"ஏல எசக்கி
நல்லாயிருக்கியால?."
"சேக்காளி சொடலை
இருக்கயில எனக்கு
என்னவே கவலை"
"ஆமா..
நம்ம ஜீப் ட்ரைவர்
ராமசாமி மவன்
மணிகண்டன்
கல்யாணத்துக்கு
நீ போனயால"
"நான் போகாமலா...
எப்பிடி வே போவாம
இருக்க முடியும்.
நம்ம எல்லாரு வீட்டு
விசேஷத்திலியும்
கூப்புட்டாலும்
கூப்புடாட்டாலும்
முன்னால நிய்க்கக்கூடிய
ஆளுள்ளா அவரு.
நானும் வீட்டுக்காரியும்
போயிருந்தோம்.
சேலத்துலயிருந்து
மதுரையிலயிருந்து
தஞ்சாவூர்ல இருந்துல்லாம்
ஆஃபீஸ் காரவொ
நெறைய பேரு
வந்திருந்தாவொ."
"சாப்பாடுல்லாம்
எப்பிடில
இருந்துச்சு"
"சாப்பாடுல்லாம்
பிரமாதமா இருந்துச்சுவே.
தவசுப்பிள்ளை
நம்ம பாலு அண்ணாச்சி
ஏற்பாடாம்..
சமயலுக்கு மட்டும்
தவசுப்பிள்ளைக்கு
இருபதாயிரம்னு பேசி
முடிச்சாவொளாம்.
மளிகைசாமாம்லாம்
ஏர்வாடிலயிருந்து
மொத்தமா வாங்கிட்டு
வந்து ராமசாமி
கொடுத்துட்டாராம்.
காய்கறில்லாம்
செல்லப்பா மூலமா
நயினார்குளம் சந்தைக்கு
காலையில நாலுமணிக்கே
நாலஞ்சு பேரோட
வண்டியில போயி
ராமசாமி வாங்கிட்டு
வந்து போட்டுட்டாறாம்.
எந்த தட்டுப்பாடும்
எந்த குத்தம் கொறையும்
இல்லாம நல்லபடியா
தயாரிச்சு பரிமாறி
முடிச்சிட்டாவொளாம்."
"ஏல எசக்கி ...நீ
இத சொல்லும்போது
மெட்றாஸ்ல நடந்த
கல்யாணம் ஒண்ணு
என்னோட
ஞாவகத்துக்கு வந்து
தொலையுதுல.
எனக்கு வேண்டியவரு
ஒருத்தரோட வீட்டுல
ஒரு கல்யாணம்.
மவண்ட் ரோட்டுக்கு
பக்கத்துல இருக்க
ராணிமெய்யம்மைன்னு
ஒரு ஏ.சி மண்டவத்துல
வச்சு கல்யாணம்.
பெரிய மண்டவம்.
வாடகையே நாலு லச்சம்னு
சொன்னாவொ.
கரண்டு சார்ஜுல்லாம்
தனி.
சாப்பாடுக்கு தனியா
காண்ட்ராக்டு
விட்டுட்டாவொ.
மொதநாள் ராத்திரி
சாப்பாட்டுக்கு எலைக்கு
நாநூறு ரூவா கணக்காம்.
கல்யாணத்தன்னக்கி
காலை டிபனுக்கு
முன்னூறுரூவாயாம்.
மத்தியானச்சாப்பாட்டுக்கு
எலைக்கு நாநூறு ரூவாயாம்.
ஒரு ஐநூறு அறுநூறு
பேரைத்தான் நம்ம ஆளு
கூப்பிட்டிருந்தாரு.
நெறையபேரை
கூப்புடாமலே விட்டுட்டாரு.
அதுவேற பெரிய
ஆவலாதியாயிட்டுன்னு
ஒருநாளு ஏங்கிட்ட
சொன்னாரு.
அவரு கூப்புட்டிருந்த
ஒருத்தரு நம்மூரு
முப்புடாதி..
அவரு மெட்றாசுக்கு புதுசு.
நம்மூரு மாதிரி
கல்யாணத்துக்கு
மொதநாளும்
மறுநாளும் போவாட்டா
கோவப்படப்போறவொன்னு
நெனச்சிருக்காரு.
அதுனால
முந்துன நாளு ராத்திரி
அவரு மட்டும் போய்
சாப்பிட்டிருக்காரு.
கல்யாணத்தன்னிக்கு
மத்தியானமும்
பெஞ்சாதியோடவும்
பத்து வயசு மவனோடயும்
போய் சாப்பிட்டிருக்காரு.
கலயாணம்லாம்
முடிஞ்சபொறவு
ஒருநாள் நம்மாளு
வாக்கிங்போவும்போது
ரெண்டுதடவ சாப்புட்ட
முப்பிடாதியை
பாத்திருக்காரு.
பாத்த ஒடனயே
அவருகிட்ட போயி
ஏம்யா...
ஒருத்தன் கல்யாணத்துக்கு
ஆசையா கூப்புட்டா
எத்தனை தடவைய்யா
வருவியொ..?
எத்தன பேரு
வருவியொ?
சாப்பாட்டுக்கு
ஒரு எலைக்கு
எவ்வளவுன்னு
ஒமக்கு தெரியுமா?ன்னு
எரிஞ்சு விளுந்துருக்காரு.
துண்டை காணும்
துணியக்காணும்னு
அந்த முப்பிடாதி
ஓடியே போயிட்டாரு."
"என்னடே சொடல
இப்பிடிச்சொல்லுத.
அந்த ஆளு வீட்டு
கல்யாணத்துக்கு
முப்பிடாதி போயிருக்கவே
கூடாது வே.
எதுக்கு போவணும்
எதுக்கு அவமானப்படணும்"
"ஏல எசக்கி..
ஒனக்கு புரிஞ்சது
இவ்வளவுதாம்ல.
ஏஞ்சேக்காளி
அவரு மனசுல
தோணுனதை
அப்புடியே நேர்ல
சொல்லிப்புட்டாரு.
வெளிய சொல்லாம
எத்தனபேரு
மனசுக்குள்ளயே வச்சு
ஏசிக்கிட்டு
இருப்பானுவொன்னு
ஒனக்கு தெரியல.."
"யோவ் சொடல..
இதுமூலமா
ஏங்கிட்ட என்னய்யா
சொல்ல வாரேரு"
ராமசாமி மாதிரி
மொத்தமா
சாமான்வாங்கிப்போட்டு
தனியா சமையல் பண்ணுத
வீட்டுக்கல்யாணத்துக்கு
எத்தன தடவைன்னாலும்
துணிஞ்சு போவலாம்.
பள்ளிக்கூடம் போற
புள்ளைகளுக்கு
பொட்டலம் கட்டியும்
கைல வேங்கிட்டு வரலாம்
போவாட்டாத்தான் குத்தம்
சொல்லுவாவொ..
மெட்றாஸ்ல நடந்த மாதிரி
எலை கணக்கு உள்ள
கல்யாணத்துக்கெல்லாம்
ஒரு ஆளு மட்டும்
ஒருதடவை மட்டும்
போறதுதான் நமக்கு
மரியாதை.
இதைத்தாம்ல நான்
சொல்ல வாரேன்."
"ஆமய்யா சொடல..
நீரு சொல்லுத
எல்லாமே
எப்பவுமே
சரிதாம்யா.
சொடல சொல்லுக்கு
அப்பீலே கெடையாதுவே"
No comments:
Post a Comment