33 ஆண்டுகளுக்கு முன்
தெரிந்துகொண்ட தகவல்••••
நான் சொல்லப்போகின்ற
அனுபவத்தை நீங்களும்
பல வேளைகளில்
உணர்ந்திருப்பீர்கள்.
நாம் நமது
அன்றாட வாழ்க்கையில்
பல பொருட்களை
ஒழுங்குமுறை ஏதுமின்றி
குப்பை போல் வைத்திருப்போம்.
அலுவலகத்தில் கூட
நமக்கு வந்த கடிதங்கள்
சுற்றறிக்கைகள்
போன்றவற்றை
நமது மேஜையிலும்
டிராயரிலும்
கொத்து கொத்தாக
எந்தவித ஒழுங்குமின்றி
வைத்திருப்போம்.
ஒரு குறிப்பிட்ட
பொருளோ கடிதமோ
தேவையென்றால்
நம்மைத் தவிர
வேறு யாராலும்
அதை தேடி எடுக்கமுடியாது.
ஆனால் நம்மால் மட்டும்
ஒரு விநாடி யோசித்து
உடனேயே அதைத்
துளாவி எடுத்துவிட முடியும்.
அது எப்படி
நம்மால் மட்டும் முடிகிறது
என்ற கேள்விக்கு
இதுவரை சரியான
பதில் கிடைக்கவில்லை.
நம்மால் குப்பையாக வைக்கப்பட்டுள்ளவைகளிலிருந்து
நம்மால் மட்டுமே தேடி எடுக்கும்
திறமை நமது மூளைக்கு
நிறைய உள்ளது.
இப்படி குப்பையாக
பொருட்களையும்
கடிதங்களையும்
வைத்திருக்கும் முறை
உலகம் முழுவதும்
வழக்கத்தில் உள்ளது.
இந்த முறையிலான
ஃபைலிங் முறைக்கு
Random Access Filing
என்று பெயர்.
கணிணியின் டிஸ்க்கில்
ஆவணங்களை அடுக்கி
பாதுகாத்து வைக்கும் பணி
மிக முக்கியமானது.
நம் அலுவலகத்தையே
எடுத்துக்கொள்வோம்.
கோடிக்கணக்கான
பாலிசியின் தகவல்களை
நாம் கணிணியில்
சேமித்து வைத்துள்ளோம்.
பணம் செலுத்த ஒருவர்
அலுவலகம் வந்தால்
அவரது பாலிசி எண்ணை
திரையில் பதிவிடுகிறோம்.
உடனேயே பாலிசி பற்றிய
அனைத்து தகவல்களையும்
நொடிப்பொழுதில்
தந்து உதவுகிறது.
கணிணியில் பாலிசி பற்றிய
தகவல்களை பாலிசி எண்
வரிசைப்படி அடுத்தடுத்து
வைக்கப்பட்டிருந்தால்
குறிப்பிட்ட பாலிசி எண்ணை
முதல் எண்ணிலிருந்து
துவங்கி தேடவேண்டும்.
வரிசையாக சரிபார்த்து
குறிப்பிட்ட எண்ணை
தேடிக்கண்டுபிடிக்க
கணிணி கூடுதல் நேரம்
எடுத்துக்கொள்ளும்.
கால தாமதத்தை தவிர்க்க
பாலிசி எண்கள் வேறு
ஒரு வகையில்
அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
நான் முன்பு கூறியிருக்கும்
Random Access Filing
முறையில் பாலிசி எண்கள்
கணிணியின் டிஸ்கில்
ஒரு குப்பைமாதிரி குவித்து
வைக்கப்பட்டுள்ளன.
பாலிசி எண்களை
கணிணியில் சேமிக்கும்போதே
கணிணி தனக்குள் விரைவாக
ஒரு கணக்குப்போட்டு
ஒரு குறிப்பிட்ட இடத்தில்
வைத்துக்கொள்ளும்.
அந்த பாலிசி எண்ணை
தேடும்போது அதன் கணக்குப்படி
எந்த இடத்தில் இருக்கவேண்டுமோ
அந்த இடத்தை உடனடியாக
தேடிக் கண்டு பிடித்து
அந்த இடத்திலுள்ள தகவல்களை
திரையில் காண்பிக்கும்.
நாம் குப்பையைக்கிளறி
வேண்டிய கடிதத்தை
துல்லியமாகக் கண்டுபிடிக்கும்
வித்தையைத்தான்
கணிணியும் செய்கிறது.
இது போன்ற தகவல்களை
கணிணியில் பாதுகாக்கும்
வழிமுறைகளுக்காக
ஒரு தற்காலிக இடம்
ஏற்படுத்தப்படுகிறது.
இதைத்தான்
கணிணி மொழியில்
Random Access Memory
என்று கூறுகிறார்கள்.
தகவல்களை பதிவுசெய்ய
எவ்வளவு நேரத்தை
எடுத்துக்கொள்கிறதோ
அதே அளவு நேரத்தைத்தான்
பதிவு செய்யப்பட்டவற்றை
தேடி எடுப்பதற்கும்
கணிணி எடுத்துக்கொள்ளும்.
எல்லாமே சொடக்கு போடும்
நேரத்தில் முடிந்து விடும்.
பாலிசி எண் போய்
அமர வேண்டிய இடத்தை
பாலிசி எண் மூலம்
கணிணியே வேகமாக
முடிவு செய்கிறது.
இந்த காரணத திற்காகத்தான்
நாம் பாலிசி எண்ணை நேரடியாக
மாற்றக்கூடாது என்கிறோம்.
பாலிசி எண்ணை திருத்தினால்
திருத்தப்பட்ட பாலிசி எண்
கணிணியின் கணக்குப்படி
இருக்க வேண்டிய இடம்
வேறு ஒன்றாக இருக்கும்.
பழைய பாலிசி எண்ணுக்குரிய
இடத்திலேயே இருப்பதால்
திருத்தப்பட்ட பாலிசி
எண்ணை கணிணியால் தேடி
கண்டு பிடிக்க முடியவே முடியாது.
ஏனென்றால்
அது இருக்கவேண்டிய
இடம் வேறொரு இடம்.
இதனால் தான்
தவறு ஏதும் நேர்த்து விட்டால்
பாலிசி எண்ணை நாம்
cancell செய்கிறோம்.
பிறகு புதிய எண் ஒன்றை
வழங்கி தகவல்களை
புதிய எண்ணிற்குண்டான
இடத்தில் சேமிக்கிறோம்.
கணிணி மிக வேகமாக
செயல்பட்டு உதவிட
இந்த முறையிலான
Random Access
ஃபைலிங் தான்
மிகச்சிறந்த முறை.
நாம் புதியதாக
கணிணி யோ
கைபேசியோ
வாங்கும்போது
RAM பற்றிய விவரம்
பார்த்து வாங்குகிறோமே
அது இதனால் தான்.
கணிணியின்
அபார நினைவாற்றலை
போற்றுவோம்.
No comments:
Post a Comment