Tuesday, 13 August 2019

தந்தையர் நாள்..




இன்று தந்தையர் நாளாம்..

இன்று மட்டுமா நினைக்கப்படவேண்டியவன் நீ..

என்றென்றும் போற்றப்பட வேண்டியவன் நீ..

என்னை  கருவாக்கியவன் நீ. உருவாக்கியவன் நீ.

படிக்க வைத்தவன் நீ. உச்சத்தை பிடிக்க வைத்தவன் நீ.

கட்டிப் பிடித்து வளர்த்தவன் நீ. தட்டிக் கொடுத்து உயர்த்தியவன் நீ.

தன்னை வருத்தி என்னை ஆக்கியவன் நீ..

பிறருக்காக உழைத்து ஓடாகியவன் நீ.

கடன் வாங்கக்கூடாது என்று எனக்குக்  கற்பித்தவன் நீ.

என்றென்றும் என் நினைவில் வந்து கொண்டிருப்பவன் நீ.

எனக்கு வழிகாட்டிய மெழுகுவர்த்தி நீ..

உன் மகிழ்ச்சியை விட என் மகிழ்ச்சிக்காக  கடைசி வரை பாடுபட்டவன் நீ.

எனக்காக உருகிக் கரைந்த உத்தமன் நீ...

என் வளர்ச்சியை ஓரளவு பார்த்து மகிழ்ந்தவன் நீ..

என் குழந்தைகளின் மழலைச் சொற்களை கேட்டு மகிழ்ந்த நீ அவர்களின் வளர்ச்சியைபி பார்த்து மகிழத் தவறியவன் நீ ..

உன் சிம்மக்குரல் என் காதுகளில் மட்டுமல்ல..  உன்னை அறிந்த அனைவரின் காதுகளிலும் நன்றாக கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.

நான் இசக்கிராஜன்  என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதைவிட பானா வின் பையன் என்று அறிமுகப் படுத்தும்போது தான் எனது ஃபுல் உடம்பும்  புல்லரிக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது.

இப்போது போல் எப்போதும் என்னையும்  என் குடும்பத்தையும் நீ தான் காத்தருளவேண்டும்.

கண்ணீருடன் உன்னை நினைத்து வணங்கி உருகுகிறேன்.

-பாளை ப.இசக்கிராஜன் 

No comments:

Post a Comment