எனது மதிப்பிற்கும்
பெரு மரியாதைக்கும் உரியவர்கள்
திரு சோம. வீரப்பன் ஐயா அவர்கள்.
இவர்கள்
"பஞ்சாப் தேசிய வங்கி"யின்
பொதுமேலாளர் நிலையில்
பணிநிறைவு பெற்ற
பண்பாளர்.
2009 லிருந்து
எனக்கு பழக்கம்.
திருவரங்கத்தில்
ஒரே அடுக்ககத்தில்
குடிவந்த 2013 லிருந்து
நட்பும் உறவும்
பலப்பட்டுள்ளன.
"தமிழ் இந்து"
நாளிதழில்
திங்கட்கிழமை தோறும்
இடம்பெற்று வாசகர்களின்
பெறும் வரவேற்பைப்பெற்ற
குறள் இனிது என்ற கட்டுரை
இவர்கள் வடித்தது தான்.
இப்போது வெளிவரும்
சாணக்கிய நீதி பற்றிய
கட்டுரையை வழங்குவதும்
இவர்களது பேனாதான்..
உற்சாகப்பேருரைகளையும்
கல்வி நிறுவனங்களிலும்
தொழில் நிறுவனங்களிலும்
வழங்கிவருகிறார்கள்.
சமீபத்தில் "ராமராஜ் காட்டன்"
நிறுவனத்தில்
ஆயிரத்திற்கும் அதிகமான
ஊழியர்கள் கலந்துகொண்ட
ஆண்டு விழாநிகழ்ச்சியில்
இவர்கள் நடத்திய
உரைவீச்சு ஊழியர்களின்
பலத்த வரவேற்பை பெற்றது.
பல கல்வி நிறுவனங்களில்
வினாடிவினா நிகழ்ச்சிகள்
நடத்தி மாணவர்களின்
மகத்தான வரவேற்பை
பெற்றிருக்கின்றன.
திரைப்பட இயக்குனர்
திரு வசந்த் அவர்களும்,
மேலாண்கலை பயிற்சியாளரும்,
எழுத்தாளரும்,
தொலைக்காட்சிகளில்
பொருளாதாரம் சார்ந்த
விவாதங்களில்
பொருளுடனும்,பொறுப்புடனும்
பொறுமையுடனும்
விவாதிக்கும்
என் நல்ல நண்பர்
திரு சோம.வள்ளியப்பன் அவர்களும்
இவர்களது இளைய
சகோதரர்கள் என்பது
கூடுதல் தகவல்.
இத்தனை பெருமைகள்
பெற்றுள்ள திரு வீரப்பன் ஐயா
அவர்களை அவர்களது
65 ஆவது பிறந்தநாளான இன்று
வாழ்த்தியும் வணங்கியும்
மகிழ்கிறேன்..
பல்லாண்டு வாழ்க
வளமுடனும், நலமுடனும்,
பலமுடனும், புகழுடனும்.
இசக்கிராஜன்.
No comments:
Post a Comment