Saturday, 5 May 2018

தடையில்லாச் சான்று

என் நண்பர் ஒருவர்...

பொதுத்துறை நிறுவனம் ஒன்றில்
பொறுப்பான பதவியில் இருந்தார்.

அவர்களது அலுவலகத்திற்கு
சொந்த கட்டிடம் கட்ட
ஏற்பாடு செய்யப்பட்டது.

மூன்று மாடிகளுக்கான
வரைபடங்கள் எல்லாம்
தயாரிக்கப்பட்டன.

அந்த நகரின் நகராட்சி
அலுவலகப் பரிந்துரையுடன்
சென்னையில் உள்ள
உயர் அலுவலகத்திற்கு
அனுப்பிவைக்கவேண்டும்.

தீயணைப்புத்துறையிலிருந்து
ஒரு தடையில்லாச்சான்று
பெற்று அதனையும்
இணைத்து அனுப்ப வேண்டும்.

நகராட்சி விதிகளின்படி
எவ்வளவு தண்ணீர்
சேமித்துவைக்க வேண்டுமோ
அந்த அளவு தண்ணீரை சேமித்து
வைக்கவேண்டிய அளவிற்கான
பாதாளத் தொட்டிக்கான
இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் தீயணைப்பு அதிகாரி
பாதாளத்தொட்டிக்கென
ஒதுக்கப்பட்டுள்ள இடம் போதாது
என்றும் இப்போது ஒதுக்கப்பட்டுள்ள
இடத்தைப்போன்று மூன்று மடங்கு
இடம் ஒதுக்கவேண்டும் என்று கூறி 
சான்று வழங்குவதை
நிறுத்தி வைத்திருக்கிறார்.

அவரைக்கவனிக்கவேண்டும்
என்பதை இலைமறை காயாக
நண்பருக்கு உணர்த்தியிருக்கிறார்.

நண்பரோ அவரது அலுவலகம்
பொதுத்துறை அலுவலகம் என்றும்
கூடுதலாக கொடுக்கவேண்டியதற்கு
கணக்கெழுதமுடியாது என்றும்
தனது கைப்பணத்தைத்தான்
கொடுக்கவேண்டும் என்று
புலம்பியிருக்கிறார்.

அந்த தடையில்லாச்சான்று
வழங்க வேண்டிய அலுவலர்
நீங்கள் ஏன் கையிலிருந்து
பணம் செலவழிக்கவேண்டும்
அதற்குப் பதிலாக
மொத்த வரைபடைத்தையும்
மாற்றிக்கொண்டு வாருங்கள்
என்று சொல்லியிருக்கிறார்.

எனது நண்பர் உடனே
தனது உயர் அலுவலரை
தொடர்பு கொண்டு
தடையில்லா சான்று
வழங்கவேண்டியவர்
தடையாக இருப்பதை
எடுத்துக்கூறியிருக்கிறார்.

உயர் அலுவலர் நல்லதொரு
ஆலோசனை கூறியிருக்கிறார்.

அலுவலகப்பயன்பாட்டிற்கென
புதிதாக வாங்கி வைத்திருக்கும்
பேப்பர், பேனா, கார்பன்,
ஃபல்கள், ஸ்டாம்ப் பேடு,
பஞ்சிங் மெஷின், 
போன்றவற்றிலிருந்து
ஒரு இரண்டாயிரம் ரூபாய் மதிப்பில்
உள்ள எழுது பொருட்களை
அந்த அலுவலருக்கு
வழங்கச்சொல்லியிருக்கிறார்.

பிறகென்ன..
நண்பர் இந்த பொருட்களை
அந்த அலுவலரிடம்
வழங்கியிருக்கிறார்.

வழங்கிய அடுத்த விநாடியே
அந்த அலுவலர்
முழு மகிழ்ச்சியுடன்
தடையில்லாச்சான்று
வழங்கினாராம்.

இது நடந்தது 1997 ம் ஆண்டில்.
அப்போது இரண்டாயிரம் மதிப்பில்
எழுது பொருட்கள் .

இன்றைய விலை எவ்வளவோ
தெரியவில்லை.

No comments:

Post a Comment