Monday, 7 August 2017

இது இன்னொரு விளம்பரம் ...


திருச்சி மாநகரத்திலே
ஒரு பகழ்பெற்ற
இனிப்பு பலகாரக்கடை..

பல கிளைகள்
உள்ளூரில் உள்ளன.

ஒரு சில கடைகள்
அருகிலுள்ள
ஒரு சில ஊர்களில் வைத்துள்ளனர்.

ஏற்கனவே
அந்த கடைக்கு
ஒரு மிக நல்ல பெயர்
உள்ளது.

இருந்தாலும்
போட்டிக்கடைகளின்
அழுத்தத்தை சமாளிக்க

விளம்பரத்திற்காக
மிகவும் கூடுதலாக
செலவளிக்கிறார்கள்.

இது சரியான முயற்சிதான்.

அந்த நிறுவனம்
தேர்ந்தெடுத்துள்ள
பல முறைகளில்
தொலைக்காட்சி மூலம்
செய்யும் விளம்பரமும்
ஒன்று.

அந்த விளம்பரத்தையும்
மிகவும் புகழ்பெற்ற
ஒரு தொலைக்காட்சிமூலம்
செய்து வருகிறார்கள்.

அந்த குறிப்பிட்ட
தொலைக்காட்சியில்
வாங்கும்  கட்டணம்
வானத்தைத்தொடும்
அளவில் இருக்கும்.

அந்த தொலைக்காட்சியை
நாடுமுழுவதும் பார்ப்பவர்கள்
நிறைய உள்ளனர்.

உண்மையிலேயே
பலன் உறுதியாக உண்டு..

அந்த கடைக்கு கிளைகளே
இல்லாத ஊர்களில்,
நகரங்களில்
இந்த விளம்பரத்தால்
அந்த கடைக்கு என்ன
பெரிய பயன்
கிடைக்கப்போகிறது?

பார்வையாளனான
எனது பார்வையில்
இது பலன் இல்லாத
வீண் செலவாக
தெரிகிறது.

இந்த அனாவசிய
கூடுதல் செலவு
விற்பனை விலையில்
சேர்க்கப்பட்டு
வாங்குபவர்
தலையில் தானே
ஏற்றிவிடப்படும்.

அந்த நிறுவனத்தார்
பல சாதக பாதகங்களையும்
அலசி ஆராய்ந்து தான்
விளம்பர வியூகத்தை
அமைத்திருப்பார்கள்..

இருந்தாலும்
நிறைய செலவில்
பெரிய தொலைக்காட்சியில்
கொடுக்கப்படும்
இந்த பரவலான
விளம்பரத்தால்
அந்த கடைக்கு
பெரிய அளவில்
பலன் கிடைக்குமா
என்பதே என் கேள்வி.

திருச்சி நண்பர்கள்
எப்படி  நினைக்கிறார்களோ?.

No comments:

Post a Comment