பாராட்டு...
பகிரங்கப்பாராட்டு..
•••••••••••••••••••
எனக்கு அடுத்தடுத்து வந்த
அலுவலகப் பணி மாறுதல் காரணமாக
எனது புதல்வனும் புதல்வியும்
ஒரு குறிப்பிட்ட ஊரில்
இரண்டு வருடங்களுக்கு
மேல் படித்ததில்லை.
என் புதல்வன் ஒன்பது
கல்வி நிலையங்களிலும்
புதல்வி பத்து
கல்வி நிலையங்களிலும்
படித்திருக்கிறார்கள்.
பல்வேறு இடர்பாடுகளை
எதிர்கொண்டு தான்
படித்து முன்னேறினார்கள்.
புதல்வன் ஒன்பதாம் வகுப்பும்
பத்தாவது வகுப்பும் படித்த பள்ளி
ஒரு தரமான பள்ளி என்று
சான்று வழங்கமுடியாது.
பதினொன்றாம் வகுப்பு
தஞ்சாவூரில் ஒரு தனியார்
பள்ளிக்கூடத்தில்.
அரையாண்டுத்தேர்வில்
நன்றாக மதிப்பெண் எடுத்த
என் புதல்வனைப்பாராட்டும்
விதமாக தனது
கைக்காசைப்போட்டு
ஒரு புத்தகம் வாங்கி
வகுப்பு மாணவர்கள்
அனைவரின் முன்னால்
அவனது வகுப்பாசிரியர்
அவனைப் பாராட்டி பரிசளித்தார்.
அந்த நிகழ்வு
என்புதல்வனின் படிப்பில்
ஒரு திருப்பு முனையாக
அமைந்தது.
பன்னிரண்டாம் வகுப்பு
பொதுத்தேர்வில்
பள்ளியில் மூன்றாமிடம்
கிடைத்தது.
வெற்றிக்காக ஒருவர்
பலர் முன்னிலையில்
பாராட்டப்படும்போது
இந்த பாராட்டே
ஒரு பாரமாக மாறி
பெற்ற வெற்றியை
பேணிக்காக்க
வகை செய்கிறது.
எனது பேரன் 2012ல்
சென்னையில்
இரண்டாவது வகுப்பு
படித்துவந்த வேளையில்
இந்தியும் தனியாக
படித்து வந்தான்.
அவனுடன்
"பிராத்மிக்" தேர்விற்காக
ஒரு இந்தி ஆசிரியரிடம்
தனுயாப படித்தவர்களில் ஒரு சிலர்
ஐம்பது வயதைக் கடந்தவர்கள்.
அந்தத் தேர்வில் அவனது
குழுவில் உடன் படித்தவர்களுள்
முதல் மதிப்பெண்
பெற்றது என் பேரன்.
அனைவரது பாராட்டு மழையிலும்
வாழ்த்து வார்த்தைகளிலும்
நனைந்து மகிழ்ந்த அவன்
அதிக உற்சாகம் பெற்று
முதலிடத்தை மீண்டும் பெற்றிட
முழுமூச்சுடன் படிக்கத்
துவங்கினான்.
பலர் முன்னிலையில்
கிடைக்கும் பாராட்டு நிச்சயம்
உற்சாகம் தருவதாக இருக்கும்.
ஒரு முகவருக்கும் அப்படியே..
தனக்குக்கிடைக்கும் பாராட்டு
பலர் முன்னிலையில்,
அதுவும் உயர் அலுவலர்
முன்னிலையில் கிடைத்தால்
பெரு மகிழ்ச்சி கொள்வார்.
ஒவ்வொரு போட்டியிலும்
தவறாமல் பரிசு பெற,
அதுவும் உயர் நிலையில்
பரிசு பெறவே விரும்புவார்.
யாருக்கும் தெரியாத வேளையில்
பரிசை அவர் கையில் திணித்தால்
எந்த ஒரு ஊக்கமும்
அவருக்கு கிடைக்காது.
தான் பாராட்டப்படும்போது
தனக்குக்கிடைக்கும்
பகிரங்க பாராட்டு
எவ்வளவு மகிழ்ச்சியைத்தரும்
என்பதை முகவர் நன்கு
உணர்ந்திருப்பார்.
இதைப்போன்றே தனது
வாடிக்கையாளர்களின்
நற் செயல்களையும்
பெருஞ் சாதனைகளையும்
முகவர் பகிரங்கமாக
பாராட்டும்போது
வாடிக்கையாளர்
மகிழ்ச்சியடைவார்
என்ற உண்மையை
முகவர் உணரவேண்டும்.
நான் 2006-08 ல்
உடுப்பியில் வணிக மேலாளராக இருந்தகாலத்தில்
திரு காமத் என்ற பெயரில்
ஒரு மூத்த முகவர்.
வாடிக்கையாளர்களுக்கு
நன்றி தெரிவிக்கும் கூட்டம்
ஒன்றை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் தனக்கு
தொடர்ந்து ஆதரவு அளித்து வரும்
ஆட்டோ ஓட்டுநர்ஒருவரை
மேடைக்கு வரவழைத்து
பல வகைப் பழங்களோடும்
பொன்னாடையுடனும்
மரியாதை செலுத்தி தனது
நன்றியை வெளிப்படுத்தி
பாராட்டி மகிழ்ந்தார்.
அந்த கூட்டத்திற்குபிறகு
ஆட்டோ ஓட்டுநர் முகவரது
விளம்பரத்தூதுவராகவே
மாறிவிட்டார்.
பணத்தைவிட, பரிசுகளைவிட
பாராட்டுக்களே அதிக மதிப்பு
கொண்டவை.
இனிய முகவ நண்பர்களே..
புகழ்பூத்த உங்கள்
வாடிக்கையாளர்களை
பாராட்டுவதை
கடமையாகக் கொள்ளுங்கள்.
கிளைஅலுவலர்களே.....
உங்கள் முகவர்களை
அவர்களது சாதனைக்காக
பாராட்டுங்கள்...
உயர் அலுவலர்களைவைத்து
புதுவணிகப் போட்டியின்
பரிசுப்பொருட்களை
வழங்கி போற்றுங்கள்.
பலர் முன்னிலையில்
முதல் மரியாதையை
நிறைவேற்றுங்கள்.
பிறகு பாருங்கள்..
அவர்களிடம் காணப்படும்
வேகத்தை..
No comments:
Post a Comment