Tuesday, 13 March 2018

மகளிரை போற்றுவோம்

நெல்லையில் 2003-06 ல்
வணிக மேலாளராக
பணிபுரிந்ந காலம்.

கோவில்பட்டி கிளையில்
திரு நெப்போலியன் என்று
ஒரு முகவ நண்பர்.

சிறிய சிறிய தொகைகளுக்குத்தான்
பாலிசி வழங்குவார்.

அவரது வாடிக்கையாளர்களில்
95 % தொழிலாளர்கள் தான்.

ஆயத்த ஆடைகள் தயாரிக்கும்
தையற்கலைஞர் கள்.

பொதுவாக கணவன் மனைவி
இருவருமே இந்த வேலையில்
ஈடுபட்டிருப்பார்கள்.

கணவன்மார்களுக்கு காப்பீட்டுப்
பாலிசி வழங்கும்போது
அவர்களின் இல்லத்தரசிகளின்
எதிர்ப்பை எதிர்கொள்வது
முகவர்களுக்கு ஒரு பெரிய சவால்.

நண்பர் திரு நெப்போலியன்
ஆண்களிடம் விவாதிக்கும்போது
அவர்களிடம் தரமான
வயதுச்சான்றிதழ் இருந்தால்
அதனை சாதகமாக
பயன்படுத்திக்கொள்வார்.

அந்த காலகட்டத்தில்
கணவனுக்கும் மனைவிக்கும்
சேர்த்து ஒரே பாலிசி வழங்கக்கூடிய
Joint Life Endowment எனப்படும்
திட்டம் அமுலில் இருந்தது.

பாலிசிகாலத்தில் யாராவது
ஒருவர் இறந்துவிட்டாலும்
காப்புத்தொகை கிடைக்கும்.

பாலிசியின் முதிர்வு வரை
செலுத்தவேண்டிய பிரிமியம்
தள்ளுபடி செய்யப்படும்.

காப்புத்தொகை வழங்கிய பின்னரும்
மற்றவருக்கு காப்பீடு பாலிசி
முதிர்வுகாலம் முடிய தொடரும்.

இந்த திட்டத்தைத்தான்
திரு நெப்போலியன் அவர்கள்
அவரது வாடிக்கையாளர்களுக்கு
வழங்குவார்.

கணவரின் பாலிசியை
சாதாரண முறையில் எடுத்தால்
வரும் பிரிமியத்தை விட
10% கூடுதல் பிரிமியத்தில்
கணவன் மனைவி இருவருக்கும்
விபத்துக்காப்புச்சலுகையுடன்
காப்பீடு வழங்குவார்.

மனைவிக்கும் சேர்த்தே
பாலிசி வழங்குவதால்
முகவருக்கு மனைவியின்
ஒப்புதலும் ஒத்துழைப்பும்
உறுதியாகக்கிடைக்கும்.

95 % முகவர்கள்  மகளிர்க்கு
காப்பீடு வழங்கும் பொறுப்பை
சரியாகச்செய்வதில்லை.

சர்வதேச மகளிர் தினமான இன்று
இந்த குற்ற உணர்ச்சி
என்னை வந்து உறுத்தியது.

உடனே கோவில்பட்டி முகவர்
திரு நெப்போலியன் அவர்கள்
என் நினைவிற்கு வந்தார்.

மாறுபட்டு சிந்தித்து
மகளிர்மீதான காப்பீட்டை
பரவலாக்கிய அவர்
போற்றுதற்குரியவர் தான்

அவரைப்போற்றவேண்டும்
பாராட்டவேண்டும் என்ற
எண்ணமும் கூடவே வந்தது.

சபாஷ்...
திரு நெப்போலியன்.

இந்த மகளிர் தின நன்னாளில்
மகளிர் மீதான காப்பீட்டை
பரவலாக்க உறுதி
கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment