என் நெருங்கிய நண்பர் ஒருவர்.
திருச்செந்தூர் காரர்.
அப்போது தில்லியில்
அவரது கட்சிதான்
ஆட்சிப்பொறுப்பில்.
கட்சியில் உள்ள செல்வாக்கை
பயன்படுத்தி நெருக்கமான
நாடாளுமன்ற உறுப்பினர்
ஒருவர் மூலம்
ஏதாவது ஒரு நல்ல பதவி
வாங்க முயற்சி செய்தார்.
அவர் எந்த பதவிக்கு
முயற்சிக்கிறார் என்று
அவரிடம் நான்
நேரடியாகக் கேட்டேன்.
அதற்கு அவர் என்னிடம்
“ அண்ணாச்சி ..
இந்த காமா சோமா துறையில்
உள்ள பதவியெல்லாம்
எனக்கு வேண்டாம்.
துறைமுகப்பொறுப்புக்குழு
உறுப்பினர், தொலை தொடர்பு
ஆலோசனைக்குழு உறுப்பினர்,
ரயில்வே ஆலோசனைக்குழு
உறுப்பினர் போன்றவை யெல்லாம்
எனக்கு வேண்டாம்னு
எம்.பி யிடம் சொல்லிவிட்டேன்.
இந்த பதவிகளிலெல்லாம்
பத்து பைசா பிரயோஜனம்
கிடையாது.
வேண்டும் என்றால்
லெட்டர் பேடுல
நம்ம பெயருடன் அந்த
பதவி பெயரை சேர்த்து
அடித்துக்கொள்ளலாம்.
நாய் கூட நம்மளை
சீண்டாது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய
உறுப்பினர் பதவி என்றால்
அப்படி கிடையாது..
இதில் நாம் கை நீட்டி
பணம்வாங்கவேண்டாம்.
நம்ம வங்கிக் கணக்கில்
அப்படியே பணம் ஏறிவிடும்.
அதில் தான் பணம்
கொத்துகொத்தா வரும்.
லம்ப்பா ஒரு அடி
அடிக்கலாம்.
இந்த பதவியைத்தான்
வாங்கித்தரும்படி எம்.பி யிடம்
கேட்டிருக்கிறேன்"
என்று கூறினார்.
கொஞ்ச நாள் கழித்து நண்பரிடம்
விரும்பிய பதவி கிடைத்ததா
என்று கேட்டேன்.
அதற்கு அவர் இது மாநில அரசு
நியமிக்கவேண்டிய பதவி என
எம்பி சொல்லிவிட்டதாக
ஏமாற்றத்துடன் பதிலளித்தார்.
வேறு ஏதோ ஒரு பசையில்லாத
பதவிதான் அவருக்கு கிடைத்ததாம்.
No comments:
Post a Comment