Saturday, 5 May 2018

சுவரில் கண்ட சித்திரம்

நான் படித்தது
நெல்லை மாவட்டம்
பாளையங்கோட்டை
தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளியில்
ஆறு ஆண்டுகள்.
தூய சவேரியார் கல்லூரியில்
நான்காண்டுகள்.

உயர்நிலை பள்ளியையும்
கல்லூரியையும் இணைப்பது
ஹை கிரௌண்ட் சாலை.

அந்த சாலையில் சமீபத்தில்
பயணித்தேன்.

உயர்நிலைப்பள்ளியின்
சுற்றுசுவரும், கல்லூரியின்
சுற்றுசுவரும் மிக அழகாக
பயன்படுத்தப்பட்டுள்ளன.

அரசியல் விளம்பரத்திற்கு
இடம் கொடுத்து
சுவரை அசிங்கப்படுத்தாமல்
பயனுள்ள  உற்சாகமூட்டும்
வாசகங்கள்  கொட்டை
எழுத்துக்களில் எழுதி
வைக்கப்பட்டுள்ளன.

பஸ்ஸில் சென்றாலும்
காரில் சென்றாலும்
நன்றாக படிக்ககூடிய அளவுக்கு
கொட்டை எழுத்துக்கள்.

பிற கல்வி நிறுவனங்களும்
இந்த வழியை பின்பற்றலாம்.

வேறு சில ஊர்களிலும்
சுற்றுச்சுவரில் இது போன்று
பார்த்திருக்கிறேன்.

கல்லூரி உயர்நிலைப்பள்ளி
சுற்றுச்சுவர்களில்
எழுதி வைக்கப்பட்டிருந்த
வாசகங்களில்
நான் ரசித்த பல வரிகளை
நீங்களும் ரசிக்கலாம்.

1.அறவுரை என்பது ஒளி!
கண்டித்தாலும்
தண்டித்தாலும்
நல்வாழ்வுக்கு வழி.

2.உளி தொடும் முன்பே
வலி என அழுதால்
சிலையாக முடியுமா?

3.சிந்தித்தபின் முடிவெடு.
முடிவெடுத்தபின்
சிந்திக்காதே
செயல்படுத்து.

4.ஆணாய் பிறந்தால்
அருமை.
பெண்ணாய் பிறந்தால்
பெருமை.

5.கீழ் படியாதவரால்
தலைமை தாங்க முடியாது.

6.பணம் ....
ஒரு நல்ல பணியாள்.
ஆனால் மோசமான முதலாளி.

7.உண்மையை விட
பரபரப்பானது பொய்.

8.ஏழைகளின் வாழ்க்கை
அரியதொரு நூலகம்.

9.அறியாமையே துன்பத்தின் காரணி.

10.உழவு மாடு உள்ளூரிலேயே
விலை போகும்.

11.வெற்றி ....
அது  வியர்வையின்
விளைச்சல்.

12.எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள்.
காலம் குறைவாகவே உள்ளது.

13.கண்டிக்கும் ஆசிரியர்
கண்டிப்பாக கரையேற்றி விடுவார்.

14.தோல்வி என்பது தள்ளிபோடப்பட்டிருக்கும்
வெற்றி தான்.

15.ஒரு நூலகம்
திறக்கப்படும்போது
ஆயிரம் சிறைச்சாலைகள்
மூடப்படுகின்றன.

16.சான்றோர் குற்றத்தை வெறுப்பார்கள்
குற்றவாளிகளை அல்ல.

17.சங்கடமில்லா வாழ்க்கையும்
சதுரமான முட்டையும்
சாத்தியமற்றவை.

18.நேரத்தை நீ வீணாக்கினால்
நேரம் உன் வாழ்வை வீணாக்கும்.

19.மரத்தை வளர்த்திடுவோம்.
சுகத்தை காத்திடுவோம்.

20.கவலையை விட மிகவும் கொடியது
சந்தேகம் தான்.

21.சிக்கனம் சிறந்ததொரு வருமானம்.

22.கர்வம் உள்ளவர் கடவுளையே
இழந்து நிற்பார்.

23.நேசிப்போம் நம் மண்ணை.
அவளும் நமக்கோர் அன்னையே.

24.ஆசைகளை விட்டவரே
ஆண்டவனை தொட்டவர்.

25.அன்பான நண்பனை
ஆபத்து நேரத்தில் அறிக.

No comments:

Post a Comment