Saturday, 5 May 2018

உழைப்பாளரை உயர்த்திப்பார்க்கிறார்கள்

மேமாதம் முதல்நாளான
உழைப்பாளர் நாளில்
UAE ன் ஃபுஜைரா நகர
காவல்துறை அலுவலகம்
சென்றிருந்தேன்.

குளிரூட்டப்பட்ட
சுகாதாரமான அலுவலகம்.

பார்வையாளர்களுக்கு என
நேர்த்தியான இருக்கைகள்.

படிப்பதற்கு
அரபு மொழி இதழ்களோடு
ஆங்கில நாளிதழ்கள்.

சாலையில் பின்பற்றவேண்டிய
பாதுகாப்பான முறையை
அறிவிக்கும் அழகான
அறிவிப்பு பிரசுரங்கள்.

சட்டம் ஒழுங்குக்கு
தனிப்பிரிவு.

போக்குவரத்துக்காவலுக்கு
தனிப்பிரிவு.

அலுவலகத்தில் நுழையும்போது
நுழைவுவாயிலில் காணப்பட்ட
வாசகங்கள் என்னைக்கவர்ந்தன.

உழைப்பாளர் நாளில்
பார்த்து பரவசப்பட்ட
ஆங்கிலச் சொற்களுக்கு
நிகரான தமிழ்ச்சொற்கள்...

இந்த வாயில் வழியாகச்செல்வது
"உலகத்தின் மிகச்சிறந்த
தொழிலாளர்கள்"

அன்று மட்டும் காணப்பட்ட
சொற்கள் அல்ல அவை.

அன்றாடம் அலங்கரிக்கும்
பெருமை மிகு சொற்கள்.

அந்த சொற்களை புனைந்த
புனிதரை காலில் விழுந்து
வழங்கவேண்டும் என்ற
எண்ணமே எனக்கு வந்தது.

உழைப்பாளர்களை
போட்டுப்பார்க்காது
உளமாறப்போற்றி
உயர்த்தி மகிழும் நாடு
என்றே எனக்குத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment