Saturday, 5 May 2018

உறுதி கொண்ட நெஞ்சினாய்

உடலில் ஊனம் இருந்தவர்களை
உடல் ஊனமுற்றோர் என்று
அழைத்துவந்தோம்.

அது ஒரு குறையை
சுட்டிக்காட்டுவதுபோல்
இருந்ததால் அவர்களை

மாற்றுத்திறனாளிகள் என்று
அழைத்து வரத்தொடங்கினோம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில்
அவர்களை
People of Determination
என்று குறிப்பிடுகிறார்கள்.

மன உறுதிகொண்ட மக்கள்
என்று கூறும்போது
நமக்குள்ளேயே உற்சாகம்
பீரிட்டோடுகிறது.

இந்த சொற்களைப்
பார்த்தாலும் கேட்டாலும்
அவர்கள் உறுதியாக
உற்சாகப்படுவார்கள்.

நமது நாட்டிலும் இப்படி
அழைக்கப்படும் காலம்
அருகில் தெரிகிறது.

No comments:

Post a Comment