Tuesday, 13 August 2019

பரியின் பரிவு...பாசம்



அருமை நண்பர் திரு பரிமேலழகன் என்னுடைய கல்லூரித் தோழர்..


பரிவானவர். பாசமானவர்.. நெல்லை வண்ணாரப்பேட்டையில் கடந்தவாரம் அவர் இல்லத்திற்கு சென்றிருந்தபோது பாச மழை பொழிந்தார். 

அவரது வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் பலா மரத்தில் காய்த்த, பலாப்பழம் ஒன்றை பரிவுடனும் பாசத்துடனும் எங்களுக்குத் தந்து மகிழ்ந்தார்.

சகோதரி  சௌந்தரியும்  அதை மகிழ்ச்சியுடன் எடுத்துத்தந்து எங்களை மகிழ்வித்தார்.

திருவரங்கத்திற்கு எடுத்துவந்த அந்த பழம்,  நான் நன்றாக  பழுத்துவிட்டேன்நற்செய்தியை நறுமணம் மூலம் இன்று வெளிப்படுத்தியது.

பழைய செய்தித்தாளை தரையில் விரித்து கத்தியோடும், வட்டகையில் நல்லெண்ணையுடனும்  தரையில்  சம்மணம் போட்டு அமர்ந்து
பழத்தை அழகாக வெட்டி,  சுளைகளைத் தனியாக பிரித்தெடுத்தேன்.

இருபது சுவையான சுளைகள்  எங்களுக்குக் கிடைத்தனஅந்த பழத்துண்டுகளை  சுவைத்தபோதுபலாப்பழத்தின் இன் சுவை 
எங்களுக்குத்  தெரியவில்லை.  பரி யின் பாசம் தான்  ஒரு தனிச்சுவையாக எனக்குத் தெரிந்தது.  

பலாக் கொட்டைகள்  தங்களை நாங்கள்  அவிக்கப் போகிறோம்  என்ற தகவல் அறியாமல்  சிரித்துக்கொண்டிருக்கின்றன.


அடுத்த ஆண்டின் மே மாதத்தை  ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 

1 comment:

  1. அந்த பலாமரம் கடந்த ஒரு மாதத்திற்குள் முழுவதுமாக பட்டுப்போய்விட்டது.
    பாசத்தோடு 18 ஆண்டுகளாக வளர்த்த மரம்.இந்த பலாச்சுழையின் இனிப்பும் ருசியும் இனி இல்லை.

    ReplyDelete