பாளையங்கோட்டை
தூய சவேரியார் கல்லூரியின்
முன்னாள் மாணவன் என்று
சொல்லிக்கொள்வதில்
எனக்கு ஒரு செருக்கு
எப்போதுமே உண்டு.
முன்னாள் மாணவர் மன்றத்தில்
இணைத்துக் கொள்ளவேண்டும்
என்ற ஆசை நீண்டநாட்களாக
மனதை அரித்துக்கொண்டிருந்தது.
பணி நிமித்தம்
பல ஊர்களுக்கு
மாறிச்சென்றதால் நேரம்
தள்ளிப்போய்க்கொண்டே
இருந்தது.
என் கல்லூரி நண்பர்
திரு தி.க.சி.சேதுராமலிங்கமும்
வகுப்புத்தோழன் சண்முகவேலாயுதமும்
மன்றத்தின் சிறப்பான
நடவடிக்கைகளைப்பற்றி
பேசி என் ஆசையை
தூண்டிவிட்டனர்.
கல்லூரி வளாகத்தில்
முன்பு கேண்டீன்
செயல்பட்ட இடத்தில்
இப்போது செயல்படும்
மன்ற அலுவலகத்திற்கு
கடந்தவாரம் சென்று
விண்ணப்பத்தை
முழுமையாக்கி
செயலாளர் பெரியவர்
SBI யின் ஓய்வூதியர்
திரு முத்துகிருஷ்ணன்
அவர்களிடம் ஆயுள்
உறுப்பினராக பணம்
செலுத்தி என்னை
இணைத்துக்கொண்டேன்.
மன்றத்தின் சிறப்பான
செயல்பாடுகள் பற்றி
செயலாளர் அவர்கள்
விரிவாக எடுத்துரைத்தார்கள்.
மகிழ்ச்சியாய் இருந்தது.
கல்லூரி நிர்வாகத்தினரால்
இலவசமாக அனுமதிக்கப்பட்டுள்ள
இடத்தில் மன்ற அலுவலகம்
செயல்பஎட்டு வருகிறது.
அந்த இடத்திலேயே
ஒரு மருத்துவ சேவை மையம்
"நீதிபதி ஜோசப்
நோய்காணும் மையம்"
என்ற பெயரில்
19-3-2009 முதல்
செயல்பட்டு வருவதை
பெருமையுடன் கூறினார்.
தொழில்நுட்ப நிபுணர்கள்
மற்றும் மருத்துவர்கள்
அடங்கிய குழு
பணியாற்றிவருகிறது.
சக்திவாய்ந்த நவீன
தானியங்கிகருவிகள்
நிறுவப்பட்டுள்ளன.
இந்த மையத்திற்கான
தரச்சான்றிதழ்
வேலூர் கிறித்துவ மருத்துவக்கல்லூரியால்
வழங்கப்பட்டுள்ளது.
கல்லாரியின்
முன்னாள், இந்நாள்
மாணவர்கள்,
ஆசிரியப்பெருமக்கள்
பொதுமக்கள் ,
குறிப்பாக அடித்தட்டு மக்கள்
பயன் பெறவேண்டும் என்ற
உயரிய நோக்கத்தில்
இந்த மையம் அமைக்கப்பட்டு
வெற்றிகரமாகவும்
செயல்பட்டுவருகிறது.
இங்கு வசூலிக்கப்படும்
கட்டணம் மிக மிகக்குறைவு.
எடுத்துக்காட்டாக
சிறுநீரில் சர்க்கரை அளவு
பார்க்க வெறும் பத்துரூபாய்தான்.
இரத்தத்தில்சர்க்கரை அளவு
பார்க்கவும் பத்து ரூபாய் தான்.
தனித்தனியாக குறைந்த
எண்ணிக்கை பரிசோதனைகள்
போதும் என்றால்
6 வகை பரிசோதனைக்கான
LIPID PROFILE க்கு
ரூபாய் 150 மட்டுமே.
10 வகை பரிசோதனை கொண்ட
LIVER FUNCTION TEST
ரூபாய் 200 மட்டுமே.
13 வகை பரிசோதனை கொண்ட
சிறுநீர் பகுப்பிற்கு
ரூபாய் 100 மட்டுமே.
ECG க்கான கட்டணம்
ரூபாய் நூறு மட்டுமே.
ECG உட்பட 42 வகை
பரிசோதனைகளை உள்ளடக்கிய
முழு உடல் பரிசோதனைக்கு
சலுகைக்கட்டணமாக
ஐநூறு ரூபாய்தான்.
மருத்துவர் ஒருவரின்
ஆலோசனையும் சேர்த்தே
வழங்கப்படுகிறது.
முன்னாள் மாணவர்மன்றத்தால்
இப்படி ஒரு சமூக அக்கறை கொண்ட
சேவை வெற்றிகரமாக
நடத்தப்படுவது அறிந்து
மனம் குதூகலிக்கிறது.
நானும் என் மனைவியும்
இரண்டு நாட்களுக்கு முன்
முழுப்பரிசோதனை
செய்து மருத்துவரின்
ஆலோசனையையும்
பெற்று வந்தோம்.
வேறு ஊர்களில்
இப்படி ஒரு சேவை
முன்னாள் மாணவர் மன்றத்தால் நடத்தப்படுகிறதா என்று
எனக்குத் தெரியவில்லை.
இப்படி நடத்தினால்
முதியோர்களும்
அடித்தட்டு மக்களும்
நல்ல பயனடைவர்.
இந்த பாளையங்கோட்டை
"தூய சவேரியார் கல்லூரி
முன்னாள் மாணவர்
மன்றத்திற்கு" ஒரு பெரிய
சிரம் தாழ்ந்தவணக்கத்தை
காணிக்கையாக்குகிறேன்.
திருநெல்வேலி
மாநகர வாசிகள் இதன்
மூலம் பயன் பெற்றிட
வேண்டிக்கொள்கிறேன்.
வேறு நகர வாசிகள்
இதைப்போன்ற ஒரு
அமைப்பை தங்கள்
நகரத்தில் ஏற்படுத்த
வேண்டுகிறேன்.
நான் ஒரு சவேரியன்
என்பதில் பெருமை..
இல்லை இல்லை..
கர்வம் கொள்கிறேன்.
No comments:
Post a Comment