ஶ்ரீவைகுண்டம் ...
இந்த ஊரை சிற்றூர் என்றும்
அழைக்கமுடியாது,
பேரூர் என்றும் கூறமுடியாது.
வளர்ச்சி என்பதே இல்லாமல்
அதே நிலைமையில் தான்
இந்த ஊர் இன்றும் இருக்கிறது.
தாமிரபரணி ஆற்றங்கரையில்
இருக்கிறது இந்த ஊர்.
இங்கு “மீனாட்சி
மண்பானைச்சமையல் கடை”
மிகவும் பிரபலம்.
மண்பானையில் சமைப்பதால்
இந்த பேரும் புகழும்.
நானும் வளர்ச்சி அலுவலர்
திரு தெய்வகல்யாணியும்
ஒரு நாள் இங்கு மதிய உணவு
அருந்த சென்றிருந்தோம்.
நாங்கள் இருவரும் உணவருந்திக்கொண்டிருந்தோம்.
அந்த நேரத்தில்..
உள்ளூர்காரர் ஒருவர்.
பணத்தேவை உள்ளவர்களுக்கு
ஈடு ஏதுமின்றி கடன் வழங்குபவர்.
சிகப்பு கலர் புல்லட் வண்டியில்
வந்திறங்கி சாப்பாடு கேட்டார்.
வேலைபார்க்கும் பையன்
அவரை அமரச்சொல்லி
இலையெல்லாம் போட்டு
தண்ணீர் வைத்து விட்டு
உணவெடுக்க உள்ளே சென்றான்.
பிறகு ஆளைக்காணவில்லை.
பத்து நிமிடங்களுக்குப்பிறகு
கடை நடத்துபவர் வந்து
சாப்பாட்டுக்குக் காத்திருப்பவரிடம்
தொடுகறி எல்லாம் தீர்ந்துவிட்டது
என்றும் அதனால் சாப்பாடு
போட இயலவில்லை என்பதை
வருத்தத்துடன் தெரிவித்தார்.
காத்திருந்த உள்ளூர்காரருக்கு
கோபம் தலைக்கேறிவிட்டது.
அந்தக்கடைமுதலாளியைப்பார்த்து
“கால் மணி நேரம் காத்திருந்த பின்
சாப்பாடு இல்லை என்று கூறுகிறீர்கள்.
சாப்பிட வேறு ஒரு கடைக்கு சென்றால்
இன்னும் கூடுதல் நேரமாகும்.
முதலிலேயே நிலைமையைச்
சொல்லி இருந்தால்
நான் வேறுகடைக்கு
மகிழ்ச்சியுடன் சென்றிருப்பேன்.
என்னுடைய ஒரு நண்பர்
இன்று எனக்கு வட்டிப்பணம்
தர வேண்டும்.
அவர் மாலையில்
வெளியூர் செல்ல இருப்பதால்
அதற்கு முன்பு திருநெல்வேலி
வந்து வட்டிப்பணத்தை
வாங்கச்சொல்லியிருந்தார்.
இப்போது உங்கள் ஓட்டலில்
நீங்கள் தாமதப்படுத்தியதால்
என்னால் அவரைப் போய் பார்த்து
வட்டிப்பணத்தை வாங்கமுடியாது.
அந்தப் பணத்திலிருந்து
இன்று வேறு ஒருவருக்கு கடன்
தருவதாகக் கூறியிருந்தேன்.
அதையும் செய்ய முடியாது.
உங்களால் இந்த வகையில்
எனக்கு இன்று ஆயிரம் ரூபாய்
இழப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த ஆயிரம் ரூபாயை
நீங்கள்தான் தந்து எனது
இழப்பை ஈடுசெய்ய வேண்டும்.
பணம் தரவில்லையென்றால்
இப்போது நடப்பதே வேறு“
என்று மிரட்டினார்.
கடையில் கூட்டம்
சேர்ந்து விட்டது.
