Thursday, 21 September 2017

ஆதார்..என்னோட சிக்கல் எனக்கு

"ஏல..எசக்கி..
இந்த வேகாத வெயில்ல
எங்கல போயிட்டுவார"

"சொடலைக்கு
என்னவே கவலை.

நீரு  வச்சிருக்க
மொபைல்லாம்
ஏர்செல்..ஏர்டெல்
ஜியோ.
எதாவது  ஒரு
கடையில போய்
ஆதார்நம்பரை சொல்லி
கைரேகைய பதிஞ்சு
ரொம்ப சுளுவா
மொபைல் நம்பரையும்
ஆதார்நம்பரையும்
எணய்க்கிற ஜோலிய
முடிச்சிட்டு வந்துட்டேரு.

எங்களுக்கு அப்படியா?

நான் BSNL ஆபீசுக்கு
இண்ணய்க்கு காலைல
போனேன்.

மதியம் 2-30 க்கு மேல தான்
வரணும்னு சின்னதா
எழுதி ஒட்டிருந்தாவொ.

சரிதாம்னு நானும்
திரும்பி வந்துட்டேன்.
சாப்பாட்டுக்கு மேல
மூணுமணிக்கு போனேன்.

கூட்டமே இல்ல.
ஒரு பெஞ்சுல
ஒக்காந்தேன்.

மொபைல் நம்பர
ஒரு துண்டு சீட்டுல
எழுதி தரச் சொன்னாவொ.

எழுதிக்குடுத்தேன்.
ஒரு அஞ்சு நிமிஷம்
ஒக்காரச்சொன்னாவொ.

பொறவு உள்ள
வரச்சொன்னாவொ.

கம்ப்யூட்டர் பக்கத்துல
ஒக்காந்து என்னோட
மொபைலுக்கு வந்த
ஒரு OTP ஐ பாத்து
சொல்லச்சொன்னாவொ.
நானுஞ்சொன்னேன்.

OTP ஐ பதிஞ்சிட்டு என்னோட
ஆதார் நம்பரையும்
பதிஞ்சாவொ.
பொறவு ஒரு பட்டையில
என்னோட ஒரு விரலை
வைக்கச்சொன்னாவொ.

அது சரியா வரல.
அதனால எல்லா
வெரலோட ரேகையையும்
தனித்தனியா
பொறுமையா பதிஞ்சாவொ.
அந்த மிஷினு எதுக்கும் மசியல.

ரேகையை சரிபாக்கமுடியலன்னு
ஒவ்வொரு தடவையும்
வெளியவந்துட்டு.

அந்த BSNL அம்மா
எதுக்கும் நீங்க
ஆதார்மையத்துல போயி
பிரச்சினையை
சொல்லுங்கன்னு ஒரு
புத்திமதி சொன்னாவொ.

நானும் பொலம்பிக்கிட்டே
வெளியே வந்துட்டேன்.

வெளிய ஒரு கடையில
25 ரூவா கொடுத்தா
இணச்சுதருவாவொன்னு
ஒருத்தரு சொன்னாரு.

அங்கயும் போய் பாத்தாச்சு.

அங்கயும் இதே சிக்கல்தான்.

இந்த கடைக்காரரு
என்ன சொன்னாருன்னா
ஒங்க வீட்டில்இருக்கிற
ரத்தசம்பந்தம் உள்ள
ஒருத்தரை அவரோட ஆதார்
நம்பரோட கூட்டிட்டு வாங்க.
நம்பரை எணைச்சித்தாரேன்னு
ஆறுதல சொன்னாரு.

நாளைக்கு
அந்த கடைக்கு
வீட்டம்மாவை கூட்டிக்கிட்டு
போயி வேலய முடிக்கணும்.

பாத்தேராவே..பிரச்சினை
எப்படில்லாம் வருதுன்னு"

"எசக்கி நீ ஒண்ணை
நல்லா புரிஞ்சிக்கணும்.
நாளைக்கு நீ ஒன்னோட
வீட்டம்மாவை கூட்டிக்கிட்டு போய்
ஆதார் சிக்கலை
முடிச்சிறலாம்.

ஆனா..ஒம்ம கை ரேகை
ஆதார் மையத்துல இருக்க
ரேகையோட
ஒத்து வரலன்னா
அது பெரிய சிக்கல்லா?

வேற எங்கயாவது இத மாதிரி
பரிசோதிச்சுப்பாத்துட்டு
ஒம்ம ஆதார் நம்பர்ல உள்ள
எசக்கி நீ இல்லண்ணு
சொல்லிட்டா என்னடே
பண்ணப்போற..

அதை யேசிச்சு பாரு.

நந்தன் நில்கேனில இருந்து
எல்லாரும்
இதைமாதிரி ஒரு திட்டம்
ஒலகத்துலயே இல்லண்ணு பீத்தினானுவொள
அவொல்லாம்  ஒன்னோட
இந்த சிக்கலுக்கு என்ன தீர்வு
சொல்லப்போறாவொ.

ஓம்பேர்ல ஏற்கனவே
ஒரு ஆதார் நம்பர் இருக்கு.

இப்போ ஒன்னோட ரேகை
ஆதார் ரேகையோட
ஒத்துப்போவலை.
அதுனால நீ புதுசா போய்
வேற ஒரு ஆதார்
நம்பர் வாங்கிக்கலாம்லா.

அப்படின்னா அதைவச்சு
இன்னொரு PAN வேங்கலாம்லா.

அந்த புது அட்டைய வச்சு
புதுசா பேங்க் கணக்கும்
தொடங்கலாம்லா..

அப்போ  இது எப்படி
தப்பே பண்ணமுடியாத
ஒழுங்கான திட்டமாவும்.

ஒன்னோட கைரேகை
ஆதார்மையத்துல
அழிஞ்சி போயிருக்கலாம்னா
கருவிழி பிம்பமும்
அழிஞ்சிருக்குமுல்லா?.

நான் நேத்து கூட
ஒருத்தங்கிட்ட
ஆதார் இப்பிடியாக்கும்
அப்பிடியாக்கும்னு நல்லா
அளந்துவிட்டேன்.

கொலை நடந்த எடத்திலியும்
திருடுபோன எடத்திலியும்
கெடைய்க்கக் கூடிய
ரேகையை எடுத்து வந்து
ஆதார்ல உள்ள ரேகையோட
ஒத்துப்பாத்து குத்தவாளியை
கண்டுபிடிச்சிருவாவொன்னு
பெருமையா சொன்னேன்.

நீ என்னடான்னா ஓன் ரேகை
ஆதார் ரேகையோட
ஒத்துப்போகலங்குற.

எப்பிடில...இப்பிடி" ன்னு
சேக்காளி கேட்டான்.
எசக்கியோட இந்த  சிக்கலை
சரிபண்ண யாராவது
நல்ல யோசனை ஒண்ணு
சொல்லுங்களேன்.

ஒங்களுக்கு பெரிய
புண்ணியமா போவும்..

No comments:

Post a Comment