"யோவ் ..சொடல..
நாளக்கிதானே
பாப்பும்னு சொன்னேரு..
அதுக்குள்ள இன்னய்க்கே
வந்துட்டேரு."
"ஆமல..எசக்கி..
ஒன்னை ஒரு ஆளு
கேணயனா
ஆக்கிட்டாரு ன்னு
சொன்னல்லா.
அந்த கதையை
தெரிஞ்சக்கணும்னுதான்
வீட்டம்மாவுக்கு
டேக்கா குடுத்துட்டு வந்தேன்.
என்னை ஒருத்தன்
இளிச்சவாயனா
ஆக்குனாம்னு
சொன்னவொடனே
ஒனக்கு சிரிப்பாணி
அள்ளிக்கிட்டு
போச்சுல்லா.
அதை மாதிரி நானும்
ஒன்னப்பாத்து
சிரிக்கவேண்டாமால.
அதுதான் அவசரமா
ஓடியாந்தேன்."
"யோவ் என்னோட
கதையும் ஒரு
போன் கதைதாம்யா."
"அப்புடியா?..
சொல்லும்...
சொல்லும்..."
" நான் நெதமும் காலைல
எல்லா மேனஜருகிட்டயும்
லேண்ட்லைன்ல
பேசுவேன்.
எல்லாரும்
பேசுவாவொ.
அவங்க
அன்னைய்க்கு
என்னல்லாம்
பண்ணப்போறோம்னு
சொல்லுவாவொ.
ஒருத்தருக்கு மட்டும்
வீட்டு நம்பருக்கு
போன் போட்டா
ஆபீசை சுத்தம் பண்ற
பையன் எடுப்பாரு.
மேனஜரைக்கேட்டா
அவரு
இன்னம் வரலன்னு
சொல்வாரு.
அவரு வாக்கிங் கீக்கிங்
போயிருப்பாரு..
அதனாலதான் இன்னம்
வரலன்னு சொல்லுதாரோ
என்னவோ ன்னு நான்
நெனச்சுக்கிட்டேன்.
இந்த பையன் தனியா
இருக்கிற அவருடைய
வீட்டை தூத்து
தண்ணி கோரி வைக்க
போயிருப்பாருன்னு
நெனச்சுக்கிட்டேன்.
தெனமும்
இதே மாதிரி
அந்த பையன்
சொன்னதுனால
ஏ... நீ நான் கூப்பிட்டதை
அவரு வந்ததும்
அவருகிட்ட
சொன்னியான்னு கேட்டேன்.
இல்லய்யா. ....சொல்லல..
நான் ஏழு மணிக்கு வந்து
ஏஞ்சோலியெல்லாம் முடிச்சிட்டு
ஒம்பதரைக்குல்லாம் வூட்டுக்கு
போயிருவேன் னு சொன்னான்.
இவ்வள நேரம்
அவருடைய வீட்டுல
வேலை யிருக்கான்னு
கேட்டதுக்கு
அந்த பையன்
ஆபீசு ரெண்டு மாடில்லா.
அவ்வள நேரம்
ஆயிரும்னு சொன்னான்.
அவனிடம் நீ இப்ப எங்க இருக்கன்னு கேட்டதுக்கு ஆபீசுலன்னு சொன்னான்.
ஏ..நான் அவருடைய வீட்டு நம்பர்லல்லா
கூப்புட்டேன் னு சொன்னதுக்கு
இல்லய சார் நீங்க நெதமும் காலைல இந்த
ஆபீசு நம்பருக்கு தான் கூப்புடுவிய.
நானும் பேசுவேன்னு சொன்னான்.
இல்லியப்பா
நான் வீட்டு நம்பர்ல லா கூப்பிட்டேன்னு சொல்லிட்டு
கட் பண்ணிட்டேன்.
ஒரு வேளை
நாமதான் தப்பா
கூப்புட்டுட்டமோன்னு
நெனச்சுக்கிட்டு
நம்பரை சரி பார்த்துட்டு
ஆபீஸ் நம்பரை
கூப்புட்டேன்.
இப்பவும் அந்த
பையந்தான் எடுத்தான்.
எனக்கு
ஒண்ணும்புரியல.
பொறவு வெசாரிச்சு பாத்ததுல
அந்த ஆளு வீட்டு நம்பர்ல
கால் டைவர்ட் வசதி மூலமாக
ஆபீசு நம்பருக்கு மாத்திவிட்டு
என்னோட போன்லயிருந்து
தப்பிச்சுட்டே வந்திருக்காரு"
"ஏல ..எசக்கி...
நீ சரியான
கேணயந்தாம்ல.
ஒன்ன ரொம்ப
சுளுவால்லா
ஏமாத்தியிருக்காரு
மெட்ராஸ் காரரு.
புது மாதிரியால்லா
இருக்கு.
எப்பிடில இந்தமாதிரி
யோசிக்காங்க"
ஒரு புது வசதி வந்தா
எப்படி பயன்படுத்தலாம் னு
நெனைய்க்காம
அதை எப்படி தவறா பயன்படுத்தலாம்னு
சில பேரு
நெனய்க்கானுவொ
No comments:
Post a Comment