Tuesday, 26 September 2017

சவாலே..சமாளி


"ஏல ..எசக்கி..
எங்கல வெரசலா
போயிட்டிருக்க.
செத்த ஒக்காருல"

"ஒக்காருதம்யா
ஒக்காருதம்.

ஆனா நீரு
காலையிலேயே
ஏழரை எதையும்
இளுக்கக்கூடாது"

"சரிதாம்ல..
ரொம்பத்தான் பிகு
பண்ணாத"

"சரி ..ஒக்காந்து
தொலைய்க்கம்யா.
வெசயத்தை சொல்லித்
தொலையும்.
ஒம்மத்தான்
எல்லாரும் பெரிய
மேனேஜருங்கானுவள.
எதாவது சொல்லும் நான்
கேட்டுத்தொலையுதேன்."

" எங்காபீசுல ஒரு
செல்லக் கிறுக்கன்
இருக்காம்ல.

அவனுக்கு காலையில
எப்ப ஃபோன்
பண்ணுனாலும்
ஒண்ணு
சுவிச் ஆஃப் ன்னு வரும்.

இல்லன்னா தொடர்பு
எல்லைக்கு வெளிய
இருக்காருன்னு வரும்.

அவனை புடிக்கவே
முடியாதுவே"

"நீரு எப்பவாது
அவனை மொபைல்ல கூப்பிட்டு
என்னை லேண்ட்லைன்ல
இருந்து திருப்பிக் கூப்புடுன்னு
சொல்லியிருப்பேரு.

அதுக்குதான்
அவன் ஒம்மகிட்ட
எதுக்கு வம்புன்னு
மொபைலயே ஆஃப்
பண்ணிவைச்சிருப்பான்.

அவன் எந்த ஊர்ல 
இருக்காம்னு செக் பண்ண
அப்பிடி சொல்லியிருப்பேரு.

அவன் ஒமக்கு
டிமிக்கி குடுக்க இப்பிடி
பண்ணியிருப்பான்"

" நான் அவன நேர்ல
பாத்ததும் ஏம்யா இப்பிடி
பண்ணுனேருன்னு
கேட்டதுக்கு ஒரு பதிலு
சொன்னாம்பாரு ..
நான் அசந்துட்டேன்."

"அப்பிடி என்ன
ஊர்ல இல்லாத
பதிலை சொன்னான்."

"அவஞ்சொன்னான்...

சார்வாள்..
மொபைல  ராத்திரி
சார்ஜ்ல போட்டா
ஃபுல் சார்ஜ்
ஆனபொறொவும்
ப்ளக் ஆன்லயே இருக்கும்.

அது பேட்ரிக்கு
நல்லதுயில்ல.

அதனால் காலையில
எளுந்திருச்சதும்
மொபைல ஆஃப் பண்ணிட்டு
சார்ஜ்ல போடுவேன்.

ஃபுல் சார்ஜ் ஆனதும்
சார்ஜர்லயிருந்து
உருவிட்டு மொபல ஆன்
பண்ணுவேன்.

நீரு மொபைல்ல
கூப்பிட்டப்பொ
இதனாலதான்
சுவிச் ஆஃப்னு குரல்
வந்திருக்கும்.

நீரு 
உடுத்தியிருக்க 
வேட்டியவே
நம்பமாட்டேரு.
பொறவு எப்படி வே
மத்த ஆளுங்களை
நம்பப்போறேருன்னு
சாமர்த்தியமா
சொல்லிட்டான்.

நான் அப்பிடியே
அசந்து போயிட்டேன்."

"யோவ் ..சொடல..

ஒம்ம ஆளு
உண்மையிலேய
கில்லாடிதாம்யா.

ஒம்மோட
ஒபத்திரவத்திலிருந்து
தப்பிக்க ஒரு நல்ல
காரணத்தை
சொன்னாம்பாரும்.

அவம்லாம் அரசியல்ல
இருக்கவேணடிய ஆளு.
அரசியல்ல
இருந்தாமுன்னா
அடிச்சு
நொறுக்கிருவான்"

"ஒம்ம ஒருத்தன்
இளிச்சவாயனாக்குன
கதையை சொல்லிட்டேரு.
இவன்  பரவாயில்லவே.
என்ன ஒரு பய
கேணயனா ஆக்குன
கதை ஒண்ணு
ஏங்கிட்ட இருக்கு.
அதச் சொல்லுதேன்
நல்லா கேளும்."

" எசக்கி ஓம் மயினி
என்னை கூப்புடுத
சத்தம் கேக்கு.

இப்போ பொயிட்டு
வாரேன்.
நாளைக்கு
நிதானமா சொல்லுடே"

No comments:

Post a Comment