Tuesday, 13 August 2019

கிஸ்தி


GST  என்றால் கிஸ்தி யா? 

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே ஆங்கில தட்டச்சு பயிற்சி பெற பாளை அம்பாள் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் சென்று படித்து வந்தேன்.  ஆனால் தமிழில் தட்டச்சு பயிற்சி பெற காலா காலத்தில் பயிற்சி நிலையம் எதற்கும் சென்று படிக்கவில்லை. 

ஆனாலும் கட்டுரைகளையும், என் எண்ணங்களையும், தமிழில் தட்டச்சு செய்ய ஆசை.  கூகிள் தமிழ் டைப்பிங் வசதி மூலம் நான் எழுத வேண்டிய தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டி தட்டச்சு செய்வேன். 

அது தமிழ் சொற்களாக மாற்றிக் காட்டும். தட்டச்சு செய்த ஆங்கில எழுத்துக்களுக்கு பொருந்தி வரக் கூடிய தமிழ் சொற்களை வரிசையாகக் காட்டும். சரியான சொல்லை  நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  அநேகமாக முதலில் தோன்றும் சொல் சரியாக வரும். 

எடுத்துக்காட்டாக, NAAN என்று தட்டினால், நான், நாண், னான், நாம், நானே, என்று நான்கு சொற்களைக் காட்டும். அவற்றுள் முதலாவது காட்டியுள்ள நான் என்பதை தேர்ந்தெடுப்பேன். 

நான் GST பற்றிய தகவல்களை கட்டுரைகளாக எழுதி வருகிறேன். அதற்காககூகிள் தமிழ் டைப்பில்ஆங்கில எழுத்து கொண்டு தட்டச்சு செய்கிறேன. GST என்ற மூன்றெழுத்துச் சொல்லை இடைவெளி இல்லாமல் தட்டச்சு செய்யும் போது தமிழில் “கிஸ்தி  என்ற சொல் வருகிறது.

கூகிள் கூட தெரிந்து வைத்திருக்கிறது.... வெள்ளைக்காரன் வசூலித்தகிஸ்திபோன்றது தான் நமது புதிய “GST” என்று. 

சபாஷ் GOOGLE .

பாளை . இசக்கிராஜன். 



No comments:

Post a Comment