இசக்கி: அண்ணாச்சி எல்ஐசி தொடங்கி 61 வருடங்கள் முடிந்துவிட்டன. எல்ஐசி தொடங்கியது பற்றி கொஞ்சம் விபரமாக சொல்லுங்க அண்ணாச்சி.
ஆறுமுகம்: சொன்னால் போச்சு.1956 ம்வருடம் செப்டம்பர் முதல்நாள். மும்பையில் உள்ள
ஓரியண்டல் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள
கூட்ட அரங்கில் ஐ.சி.எஸ் அதிகாரியான திரு எச்.எம்.பட்டேல் அவர்கள்
தலைமையில் 15 நபர்களால்
எல்ஐசி ஆப் இந்தியா என்ற மாபெரும் நிறுவனத்தின் துவக்க விழா வைபவம் எளிமையாக நடத்தப்பட்டது.
இசக்கி: ஆரவாரம்எல்லாம் இல்லாமல் எளிமையாகவா விழா நடத்தப்பட்டது?
ஆறுமுகம்: ஆம். எளிமையாகத்தான் நடைபெற்றது.
மைய அலுவலகம்
மும்பையில் என
தீர்மானிக்கப்பட்டது.
முதலில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட
வரைவில் நான்கு மண்டலங்கள் என கூறப்பட்டிருந்தது.
ஆனால் இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் நிர்வாக வசதிக்காக ஐந்து மண்டலங்கள் என திருத்தியமைத்தார்கள்.
இதன்படி தில்லியை தலைமையிடமாகக்கொண்டு
வடக்கு மண்டலம்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு மேற்குமண்டலம்.
சென்னையை தலைமையகமாகக்கொண்டு தென் மண்டலம்.
கொல்கத்தாவை தலைமையிடமாகக்கொண்டு கிழக்கு மண்டலம்.
கான்பூரை தலைமையிடமாகக்கொண்டு
மத்திய மண்டலம்.
இப்படியாக ஐந்து மண்டலங்கள் அமைக்கப்பட்டன.
இசக்கி: அண்ணாச்சி கோட்ட அலுவலகம் கிளை அலுவலகம் எப்படி அமைக்கப்பட்டன?
ஆறுமுகம்: சொல்கிறேன்..
24 கிளைகளுடன் 4 கோட்டங்கள் வடக்கு மண்டலத்தில்.
37 கிளைகளுடன் 8 கோட்டங்கள்
மேற்கு மண்டலத்தில்.
43 கிளைகளுடன் 8 கோட்டங்கள்
தெற்கு மண்டலத்தில்.
47 கிளைகளுடன் 8 கோட்டங்கள்
கிழக்கு மண்டலத்தில்.
29 கிளைகளுடன் 5 கோட்டங்கள்
மத்திய மண்டலத்தில்.
ஆக மொத்தம் 5 மண்டலங்களில்
33 கோட்டங்களுக்குக்கீழ் 180 கிளை அலுவலங்கள்.
அதற்குப்பிறகு நிர்வாக மேம்பாட்டிற்காக தென் மண்டலம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஆந்திராவிற்கும் கர்நாடகாவிற்கு மென ஹைதராபாத்தில் தென்மத்திய மண்டலம் என்ற பெயரில் ஆறாவதாக ஒரு மண்டலம் ஜூன் 1990ல் உதயமானது.
1992ல் மத்திய மண்டலம் இரண்டாகப்பிரிக்கப்பட்டு
மத்திய மண்டலத்திற்கு போபாலை
தலமையிடமாக வைத்துக்கொண்டு புதிதாக வடக்கு மத்திய மண்டலம் என்ற
ஏழாவது மண்டலம் கான்பூரை தலைமையிடமாகக்கொண்டு
துவங்கப்பட்டது.
2007 செப்டம்பரில் கிழக்கு
மண்டலம் இரண்டாகப்பிரிக்கப்பட்டு
கிழக்கு மத்திய மண்டலம்
பாட்னாவை
தலைமையிடமாகக்கொண்டு
எட்டாவது மண்டலமாக
செயல்படத் தொடங்கியது.
இப்போது தென்மண்டலம்
தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கியதாகும்.
இசக்கி: அண்ணாச்சி ..நம்ம தெற்கு மண்டலம் பற்றி கூடுதல் விளக்கத்தோடு சொல்லுங்க.
2.
இசக்கி: அண்ணாச்சி போன வேலை நல்லபடியாக முடிந்ததா?
ஆறுமுகம்.: முடிந்தது தம்பி.
இசக்கி: தென்மண்டலத்தை பற்றி
நல்ல விளக்கமாக சொல்லுங்க அண்ணாச்சி.
ஆறுமுகம்: சொல்கிறேன் தம்பி.
1956 செப்டம்பர் முதல் நாள் துவங்கிய தென்மண்டத்திற்கு
சென்னை தான் தலைமையிடம்.
அப்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்னாடகா மாநிலங்களின் பகுதி முழுமைக்கும் தென்மண்டலந்தான்.
ஆந்திராவில் ஹைதராபாத், மசூலிபட்டணம் என இரண்டு கோட்டங்கள்.
கர்னாடகாவில் பெங்களூர், உடுப்பி என இரண்டு
கோட்டங்கள்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை,மதுரை என மூன்று கோட்டங்கள்.
