5-9-1872ல்
ஓட்டப்பிடாரத்தில்
வந்துதித்த
வள்ளியப்பன்
உலகநாதன்
சிதம்பரம் பிள்ளை.
இந்திய நாட்டின்
விடுதலைப்போராட்டத்தில்
வீட்டை விற்று
நாட்டைக்காக்க
போராடியவர்.
கப்பலோட்டிய தமிழன்
என்ற பெயரும்
செக்கிழுத்த செம்மல்
என்ற பெருமையும்
இவருக்கு உண்டு.
நோட்டைக்காக்க சிறைக்குச்
செல்லும் காலம் இது.
ஓட்டைகளை பயன்படுத்தி
வெளியே வரும் காலம் இது.
இவரோ நாட்டைக்காக்க
தன்னை வருத்தி
சிறைச்சாலை
சென்றவர்.
சிறையில் வசதிகள் கேட்காமல்
செக்கிழுத்து செம்மையாகப்
போராடியவர்.
இவரது தியாகத்தைப்பற்றி
போராட்ட குணம் பற்றி
போராடிய விதம் பற்றி
தற்போதைய தலைமுறைக்கு
எடுத்துச் சொல்ல தவறிவிட்டோம்.
ஒரு சில இடங்களில்
அரசாங்கத்தின்
பெயர்ப்பலகைகளிலேயே
வ.உ.சி என்ற பெயர்
வா.ஊ.சி என்று
எழுதப்பட்டுளதைக்கண்டு
கண்ணீர் விட்டிருக்கிறேன்.
மறக்கக்கூடாத
மாபெரும் தலைவர் இவர்.
இவரது பிறந்தநாளில்
இவரைப்போற்றி
வணங்கி மகிழ்கிறேன்.
No comments:
Post a Comment