ஏற்கனவே கூறியிருந்தபடி
திரு V J சிங் சார்
நெல்லைக்கோட்டத்தின்
முநிலைக்கோட்டமேலாளர்.
கிளைமேலாளர்கள்
உதவிக்கிளை மேலாளர்கள்
கலந்து கொண்ட வணிக அலசல்
கூட்டம் நடைபெறுகிறது.
வணிக நிலை பற்றி விவாதித்த பின்
தட்டிக்கொடுக்கவேண்டியவர்களை
தட்டிக்கொடுத்து ,
கைதட்டி பாராட்டப்படவேண்டியவர்களை
பாராட்டிவிட்டு,
வணிகப்பெருக்கத்திற்கு
அந்த மாதத்தில்
பின்பற்றப்படவேண்டிய
வியூகங்கள் பற்றி
விரிவாகப்பேசிவிட்டு
அடுத்த தலைப்புக்கு
தாவுகிறோம்.
உரிமத்துறை மேலாளர்
திரு முத்து அவர்கள்
எப்போதும் என்னிடத்தில்
கிளை அலுவலகர்கள் கூட்டத்தில்
வணிகம் பற்றி மட்டும்
விவாதிக்காமல் உரிமங்கள் பற்றி
விவாதித்தால் கிளை அலுவலர்கள்
இறப்பு உரிம விசாரணைகளுக்கு
முன்னுரிமை கொடுப்பார்கள் என்ற
வேண்டுகோளை வைப்பார்.
அவரது வேண்டுகோளின் படி
இறப்பு உரிமங்கள்
தீர்வு செய்யும் செயலில்
காணப்படும் தொய்வு குறித்து
வணிக மேலாளர் என்ற முறையில்
கிளை அலுவலகர்களிடம்
எனது கவலையை தெரிவித்தேன்.
கிளைமேலாளர்களும்
உதவிக்கிளைமேலாளர்களும்
தங்களிடம் நிலுவையில் உள்ள
விசாரணை அறிக்கைகளை
விரைவாய் முடிக்க வேண்டுகோள்
வைத்தேன்.
அவர்கள் தாமதத்திற்கு
புதுப்புது சால்ஜாப்புகள்
சொன்னார்கள்.
குறுக்கிட்டுப் பேசிய
திரு V J சிங் சார்
விசாரணை அறிக்கைகளின்
முக்கியத்துவத்தை
மிக எளிமையாக
எடுத்துக்கூறினார்.
"ஒவ்வொரு எல்ஐசி காரரும்
என்றென்றும் எப்போதும்
ஒன்றை நினைவில்
வைத்துக்கொள்ள வேண்டும்.
பாலிசிதாரரின் மரணத்தை
நமக்கு தெரியப்படுத்தும் கடிதம்
வெறும் வெள்ளைத் தாளல்ல.
There is a valuable soul
behind Every Death
Intimation letter
அந்தத்தாளுக்குப்பின்னால்
ஒரு மதிப்புமிக்க ஆன்மா உள்ளது.
அந்தக்குடும்பத்தின்
சோகக் கண்ணீர்
உள்ளது.
எதிர்கால நம்பிக்கைக்கனவு
உள்ளது.
இவற்றை மனதில் கொண்டு
நாம் பணியாற்றவேண்டும்"
என்றார்
இந்த வைர வார்த்தைகள்
எல்லோர் மனதிலும் நல்ல
தாக்கத்தை ஏற்படுத்தியது.
விசாரணை அறிக்கைகளை
அனுப்பி வைப்பதிலும்,
அவற்றை பரிசீலிப்பதிலும்
நல்லதொரு வேகம் ஏற்பட்டு
உடனடி பலனை தந்தது.
நாம் " இப்போது பிசி" என்ற
சமாளிப்பு வார்த்தைகளை
முற்றிலும் தவிர்த்துவிட்டு
இறப்பு உரிமத் தீர்விற்கு
முன்னுரிமை கொடுத்தால்
அனைவருக்கும்
வார்த்தைகளால்
விவரிக்கமுடியாத
மன நிறைவு ஏற்படும்.
இதை அனுபவித்து பார்த்தால்
மட்டுமே உணர முடியும்.
இறப்பு பற்றிய தகவல்கடிதம்
வெறும்தாளல்ல.
உயிருள்ள ஓர் ஓவியம்தான்.
சரிதானா நண்பர்களே
No comments:
Post a Comment