திரு அலி அல் மஸ்ரூய்
57 வயதுக்காரர்.
ஐக்கிய அரபு அமீரகங்களில்
ஒன்றான ரஸ் அல் கைம்மா
என்ற அமீரகத்தில் குடும்பத்துடன்
வசித்து வருகிறார்.
ரஸ் அல் கைம்மாவில்
ஓட்டுநராக பணியாற்றி
சர்க்கரை வியாதி மற்றும்
உயர் ரத்த அழுத்தம்
போன்றவற்றால் பாதிக்கப்பட்டு
பணி ஓய்வு பெற்றுக்கொண்டவர்.
இவருக்கு மொத்தம்
ஒன்பது குழந்தைகள்.
அவற்றில் ஆறு பேர் மகளிர்.
மூவர் ஆண்கள்.
மூன்றுபேருக்கு திருமணம்
நடந்துவிட்டது.
ஆறு பேர் பல்கலைக்கழகத்திலும்,
கல்லூரிகளிலும்,
பள்ளிக்கூடங்களில்
படித்து வருகின்றனர்.
மார்ச் 29ம் நாள் அஜ்மான்
வானொலி ஒரு நேரடி
ஒலிபரப்பை நடத்தியது.
திரு அலி அவர்களும்
இந்த நிகழ்ச்சியில்
ஆர்வத்துடன்
கலந்து கொள்கிறார்.
தனது குடும்பத்திற்கு
நல்ல தரமான வாழ்க்கை
அமைத்துக்கொடுக்க
போராடுவதைப்பற்றி
பேசுகிறார்.
பணவீக்கம், விலையேற்றம்
போன்றவை அமீரகக்காரர்களின்
வாழ்க்கைத்தரத்தை எப்படி
பாதிக்கின்றன என்பதை
விளக்கிக் கூறினார்.
அரசு வழங்கிவரும்
உதவித்தொகையான
13000 திர்ஹாம் பணத்தில்
திணறுவதை கூறினார்.
இவரது இதயபூர்வமான
வெளிப்படையான
கருத்துக்களை நிகழ்ச்சியை
நடத்திய வானொலி நிலைய
நிகழ்ச்சி அமைப்பாளர்
திரு யாகூப் அலி அவாதிக்குப்
பிடிக்கவில்லை.
திரு அலி பொய் சொல்கிறார்
என்று இடைமறித்துக்கூறி
திரு அலி அவர்களை
நக்கல் செய்து
அவமானப்படுத்துகிறார்.
இது நேரடி ஒலிபரப்பென்பதால்
இச் செய்தி காட்டுத்தீயாக
பலருக்கும் பரவுகிறது.
ஏப்ரல் 2ம்நாள்
அஜ்மான் அமீரகத்தின்
பட்டத்து இளவரசர்
வானொலி நிகழ்ச்சியின்
அமைப்பாளர் திரு யாகூபை
பணி இடை நீக்கம் செய்கிறார்.
இந்த ஒலிபரப்பு நிகழ்ச்சிபற்றி
அறிந்த துபாய் அமீரக அரசரும்
அமீரகங்களின் பிரதமருமான
உயர்திரு ஷேக் முஹம்மது அவர்கள்
திரு அலி அவர்களின்
குடும்பத்திற்கு தேவைப்படும்
அனைத்துத்தேவைகளையும்
24 மணி நேரத்திற்குள்
நிறைவேற்றிக்கொடுக்கும்படி
தனது அலுவலர்களுக்கு
உடனடி உத்தரவு போடுகிறார்.
குறைந்த வருமானமுள்ள
அமீரகக்காரர்களின் நிலைபற்றி
உடனடியாக ஆய்வு செய்யவும்
அலுவலர்களுக்கு
உத்தரவு போடுகிறார்.
குறைந்த வருமானமுள்ள
அமீரக்க்கார்ர்களின்
தேவைகள் பற்றி விரிவான
ஒரு உடனடி அறிக்கையை
அமைச்சரவையில் அளிக்க
சமுதாய மேம்பாட்டுத்துறையின்
அமைச்சருக்கு உத்தரவிடுகிறார்.
ஏப்ரல் 8 ல் கூட்டப்பட்டுள்ள அவசர
அமைச்சரவைக்கூட்டத்தில்
கலந்து கொள்ள
திரு அலி அவர்களுக்கு
ஏப்ரல் 7 ம் நாள்
அழைப்பு விடுக்கிறார்.
ஏப்ரல் 8அன்று
பிரதமரே அவரை வரவேற்று
கூட்ட அரங்கிற்கு
அழைத்துச்செல்கிறார்.
திரு அலி அவர்கள்
தங்களது நிலைமை பற்றி
விரிவாக்க்கூறுவதை
அமைச்சர்கள் கேட்டு
புரிந்து கொண்டு
தீர்வு பற்றி விவாதிக்கிறார்கள்.
சமுதாய மேம்பாட்டுத்துறையின்
அறிக்கையும் விவாதத்திற்கு
முன்வைக்கப்படுகிறது
கூட்டம் முடிந்ததும்
அமைச்சரவை முடிவுகள்
அறிவிக்கப்படுகின்றன.
திரு அலி அவர்கள்
சமுதாய மேம்பாட்டுத்துறை
அமைச்சக செயலகத்தில்
சமுதாய ஆராய்ச்சியாளராக
பணியமர்த்தப்படுகிறார்.
அவருக்கு புதிதாக
ஒரு வீடு ஒதுக்கப்படுகிறது.
11 பில்லியன் திர்ஹாம் தொகை
சமுதாய நலன் மேம்பாட்டிற்கும்
ஒதுக்கப்படுகிறது.
இதில் முதியோருக்கான
சமூக உதவிக்காக 3.8 பில்லியன்.
மாற்றுத்திறனாளிகளுக்காக
1.7 பில்லியன்.
நிதிஉதவி மற்றும் உடல்
உபாதையுள்ளவர்களுக்கு
1.55 பில்லியன்.
சிறைவாசிகளின்
குடும்பத்தாருக்கு
183.9 பில்லியன்.
மீதித்தொகை
மற்றவைகளுக்காக.
சமூக மேம்பாட்டுத்துறை
அமைச்சகத்தின் அறிக்கை
அலசி ஆராயப்பட்டு
குறைந்த வருமானமுள்ளவர்களின்
வாழ்க்கைத்தரத்தை உயர்த்த
கீழ்க்கண்ட ஆறு தேவைகளுக்கு
முன்னுரிமை வழங்க
முடிவு செய்யப்பட்டன.
* வீட்டு வசதி
* அடிப்படைத்தேவைகள்
* போக்குவரத்து வசதி
* நிதி வசதி
* உடல் நலம் பேணல்
* கல்வியும் தொழிலும்.
மேம்பாட்டு நடவடிக்கைகளை
கண்காணிப்பது பற்றியும்
விவாதிக்கப்பட்டன.
குறைந்த வருமானமுள்ள
மற்றவர்களின் தேவைகளை
ஆய்வு செய்து மேம்படுத்தும்
திட்டங்களை வகுத்திட
பிற அமைச்சகங்களும்
அறிவுறுத்தப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரகங்களின்
செய்தித்தாள்களில்
இது தான் இன்றைய
பெரிய செய்தி..
இந்த தகவல் இன்றைய
Gulf News நாளிதழில்
நான் படித்த செய்தியின்
தமிழாக்கம்
No comments:
Post a Comment