1980 க்கு முன்பு
பிறந்தவர்களுக்கு
இந்த அனுபவம் கட்டாயம்
ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
1993-94 வாக்கில்
ஹார்லிக்ஸ் காரர்கள்
சாக்லேட் சுவையில்
ஒரு பாட்டில்
அறிமுகம் செய்தார்கள்.
நானும் வாங்கி அந்த
பொருளை ஆதரித்தேன்.
அதன் சுவை வீட்டில்
யாருக்கும் பிடிக்கவில்லை.
எனக்கும் பிடிக்கவில்லை.
1994 -96 ல்
திருநெல்வேலியில்
நான் கிளை மேலாளர்.
அப்போதெல்லாம்
வீட்டுவசதிக்கடன் வழங்கிட
எல்ஐசி வீட்டுவசதி
நிதி நிறுவனம்
எல்ஐசி அலுவலர்களிடமிருந்து
வீட்டுமனை, அது உள்ள இடம்,
இடத்தின் சிறப்புக்கள் பற்றி
முதல் தகவல் அறிக்கையை
பெறுவார்கள்.
அதற்குப் பின்னர்
விண்ணப்பங்களை
பரிசீலனை செய்வார்கள்.
மூத்த முகவர்
திரு கணபதி அண்ணாச்சி.
அவரது வாடிக்கையாளர் ஒருவரின்
வீட்டுமனையைப் பார்க்க
வரவேண்டும் என்று
என்னிடம் கேட்டுக்கொண்டார்.
தியாகராஜநகரில்
கட்டப் போகும்
வீட்டிற்கு அருகிலேயே
வாடிக்கையாளர்
வாடகைவீட்டில்
குடியிருந்து வந்தார்.
அந்த வாடிக்கையாளர்
ஒரு ஆசிரியை.
வீட்டு மனையை
பார்வையிட்டபிறகு
வசித்து வரும் வீட்டிற்கு
அழைத்துச்சென்றார்.
மாதச்சம்பளம் போன்ற
தகவல்களை
கேட்டுக்கொண்டிருந்த
வேளையில் பக்கத்து வீட்டு
பெண்மணி ஆசிரியையை
வெளியே அழைத்துச்சென்றார்.
இந்த வேளையில் எங்களுக்கு
ஒரு கப்பில் சூடான பானம்
ஒன்று வழங்கப்பட்டது.
ஒரு உறிஞ்சலிலேயே நான்
அது ஹார்லிக்ஸ் சாக்லேட்
என்பதை புரிந்து கொண்டேன்.
வீட்டில் அதை
ஒதுக்கிவைத்திருந்தநான்
நாகரீகம் கருது
கஷ்டப்பட்டு இரண்டு மூன்று
மடக்காவது குடிக்க
வேண்டியதாகிவிட்டது.
நாங்கள் கிளம்பும்போது
அந்த ஆசிரியை உள்ளே வந்தார்.
காஃபி அருந்தினீர்களா
என்று கேட்டார்.
நான் அவரிடம்
“எங்கள் வீட்டிலும்
ஹார்லிக்ஸ் சாக்லேட் உள்ளது.
நாங்கள் யாரும் சாப்பிடுவதில்லை.
வீட்டிற்கு வரும் நண்பர்களுக்குக்
கொடுத்துத்தான் அதை
காலி பண்ணுகிறோம்.
நீங்களும் என்னைப்போலவே
நடந்து கொண்டது
மகிழ்ச்சியாக உள்ளது”
என்று கூறினேன்.
அதற்கு அந்த ஆசிரியை
“நான் பணியாளிடம்
ஃபில்டர் காஃபி யல்லவா
கொடுக்கச்செஒல்லியிருந்தேன்”
என்று ஒரே போடாகப் போட்டு
வருத்தம் தெரிவித்தார்.
இதைப்படிக்கும் நண்பர்கள்
அந்தக்காலத்தில்
ஹார்லிக்ஸ் சாக்லேட் பாட்டிலை
எப்படி காலி செய்தீர்கள் என்று
சொல்லுங்களேன்..
No comments:
Post a Comment