கடைக்காரருக்கு ஆதரவாக
பரிந்து பேச யாருமில்லை.
தனது வியாபாரம்
பாதிக்கப்பட்டுவிடக்கூடாது
என்ற ஒரு எண்ணத்தில்
கடைக்காரரும் அழுதுகொண்டே
ஆயிரம் ரூபாயைக்கொடுத்து
பிரச்சினையை முடித்தார்.
முதலிலேயே ஓட்டலில்
வேலைக்காரப்பையன்
சாப்பாடு முடிந்துவிட்டது என்று
வந்த வாடிக்கையாளரை
திருப்பி அனுப்பியிருக்கலாம்.
காலதாமதமானதால்
சாப்பிட வந்தவருக்கும்
பண இழப்பு ஏற்பட்டிருக்காது.
இதை பார்த்துக்கொண்டிருந்த
எனது நினைவில் உடனே
நமது முகவர்கள் சிலரின்
முகங்கள் வந்து போயின.
முகவர் கொடுத்த
தவறான தகவல்களால்
வாடிக்கையாளருக்குத்
ஏற்பட்ட பண இழப்பிற்கு
அவர் கேட்ட தொகையை
கையிலிருந்து கொடுத்து
பிரச்சினையை முடித்த
சில முகவர்களை அறிவேன்.
முகவரின் செய்த தவறால்
பாலிசி ஒன்று
காலாவதியாகிப்போனது.
அந்த நேரத்தில்
பாலிசிதாரர் இறந்துபோனார்.
முகவரின் தவறினால் குடும்பத்திற்கு
கிடைத்திருக்கவேண்டிய
இறப்பு உரிமம் மறுக்கப்பட்டது.
வாடிக்கையாளரின் குடும்பத்தார்
முகவரை கடத்திச் சென்று
கட்டிவைத்து உதைத்தனர்.
கிடைக்க வேண்டிய
உரிமத்தொகையை
தனது கணக்கிலிருந்து கொடுத்து
மீண்டு வந்தார் முகவர்.
இதைப்போலவே
இறப்பு உரிமம் கிடைக்காத
வாடிக்கையாளர் குடும்பத்திற்கு
கைக்காசை கொடுத்த
சில பெரிய முகவர்களையும்
நான் நன்றாக அறிவேன்.
இச்சம்பவங்கள் மூலம்
நம் முகவ நண்பர்கள்
தெரிந்து கொள்ளவேண்டிய
படிப்பினைகளைப்பார்ப்போம்.
வாடிக்கையாளரிடம்
தவறான தகவல்களை
ஒரு போதும் சொல்லக்கூடாது.
கட்டவேண்டிய
தவணைப்பணத்தை
காலந் தவறாமல் உடனே
செலுத்திவிடவேண்டும்.
தவணை தேதிக்குள்
பணத்தைக் கட்டாவிட்டால்
பாலிசி பலன் இழந்துவிடும் என்ற
தகவலை தெரிவிக்கவேண்டும்.
புதிய பாலிசிகளுக்கு
“சேர்மன் ரிலேக்சேஷன்”
கிடையாது என்பதை
முகவர்கள் தெரிந்துவைத்து
வாடிக்கையாளருக்கும் அவற்றை
தெரியப்படுத்தவேண்டும்.
தெளிவுபடுத்தவேண்டும்.
விபத்துக்காப்புச்சலுகை
பலன் தொடர்ந்து கிடைக்க
தவணைப்பணத்தை
“டேஸ் ஆஃப் கிரேஸ்”க்குள்
கட்டியாகவேண்டிய
கட்டாயத்தையும் தவறாது
தெரிவித்தாக வேண்டும்.
பாலிசி குறித்த
அனைத்து விபரங்களையும் பாலிசிதாரரிடம் முகவர்
தெளிவாக தெரிவித்துவிட்டால்
எந்த சிக்கலும் வராது.
No comments:
Post a Comment