பொதுவாக அலுவலகங்களில்
இரண்டு வகையான ஃபல் களை
பயன்படுத்தி வருகிறோம்.
ஒன்று flat file.
ஆவணங்களை தேதி வரிசையில்
ஃபைல் செய்துவைக்கும்
ஃபைலிங் முறை.
இன்னொன்று இரா(ERA) ஃபைல்.
இந்த ஃபைல் பெரிதாக இருக்கும்.
இடது பக்கம் பெருத்திருக்கும்.
வலது பக்கம் ஒட்டியிருக்கும்.
இரண்டாக திறந்து
பார்க்கும்போது
நடுப்பகுதியில் வளைந்த
கிளிப் ஒன்று காணப்படும்.
அந்தகிளிப்பை விலக்கி
துளையிடப்பட்ட தாள்களை
கோர்க்கவேண்டும்.
இதில் அகர வரிசைப்படி
தலைப்புகளைவரிசைப்படுத்தியும்
அதற்குண்டான
ஆவணங்களை தேதி படியும்
ஃபல் செய்யும் வசதி உண்டு.
ERA என்பதற்குரிய
உண்மையான பொருளையும்
விளக்கத்தை யும்
தெரிந்து கொள்ளவேண்டும்
என்றால் இதையும் படியுங்கள்.
வாடிக்கையாளர்சேவைக்காக
மதுரைக்கோட்டத்தில் கணிணி
அறிமுகப்படுத்த இருந்த வேளையில்
ஊழியர்களைத் தேர்வு செய்து
1985 நவம்பரில்
அடிப்படை பயிற்சிக்காக
சென்னையில் இருந்த
ICIM அலுவலகத்திற்கு
அனுப்பி வைத்தார்கள்.
திருவாளர்கள் •••••
கௌரிசங்கரன்,
ஜெயப்பிரகாசம்,
தனுஷ்கோடிராஜன்,
பார்த்தசாரதி,
சங்கர அண்ணன்,
இவர்களோடு நானும்
பயிற்சிபெற சென்றோம்.
நமது அலுவலகத்தில்
ஆவணங்களை பாதுகாக்க
நாம் பயன்படுத்திவரும்
பலவித முறைகளைப்பற்றியும்
கணிணியில் பயன் படுத்தப்போகும்
பல வித முறைகளைப் பற்றியும்
விவரித்தனர்.
நாங்கள் அவை பற்றி
நன்றாகப்புரிந்து கொள்ள
வேண்டும் என்பதற்காக
எங்களுக்குத் தெரிந்த முறைகள்
பற்றி எங்களிடம் கேட்டார்கள்.
நாங்கள் flat file பற்றியும்
ERA ஃபல் பற்றியும் கூறினோம்.
நாங்கள் ERA ஃபைல் என்று
கூறிய போதெல்லாம்
பயிற்சியாளர் குறுக்கிட்டு
அது ERA ஃபைல்அல்ல.
E. R. A ஃபைல் என்று
எங்களை திருத்தினார்.
Extended Relative Access
என்பதன் சுருக்கம்தான்
E. R. A. என்று விளக்கினார்.
இந்த E. R. A. எனப்படும்
ஃபைலிங்முறையில்
அகர வரிசைப்படியான
தலைப்புகளில் ஆவணங்களை
தனித்தனியாக பிரித்து
ஃபைல் பண்ணலாம்.
இப்படி பண்ணும்போது
ஒவ்வொரு தலைப்பிலும்
தேதிப்படியும் அடுக்கி
வைத்துக்கொள்ளலாம்.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய
முறையில் வைத்துக்கொள்வதால்
இது Relative Access file
என்று அழைக்கப்படுகிறது.
அதில் ஃபைல் பண்ணும்போது
புதுப்புது தலைப்புக்களில்
சேர்த்துக்கொண்டே போகலாம்.
எனவே இந்த மாதிரியான
ஃபைலிங் முறைக்கு
Extended Relative Access
ஃபைலிங் முறை என்ற
பெயர் வந்தது என எங்களுக்கு
புரியும்படி விளக்கினார்.
33 ஆண்டுகளுக்க முன்பு
எங்களுக்கு தெளிவாக
புரிந்த தகவல் இப்போது
உங்களக்கும் புரிந்திருக்குமே!
அது ERA ஃபைல் இல்லை..
E. R. A ஃபைல்.
No comments:
Post a Comment