாதம் பத்தாயிரம்
பிரிமியத் தவணைக்கான
அறிவிப்புக்கடிதங்கள்
அஞ்சலில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
நிறைய வாடிக்கையாளர்கள்
தங்களுக்கு அறிவிப்புகள்
வருவதில்லை என்று
புகார் செய்வார்கள்.
ஏன் கிடைக்கவில்லை
என்று இப்போது தானே
காரணம் புரிகிறது.
நான் பள்ளி மாணவனாக
இருந்த காலத்தில்
புத்தாண்டு, பொங்கல்
வாழ்த்துக்கள் நிறைய
அனுப்புவது வழக்கம்.
விழாக்காலங்களில்
இந்த்கூடுதல் பணிக்காக
கூடுதலாக தற்காலிக
பணியாளர்கள்
நியமிக்கப்படுவார்கள்.
அவர்கள் மூலம் பணி
விரைவுபடுத்தப்பட்டு
தபால் பெட்டியில்
போடப்பட்ட மறுநாள் அல்லது
இரண்டாவது நாள் பட்டுவாடா
என்பதை உறுதி செய்தனர்.
அதெல்லாம் ஒரு
கனாக்காலம்.
இப்போது நிர்வாகத்தால்
கூடுதல் பணியாளர்களை
நியமிக்க அனுமதியில்லை.
இதனால் பட்டுவாடா
மிகத் தாமதமாகிறது.
வாடிக்கையாளர்கள்
வெறுத்துப்போகிறார்கள்.
எனவே தனியார்
கூரியர் நிறுவனங்களை
நாடுகிறார்கள்.
தனியார் நிறுவனங்கள்
அதிகமாக பணம் வாங்குகிறார்கள்.
அஞ்சல் துறையில்
ஐந்து ரூபாய் செலவில்
நாடுமுழுவதும் கடிதம்
அனுப்பலாம்.
இதே கடிதத்தை அனுப்ப
கூரியர் நிறுவனங்கள்
தமிழ்நாட்டிற்கு 40 ரூபாய்,
அண்டை மாநிலங்களுக்கு 50 ரூபாய,
வடமாநிலங்களுக்கு
60 ரூபாய் என அநியாயமாய்
வசூலிக்கிறார்கள்.
இதனால் அவர்கள்
கொழுத்து வளர்கிறார்கள்.
அஞ்சல் துறை இளைத்துப்போகிறார்கள்.
வணிகப்பங்கையும்
நிரந்தரமாக
இழந்து போகிறார்கள்.
அந்த அரசாங்கமும் சரி,
இந்த அரசாங்கமும் சரி,
எந்த அரசாங்கமானாலும்
கூட்டணி அமைத்து
அஞ்சல் துறையை
கொலைசெய்கிறார்கள்.
நாம் தான்
கண்ணால் பார்த்து
கண்ணீர் விடும்
கையாலாகாதவர்கள்.
No comments:
Post a Comment