கேரளத்தில் திருவனந்தபுரத்தில் ஒரு கோட்டம்.
ஆக மொத்தம் 8 கோட்டங்கள்.
இசக்கி: கேரளா முழுவதற்கும்
திருவனந்த புரம் மட்டும் தானா?
ஆறுமுகம்: அப்படி இல்லை.. கேரளத்தின் தென்பகுதி திருவனந்தபுரம் கோட்டமாக இருந்தது.
வடபகுதி கோவைக்கோட்டத்தின் ஓர் அங்கமாக இருந்தது..
இசக்கி: மாநிலங்களை பொறுத்து கோட்டங்கள் அப்போது இல்லையா?
ஆறுமுகம்: இல்லை. ஆந்திராவின்
நெல்லூர் மற்றும் சித்தூர் மாவட்டப்பகுதிகள் சென்னைக்கோட்டத்துடன் இருந்தன.
கர்னாடகத்தின் ரெய்ச்சூர் மற்றும் குல்பர்கா மாவட்டங்கள் ஹைதராபாத் கோட்டத்துடன் இருந்தன.
இசக்கி: துவக்க காலத்தில்
அப்போதைய மண்டல எல்கைக்குள்
எங்கெல்லாம் கிளைகள் இருந்தன.
ஆறுமுகம்: தமிழ்நாட்டில் சென்னையில் ஆறு நகரக்கிளைகள் , வேலூர்,
திருச்சி, தஞ்சாவூர்,நாகப்பட்டினம், காரைக்குடி,மதுரை,திருநெல்வேலி,தூத்துக்குடி,கோயம்புத்தூர்,ஈரோடு மற்றும் சேலம்.
கேரளத்தில்
திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு என
மண்டலத்தில் 21 இடங்களில் கிளை அலுவலகங்கள் இருந்தன.
கரூர், திண்டுக்கல், நாகர்கோவில்,ஊட்டி,
தர்மபுரி,
கண்ணூர்,திருச்சூர் என 7 இடங்களில் சப்ஆஃபீஸ்கள்
இருந்தன.
முதலில் தமிழ்நாட்டில் இருந்த மூன்று கோட்டங்களில் மதுரையிலிருந்து பிரித்து தஞ்சாவூர் கோட்டம் துவங்கப்பட்டது.
அதன் பின்னர் திருவனந்தபுரத்திலிருந்து பிரிக்கப்பட்டு எர்ணாகுளம் கோட்டமும்,
கோவையிலிருந்து பிரிக்கப்பட்டு கோழிக்கோடு கோட்டமும்
சென்னையிலிருந்து பிரிக்கப்பட்டு
வேலூர் கோட்டமும்,
சென்னை இரண்டு கோட்டமும்,
கோவையிலிருந்து பிரிக்கப்பட்டு
சேலம் கோட்டமும்,
மதுரையிலிருந்து பிரிக்கப்பட்டு
திருநெல்வேலி கோட்டமும்,
திருவனந்தபுரத்திலிருந்து கொஞ்சமும் எர்ணாகுளத்திலிருந்து கொஞ்சமும் பிரிக்கப்பட்டு கோட்டயம் கோட்டமும்,
எர்ணாகுளத்திலிருந்து பிரிக்கப்பட்டு திருச்சூர் கோட்டமும்
உருவாக்கப்பட்டன.
இசக்கி: இப்போது தென்மண்டலத்தில் எத்தனை கோட்டங்கள், கிளை அலுவலகங்கள் உள்ளன அண்ணாச்சி.
ஆறுமுகம்: இப்போது தமிழ்நாட்டில் எட்டு கோட்டங்கள்
கேரளத்தில் ஐந்துகோட்டங்கள் என ஆக மொத்தம் 13 கோட்டங்கள், 261 கிளைகள் , 260 துணைக்கிளைகள், 198 மினி அலுவலங்கள் என்று வளர்ந்திருக்கிறது.
261 கிளைகளில் 137 கிளைகள் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன.
தேசியமயமாக்கத்தின் போது
யுனைட்டட் இந்தியா நிறுவனத்தால் கட்டப்பட்டு வந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க பதினான்கு மாடிக்கட்டடம் எல்ஐசியின் சொத்தாகமாறியது.
சென்னை, கோவை, திருச்சியில் யுனைட்டட் இந்தியா நிறுவனங்களிடமிருந்து வந்த கட்டி டங்கள் , சென்னை பாம்பே மியூச்சுவல் கட்டிடம், அண்ணாசாலை இந்தியன் மியூச்சுவல் கட்டிடம்,
பாரத் இன்ஷ்யூரன்ஸ் கட்டிடம்,
மதுரை ஓரியண்டல்
எல்லாம் நமது நிறுவனத்திற்கு கிடைத்தவை.
தூத்துக்குடியிலும் நெல்லையிலும் இப்போது கட்டிடம் கட்டப்பட்டுள்ள இடம்
பாரதமாதா நிறுவனத்திடமிருந்தும்
திருநெல்வேலி டயோசிசன் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்தும்
கிடைத்தவை.
இசக்கி: ஆறுமுகம் அண்ணாச்சி நிறைய தகவல் சொல்லியிருக்கீங்க. மிக்க நன்றி.
No comments:
Post a Comment