யோவ். சொடலை....
எங்கவே போய்
தொலஞ்சேரு.
ஒம்ம பாக்காம
எப்பிடி பொசமுட்டிடு
வந்தேமுன்னு
தெரியுமா?
அப்பிடியால...
எனக்கும்
எசக்கியபாக்காம
கண்ணெல்லாம்
பூத்துபோச்சுடே.
நீயுந்தான் கேரளா
பொயிட்டு வந்த...
எதாவது
வெஷயம் இருக்காடே..
ஆமவே..இருக்கு..
நான் ட்ரெயின்லதான்
போனேன்.
ரிசர்வேஷன்லாம்
பண்ணிதாம்யா
போனேன்.
நம்ம கவர்மெண்டு
பேப்பர் டிக்கட்டுல்லாம்
வேண்டாம் னு சொன்னதால
SMS ஐயெல்லாம்
பதுனமா பாதுகாத்து
வச்சிருந்தம்யா.
என்னோட
ஆதார் அட்டையை
கையில் கொண்டாந்தா
கசங்கிப்போகும்.
நம்ம கவர்மெண்டு
"டிஜிலாக்"ன்னு
ஒண்ணு ரிலீஸ் பண்ணியிருக்காவொள்ளா.
அதுல ஆதார் வெவரத்தை
எணச்சு மொபைல்ல
வச்சிருந்தேன்.
செக்கிங்கிட்ட
அதைகாமிக்கலாம்னு
நெனச்சேன்.
செக்கிங்கும் வந்தாரு.
எஸ்எம்எஸ்ல வந்த
சீட்டு நம்பரை
சொன்னேன்.
அடையாள அட்டையை
கேட்டாரு.
மொபைல்ல இருக்க
டிஜிலாக்கை
தொறந்து காமிக்கலாம்னுட்டு
மொபைல எடுத்தேன்.
செக்கிங் ஏங்கிட்ட
அதையெல்லாம்
ஏத்துக்கமுடியாது.
வேற எதாவது அட்டைதான்
வேணும்னு கேட்டாரு.
நான் மொபைல்ல உள்ளது
மோடி சர்க்காரு பாதுகாப்பா
வச்சுக்கிட சொன்னதுதாம்.
இது அசல் தாம்னு சொன்னதயெல்லாம்
அவருடைய காது கொடுத்து
கேக்கவேயில்லை.
பக்கத்துல இருந்த
ரெண்டு மூணு
கரைவேட்டிக்காரங்க வேற
செக்கிங்கிக்கு சப்போர்ட்டா வந்துட்டாங்கொ.
நானும் மணிபாஸ்ல
தேடிப்பாத்து பிஞ்சுபோன
பதினஞ்சுவருஷத்துக்கு
முன்னால வாங்குன
ஓட்டர் அடையாள
அட்டைய காமிச்சதும்
செக்கிங் என்னப்பாத்து
இத மொதல்லியே காமிச்சிருக்கலாம்லா ன்னு
கோபமா சொன்னாரு.
கரைவேட்டிக்காரங்க வேற
என்னைப்பாத்து
நீரெல்லாம் படிச்ச
ஆளாவே ன்னு
ஏச ஆரம்பிச்சாட்டங்க.
இதெல்லாம் கேட்டதும்
எனக்கும் ரோஷம்
பொத்திட்டு வந்துட்டு.
செக்கிங்கோட பேர
அவரு கோட்ல இருந்த
பட்டைய பாத்து
"முப்புடாதி"ன்னு
குறிச்சு வச்சேன்.
இதை விடக்கூடாது.
நாளைக்கே புகார் மெயில் அனுப்பனும்னு நெனச்சுட்டே
ரயில்ல படுத்து
தூங்கிட்டேன்.
ஊருக்கு திரும்பி
வந்துட்டாலும்
இன்னும் அந்த
புகாரை அனுப்பல..
ஒடனே அனுப்பணும்ணு
சேக்காளி சொடலைகிட்ட
சொன்னேன்.
அதுக்கு சொடலை
என்னப்பாத்து
"ஏல எசக்கி..
ஆகஸ்டு அஞ்சாந்தேதி
ஏங்கிட்டவந்து
நீ என்ன சொன்னன்னு
கொஞ்சம் யோசிச்சு பாருல.
வருசத்துக்கு ஒருதட
ஆகஸ்டுமாசம் ஆரம்பத்துல
ஒங்க ஆபீசுக்கு போய்
நீ உசுரோடத்தான்
இருக்கேன்னு வாங்கவேண்டிய
ஒரு பேப்பர்ல ஒரு ஆளுகிட்ட
கையெழுத்து வேங்கிவந்து
மெயில்ல அனுப்பிவச்ச.
அஞ்சு நிமிசத்தில ஒனக்கு
பதில் மெயிலும் வந்துச்சு.
என்னண்ணு...
அந்த பேப்பர தபால்ல அனுப்பிவையும்னு.
நீ என்ன சொன்ன..
சாதாரண தபால்ல
அஞ்சு ரூபா ஸ்டாம்பு ஒட்டி
பொட்டியில போட்டா
போய்ச்சேருமான்னு
யாருக்கும் தெரியாது..
அதனால
போவதுக்கு எம்பது
வர்றதுக்கு எம்பதுன்னு
ஆட்டோவுக்கு
தெண்டம் அழணும்.
அம்பதுரூபா கொடுத்து
கூரியர்ல அனுப்பணும்னு
சொல்லி மூக்கால அழுத.
அப்பொல்லாம்
புகார் அனுப்பணும்னு
ஒனக்கு தோணல.
ரயில்வேன்னா
ஒரு நியாயம்
ஒங்க ஆபீசுன்னா
வேற நியாயமால" ன்னு
கேட்டாரு.
ட்ரெயின்ல வச்சு
செக்கிங் முப்புடாதி
கேட்டது கூட
இப்போ பெருசா
தெரியல.
ஆனா இந்த சொடல
கேட்டானே ஒரு கேள்வி..
அதுதான்
என்னை செருப்பால
அடிச்சமாதிரி இருக்கு..
இப்பொ புரிந்து போச்சு..
டிஜட்டல் இந்தியாங்கிற
அருமையான திட்டம்
யாரும் சரியா
வெளக்கிச்சொல்லாததால
வெத்துக்கூச்சலாவே
இருக்கு..
அது வெற்றிக் கூச்சலா
மாறணும்னா மொதல்ல
எல்லா ஆபீசிலும்
இதப்பத்தி வெளக்கிச்சொல்லணும்.
அவொளும் அத ஏத்துக்கணும்.
சரிதான நாஞ்சொல்லுதது
No comments:
Post a Comment