நான் திருவல்லா கிளையில்
உதவிக்கிளை மேலாளர்.
காலம் 1990-92.
கும்பநாடு என்ற ஊர்.
அங்கு குஞ்சுமோன் என்று
எல்லோராலும் பாசமுடன்
அழைக்கப்படும் முகவர்
திரு ஆப்ரஹாம் C மேத்யூ.
நல்ல முகவர். நல்ல நண்பர்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர்
நான் மனைவியுடன்
கோட்டயம் சென்றிருந்தபோது
அவரது இல்லத்திற்கும்
சென்று வந்தோம்.
வீட்டில் தயாரித்த பலாப்பழ
அல்வா எல்லாம் தந்து
உபசரித்தார்.
அவருடன் சேர்ந்து
சுற்றுப்பயணம் சென்ற நாட்கள்
மிகவும் இனிமையானவை.
90% வெளிநாட்டில்
வேலைபார்ப்பவர்கள்.
இவர் வழங்கிய பாலிசிகளில்
ஒன்று கூட காலாவதியாவதில்லை.
வாடிக்கையாளருடைய
அனுமதியின் பெயரில்
இவரே தவணைப்பணத்தை
செலுத்தி ரசீதை
பாதுகாத்து வைத்திருப்பார்.
ஜூலை ஆகஸ்டு மாதங்களில்
அவர்கள் ஊருக்கு வரும்போது
ரசீதினை கொடுத்து பணத்தை
வாங்கிக்கொள்வார்.
பாலிசிதாரர் பாலிசி பற்றி
எந்த கவலையும்
மனதில் கொள்ளவேண்டாம்.
அனைத்தும் முகவர் பொறுப்பில்.
அந்த முகவருக்கு
உள்ளூர் பாலிசிகளின்
எண்ணிக்கை குறைவுதான்.
அவர் குறிப்பிட்ட
ஒரு பேக்கரியில்
நாள்தோறும் பொருட்கள்
வாங்குவார்.
அந்த கடைக்காரருக்கு
புதிய பாலிசி வழங்குவார்.
பொருட்கள்
வாங்கியதற்குண்டான
பணத்தை உடனுக்குடன்
கொடுப்பதில்லை.
மூன்று மாதங்களுக்கொருமுறை
தவணைப்பணத்தை செலுத்தி
ரசீதுக்கொடுத்து கடையில்
வரவுவைத்துவிடுவார்.
கடைக்காரரைப்பொறுத்த
அளவில் அவர் அறியாமலேயே
பணம் சேமிக்கப்படுகிறது.
முகவரைப் பொறுத்தவரை
பாலிசியின் தவணை சரியாக
கட்டப்பட்டு விடுகிறது.
இருவருமே ஒருவருக்கொருவர்
நிரந்தர வாடிக்கையாளர்.
இந்த முகவருக்கு
இதைப்போலவே
கறிக்கடைக்காரரிடம் ,
மளிகைக்கடைக்காரரிடம்,
மீன் கடைக்காரரிடம்,
பால் தயிர் விற்பனையாளரிடம்,
வணிகத்தொடர்பு உண்டு.
நான் கூட அவரிடம் ஒருநாள்
இப்படி வாங்குகிறீர்களே
அந்த கடைக்காரர்
தரம் குறைந்த பொருட்களை
கொடுத்தால் என்ன செய்வீர்கள்
என்று கேட்டேன்.
"சாரே! தரம் குறைந்தால்
நான் வேறுகடைக்குச்செல்வேன்.
அவருக்கு வணிகம் குறையும்.
எனவே அவர் தரமாகவே
தருவார்" என்று கூறினார்.
அந்த முகவர் எப்போதும்
வணிக முன்னேற்றத்தையே
கருத்தில் கொள்வதால் தான்
இப்படி மாறுபட்டுச்சிந்தித்து
செயல்பட முடிகிறது.
சிறப்பான வெற்றியும்
பெறமுடிகிறது.
No comments:
Post a Comment