Saturday, 5 May 2018

எதற்கெல்லாம் தான் அரியர்ஸ்

ஒரு நண்பர் பட்ட அனுபவம்.

நண்பருக்கு
மூன்று மகள் ஒரு மகன்.

முதல் மகளுக்கு
அரை கிலோ எடையில்
தங்க நகைபோட்டு
சிறப்பாக திருமணத்தை
நடத்திவைத்தார்.

இரண்டாவது மகளுக்கும்
அரை கிலோ எடையில்
தங்க நகைபோட்டு
மிகச்சிறப்பாக திருமணத்தை
நடத்திக்காட்டினார்.

மூன்றாவது மகளை
மிகப்பெரிய வசதி படைத்த
குடும்பத்தில் கட்டிக்கொடுக்க
ஏற்பாடாயிற்று.

பார்க்கும் அனைவரிடத்திலும்
மகளுக்கு வசதியான இடமாகப்
பார்த்து திருமணத்தை
பேசிமுடித்திருப்பதாக்கூறி
மகிழ்ச்சியடைந்தார்.

ஒரு கிலோ எடைக்கு
தங்க நகை போடப்போவதாக
ஜம்பமாகக் கூறிவந்தார்.

திருமணத்தை மிகச்சிறப்பாக
அனைவரும் போற்றும்படி
நடத்திக்காட்டினார்.

திருமணம் நல்ல படி
நடந்து முடிந்த பின்னர்
முதல் இரண்டு மகள்களும்
அவரது வீட்டிற்கு வந்தனர்.

“இதென்ன ஓர வஞ்சனை?

ஒரு கண்ணில் வெண்ணை,
இன்னொரு கண்ணில்
சுண்ணாம்பா?

நாங்கள் இருவரும்
எந்த வகையில்
தங்கையை விட
குறைந்தவர்கள்” என்று
தங்களின் தந்தையிடம்
கேள்விக்கணைகள
அள்ளி வீசினார்கள்.

நண்பர் ஒன்றும் புரியாமல்
“என்ன காரணம்”என்று
அப்பாவியாகக் கேட்டார்.

“தங்கைக்கு 1 கிலோஎடையில்
தங்க நகைபோட்டதில்
எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

அதைப்போல் எங்களுக்கும்
ஏற்கனவே போடப்பட்ட
அரை கிலோ எடையை
குறைத்துக்கொண்டு பாக்கி
அரைக்கிலோ எடையில்
நகை வாங்கித்தந்து
எங்களையும் மகிழ்வித்து
நீங்களும் தாராளமாக
மீண்டும்  பெருமையடைந்து
கொள்ளுங்கள்”
என்று இருவரும் ஒரே குரலில்
ஆவேசமாகக் கூறினார்கள்.

“ அதெல்லாம் முடியாது.

சின்னவளுக்குப் பார்த்த இடம்
மிகவும் வசதியான இடம்.

ஒரு கிலோ என்பதே
அவர்கள் தகுதிக்கு குறைச்சல்.

நீங்கள் இருவரும் சென்றுள்ள
இடம் அந்த அளவிற்கு
வசதி படைத்தவர்கள் இல்லை”
என்று கண்டிப்புடன் கூறினார்.

இவற்றையெல்லாம் கவனித்த
அவரது மனைவியும்
இரண்டு மகள்களுக்கும்
சாதகமாக
பேச ஆரம்பித்தார்.

அப்படியும் நண்பர்
பிடி எதுவும் கொடுக்கவில்லை.

வாக்கு வாதம் முற்றி
கைகலப்பு வரை
சென்றுவிட்டது.

தன்னை மனையும்
மகள்களும் சேர்ந்து இடிப்பதாக
காவல் நிலையம் வரை சென்று
புகார் கொடுத்தார்.

உறவினர்கள் தலையிட்டு
சண்டையை தாங்கள் பேசி
முடித்து வைப்பதாகக் கூறி
காவல் நிலையத்தில் இருந்து
நண்பரை அவரது வீட்டிற்கு
அழைத்துவந்தனர்.

அனைவரையும் அமைதியான
சூழலில் உட்கார வைத்து
பஞ்சாயத்து பேசி முடித்தார்கள்.

திருமணம் செய்து கொடுத்த
இடத்தின் வசதி வாய்ப்பு பற்றி
பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மூன்று பெண்களையும்
சமமாகத்தான் நடத்த வேண்டும்.

முதல் இரண்டு மகள்களுக்கும்
"Arrears" ஆக அரை அரைகிலோ
எடையில் தங்கநகையை
முகவர் கொடுக்க வேண்டும்.

இப்படித் தான் உறவினர்கள்
ஆலோசனை வழங்கினார்கள்.

நண்பருக்கு மூத்த மகள்களுக்கு
arrears கொடுப்பதை தவிர
வேறு வழியில்லாமல் போயிற்று.

பெற்ற குழந்தைகளிடத்தில்
ஏற்றத்தாழ்வு காட்டவே கூடாது
என்பதை உணர்த்த
நண்பருக்கு குடும்பத்தார்
கொடுத்த தண்டனையானது
சிறிது கூடுதல்தான்.

இருந்தாலும் அது
தேவையானதுதான்.

நமக்கும் இது
நல்லதொரு பாடம் தான்.

முகவர்களே ...
நீங்கள் செல்லும்
வாய்ப்பாளர்களின் வீடுகளில்
உடன் பிறந்த சகோதரர்கள்
இருப்பார்கள்.

ஒரு சில வீடுகளில்
ஒன்றுக்கு மேற்பட்ட
எண்ணிக்கையில்
குழந்தைகள் இருப்பார்கள்.

இந்த சூழ்நிலைகளில்
ஒவ்வொருவருக்கும்
சமமான காப்புத்தொகை
குறித்து பேசுவதே நல்லது.

ஒருவருக்கு வழங்கி
மற்றவருக்கு வழங்காமல்
விடுவது பெருந்தவறு.

நமது கவனக்குறைவான
ஆலோசனையால்
குடும்பத்திற்குள் குழப்பம்
ஏற்படாமல் இருப்பதை
உறுதி செய்து
கொள்ளவேண்டும் .

முகவர்கள் மிகுந்த
முன்னெச்சரிக்கையுடனும்
விவேகத்துடனும்
நடந்துகொள்ள வேண்டும்.

நான் சொல்வது சரிதானே
முகவ நண்பர்களே!

No comments:

Post a Comment