1999 என்று நினைவு.
சென்னையிலிருந்து
மலைக்கோட்டை விரைவு
ரயிலில் திருச்சிவழியாக
தஞ்சை பயணம்.
ஒரே பெட்டியில்
எதிரெதிர் இருக்கைகளில்
நானும் தமிழ்நாட்டின்
மிகச்சிறந்த வழக்குரைஞர்
ஒருவரும் பயணித்தோம்.
அவர் சில வழக்குகளில்
பல வருடங்களுக்கு முன்பு
MGR க்கு ஆதரவாக
சில வழக்குகளை நடத்தி
பிரபலமானவர்.
அப்போது சிதம்பரம் மாணவர்
நாவுக்கரசு கொலை நடந்து
பரபரப்புடன் இருந்த காலம்.
அத்த வழக்குரைஞர்
கொலை செய்த மாணவருக்காக
வழக்கை நடத்திவந்தார்.
அந்த வழக்குபற்றி பேச்சு
பேசிக்கொண்டு வந்தோம்.
ஒரு சூட்சுமத்தை எனக்கு
விளக்கிக்கூறினார்.
ஒரு வழக்கானது
எவ்வளவுக்கெவ்வளவு
பரபரப்பாகவும்
உணர்ச்சிபூர்வமாகவும்
மாறுகிறதோ
அவ்வளவுக்கவ்வளவு
தங்களுக்கு சாதகமாக
அமையும் என்றார்.
குற்றம் சாட்டப்பட்டவர்
மீது கொலை வெறியில்
மக்கள் இருப்பார்கள் .
இதனை சாதகமாக
எடுத்துக்கொள்வோம்.
"என்னை அடித்தே
கொல்லக்கூடிய
மன நிலையில்
மக்கள் இருந்தார்கள்...
அதற்குப் பயந்துதான்
காவலர்கள் என்னை
விசாரிக்கும்போது
கொலை செய்ததாக
நான் ஒப்புக்கொண்டேன்.
ஆனால் உண்மையிலேயே
நான் கொலைசெய்யவில்லை"
என்று கூறவைத்து
வழக்கிலிருந்து
குற்றம்சாட்டப்பட்டவரை
வெளியே கொண்டுவந்துவிடுவோம்
என்று நம்பிக்கையுடன் கூறினார்.
சில வழக்குகளில்
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு
வேண்டப்பட்டவர்களே
ஒரு உணர்ச்சிபூர்வமான மக்கள்
எழுச்சியை ஏற்படுத்தி அதையே
தங்களுக்கு சாதமாகப்பயன படுத்தி
வழக்கை புஸ்வாணமாக மாற்றி
வெளியே வந்து விடுவார்கள் என்றும்
விளக்கிக்கூறினார்.
அவர் சொன்னபடியேதான்
அந்த வழக்கின் முடிவும்
அமைந்ததாக நினைவு.
இப்போது நடைபெறும்
நிகழ்வுகளைப்பார்த்தால்
அந்த வழக்குரைஞரின் கூற்று
முழுஉண்மை என்பது
நன்றாகவே தோன்றுகிறது.
மக்களின் உணர்வு பூர்வமான
போராட்டங்கள் எப்படியெல்லாம்
குற்றவாளிகளுக்கு
சாதகமாக மாற்றப்படுகின்றன..
பணவசதி படைத்தோர்
இந்த முறையில்தப்பித்து
விடுகின்றனர்.
பண வசதியில்லாதவர்கள்
சிறைச்சாலை சென்று
தண்டனை அனுபவிக்கின்றனர்.
No comments:
Post a Comment