Monday, 4 September 2017

நடமாடும் தெய்வம்

நடமாடும் தெய்வம்
*********************************

இன்றையநாள்
செப்டம்பர் ஐந்தாம் நாள்.

அனைவரும் போற்றும்
ஆசிரியர் நாள்.

இந்த புனித நாளில்
என்னை வளர்த்தவர்களை
வழி நடத்தியவர்களை
ஒளிகாட்டியவர்களை
நினைத்துப்பார்க்கிறேன்.

திண்ணைப்பள்ளிக்கூட ஆசிரியர்
திரு குப்பாம்பிள்ளை...

மேலப்பாட்டம்
அரிஹர ஐயர் துவக்கப்பள்ளி
ஆசிரியர்
திரு அழகியநம்பி..

மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே
ஐந்தாம்வகுப்பு பாடத்தை
டியூஷன் எடுத்த கொட்டாரம்
நாட்டன் சார்...

அந்தோணி ஸ்கூலின்
திரு தம்புராஜ் சார்..

தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளியின்
வகுப்பாசிரியர்
திரு சுப்பிரமணிய ஐயர் சார்...

இவரோடு
திருவாளர்கள்
அந்தோணிமுத்துசார்,
ஆபரணம் சார்,
பால்சாமிசார்,
அந்தோணிநாயகம் சார்,
செல்லச்சாமி சார்,
ராஜா சார்,
பாலசுப்பிரமணியம் சார்,
ராமானுஜம் சார்,
ராமனாதன் சார்,
லோகாச்சாரி சார்,
பீட்டர்ஃபிடலிஸ் சார், 
தனம்சார்,
மறைதிரு லூர்துராஜ் அடிகளார்,
லூயி பிலிப் அடிகளார்
இன்றைக்கும் என் நெஞ்சில்
நீக்கமற வாழ்கிறார்கள்.

கல்லூரி ஆசிரியர்களில்
திருவாளர்கள்
இன்பராஜ் சார்,
முத்துசாமி சார்,
எம்எஸ் ஆரோக்கியசாமி சார் ,
P.ஆரோக்கியசாமி சார்,
ஈசா சார்,
கனகசபாபதி சார்,
வைரவநாதன் சார்,
பெனடிக்ட் சார்,
இன்றைக்கும் என்
நினைவில் நிற்கிறார்கள்.

எல்ஐசியில் இணைந்தவுடன் அலுவலகத்தில்
என்னை ஆதரித்து
பணி கற்றுக்கொடுத்த
திருவாளர்கள்
சிவராமன் சார்,
வெங்கடசுப்பையா சார்,
தியாகராஜன்சார்,
Sp.வரதராஜன்சார்,
ஓம்சுப்பையாசார்,
ருக்மாங்கதன் சார்,
செல்லப்பா சார்,
மாத்யூ சார்
ஜோசப் சாக்கோ சார்
குரு நிலையில் இருந்து
எனக்கு நல்லவண்ணம்
ஒளிகாட்டினார்கள்.

திருவாளர்கள்
கே.வைத்யநாதன்சார்,
பி.எம்.நடராஜன் சார்,
நரசிம்மன்சார்,
மேனுவல்ராஜ் சார்,
கல்யாணசுந்தரம் சார்,
V.வைத்யநாதன் சார்,
ஸ்ரீதர் சார்,
மணிவண்ணன் சார்,
சந்திரசேகர்சார்,
வி.ஜே.சிங் சார்,
சாமிநாதன் சார்,
பெஹரா சார்,
ஆர்ஆர் நாயர்சார்,
தாமோதரன்சார்,
குமார்சார்,
ஷர்மாசார்,
டி.டி.சிங் சார்
போன்றவர்கள்
குருநிலையில் இருந்து
எனக்கு நல்வழி
காட்டினார்கள்.

வளர்த்த அத்தனை
குரு மார்களையும்
ஆசிரியர் நாளில்
நினைத்து அவர்கள்
இருக்கும் திசை நோக்கி
வணங்கி நன்றிபாராட்டி
பெருமை கொள்கிறேன்.

No comments:

Post a Comment